Friday 9 June 2017

KIRAN BEDIகிரண் பேடி -ஒரு ஹமாம் சோப்பு நேர்மை


KIRAN BEDIகிரண் பேடி -ஒரு ஹமாம் சோப்பு நேர்மை 


கிரண் பேடி (பி. 9 ஜூன் 1949) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், சமூக சேவகரும், ஓய்வு பெற்ற காவலரும் ஆவார். இவர் இந்தியக் காவல் பணியில் 1972ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரியாவார்.[1] இவர் தில்லி, கோவா (மாநிலம்)கோவா மற்றும் மிசோரம் ஆகிய இடங்களில் பணியாற்றி உள்ளார். 1971ஆம் ஆண்டில் ஆசிய பெண்கள் டென்னிசு போட்டியில் வெற்றி பெற்றவர் இவர். 

1993இல் இவர் தில்லி சிறைச்சாலைகளுக்கு பொது ஆய்வாளராக இருந்தபோது திகார் சிறைகளில் இவராற்றிய சீர்திருத்தங்கள் பலரின் பாராட்டைப் பெற்றதோடன்றி[2] 1994ஆம் ஆண்டிற்கான ரமோன் மக்சேசே விருது விருது பெற ஏதுவாய் இருந்தது. 2007ஆம் ஆண்டு இவர் விருப்பப்பணி ஓய்வு பெற்றார்[3] 2011இல் நடந்த இந்திய லஞ்ச ஒழிப்பு இயக்கத்தில் இவர் குறிக்கத்தக்க பங்கு வகித்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் ஜனவரி 2015இல் இணைந்தார்.

2016 ஆம் ஆண்டு மே 29 இல் புதுச்சேரி மாநில லெப்டினென்ட் ஆளுநராகப் பொறுப்பேற்று அப்பதவியில் இருக்கிறார். [4]



இந்தியாவின் முதல் பெண் காவல்துறை அதிகாரியான கிரண் பேடி அவர்களின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களை விவரித்து, அவை எப்படி அவரது வாழ்க்கையைச் சரியான பாதையில் அமைத்துகொள்ள உதவியது என்பதை சித்திரக்கதை பாணியில் விளக்கி இருக்கிறார்கள்.


கதை சுருக்கம்


பிரகாஷ்லால் பேஷ்வாரா, பிரேமலதா பேஷ்வாரா தம்பதியின் நான்கு மகள்களில் ஒருவர் கிரண். அவரது சிறு வயது சம்பவங்கள் அவர் வாழ்க்கையை மாற்ற, வழிநடத்த எவ்வாறு உதவின என்பதை அவருடைய தங்கைகள் இருவர் இணைந்து எழுதியதே இந்தப் புத்தகம்.


அலசல் பார்வை:

கிரணின் சிறுவயது வாழ்க்கையில் நடந்த ஐந்து சம்பவங்கள் இங்கே மிகவும் முக்கியமானதாக அமைகின்றன.

1. தன் தந்தையின் விருப்பத்துக்கு மாறாக, அமிர்தசரஸ் நகரத்திலிருந்து 17 கிலோமீட்ட தொலைவிலிருக்கும் சாக்ரட் ஹார்ட் பள்ளிக்கு, கிரணையும், சகோதரிகளையும் படிக்க அனுப்பினார் கிரணின் தந்தை. ஒவ்வொரு நாளும் அவர் சைக்கிளில் மகள்களை அழைத்து வரும்போது, “தந்தையின் வியர்வைத்துளிகளை வீண்போக விட மாட்டேன்” என்று தனக்குள்ளாகக் கூறிக்கொண்டார் கிரண்.


2. பால் வியாபாரம் செய்பவரின் கணவரை போலீசார் தவறுதலாகக் கைது செய்ய, அப்பெண்மணி கிரணின் வீட்டுக்கு வந்து, அவருடைய தந்தையிடம் முறையிட, அவரும் அப்பெண்ணின் கணவரை விடுதலை செய்ய உதவினார். இச்சம்பவத்தின் பிறகு, “மற்றவர்கள் வீடுதேடி வந்து உதவி கேட்கும்போது, அதைச் செய்யக்கூடிய சூழ்நிலை தனக்கு அமைய வேண்டும்” என்று இறைவனை வேண்டிக்கொண்டார் கிரண்.


3. சிறுவயதில் ஒரு திருமணத்துக்குப் பெற்றோருடன் சென்றபோது, அங்கே குவித்து வைக்கப்பட்டிருந்த வரதட்சணைப் பொருட்களைப் பார்த்து. “ஒவ்வொரு பெண்ணும் திருமணமாகிச் செல்லும்போது, அவர் பெற்றோர் இவ்விதம் மதிப்புள்ள பொருட்களைக் கொடுக்க வேண்டுமா?” என்று கேட்டார். பெற்றோர் ஆமோதிக்க, “எனக்கு இங்கிருக்க பிடிக்கவில்லை” என்று கூறி திருமண மண்டபத்தை விட்டு வந்துவிட்டார்.


அன்றிரவு தன் தாயாருடன் விவாதித்தார். அப்போது அவருடைய தாயார் “என் மகள் கொடுப்பவள். எடுப்பவளாக இருக்க மாட்டாள்” என்று உறுதி கூறிய பிறகே உறங்கச் சென்றார் கிரண்.


4. கிரண் பள்ளியில் படிக்கும்போது அவருக்கு வீட்டுப்பாடத்தில் அறிவியல் தரப்படவில்லை. அவர் கணிதத்தில் திறன் குறைவானவராக இருந்தார் என்று சொன்னார் ஆசிரியர். உடனே தனது பெற்றோர்களிடம் கூறி, உடனடியாக வேறு ஒரு பள்ளிக்கு மாறி, அறிவியலைப் பாடமாகத் தேர்வு செய்து, இரட்டை உயர்வு பெற்றார்.


5. இளம்பருவத்தில் டென்னிஸ் ஆடும்போது, தலைமுடி கண்ணில் பட்டு, விளையாடும்போது இடைஞ்சலாக இருந்ததால், அம்மாவிடம் அனுமதி பெற்று தலைமுடியை வெட்டிக்கொண்டார். ஆனால், கடைக்காரருக்கு ஆண்களுக்கு முடிவெட்ட மட்டுமே தெரிந்து இருந்ததால், அதைப் போலவே வெட்டிவிட்டார்.


அதன்பிறகு பலரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானார் கிரண். ஆனால், இவை எதுவுமே அவரது தன்னம்பிக்கையையோ குறிக்கோளையோ தடுக்கவில்லை. மாறாக ஆசிய டென்னிஸ் சாம்பியனாக அவரை உருவாக்கியது.


இதைத் தவிர அவரது வாழ்வில் நடந்த பல விஷயங்களை மிகவும் சுவையாக, கோவையாகத் தொகுத்து வழங்கி இருக்கிறார்கள். குறிப்பாக, அவர் காவல்துறை அதிகாரி ஆன பிறகு அவரது பேட்டிகளும், அவரது முக்கியமான வழிநடத்துதல்களும் இந்தத் தலைமுறை மட்டுமல்ல, அனைத்துத் தலைமுறையினருமே உணர வேண்டியவை.


பெண் பிள்ளைகளை வளர்க்கும் ஒவ்வொரு பெற்றோரும் படித்து, அவர்களது குழந்தைகளுக்குப் பரிசாகக் கொடுக்க வேண்டிய அருமையான புத்தகம் இது.

இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும் சமூக ஆர்வலருமான கிரண் பேடி (Kiran Bedi) பிறந்த தினம் இன்று (ஜூன் 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:



l மாணவப் பருவத்தில் கவிதை ஒப்பித்தல், நாடகம், விவாத மேடை, பேச்சுப் போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளார். அமிர்தசரஸ் கல்சா மகளிர் கல்லூரியில் விரிவுரையாளராக 2 ஆண்டுகள் பணியாற்றினார்.

l இந்திய காவல் துறையின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக 1972-ல் பணியில் சேர்ந்தார். டேராடூன் அடுத்த மசூரியில் காவல் துறை பயிற்சியைத் தொடங்கினார். அந்த பிரிவில் பயிற்சி பெற்ற 80 பேரில் இவர் ஒருவர்தான் பெண்.


l சிறந்த டென்னிஸ் வீராங்கனையும்கூட. டென்னிஸ் போட்டியில் ஆசிய அளவிலும், தேசிய அளவிலும் ஏராளமான பரிசுகள், பதக்கங்களை வென்றுள்ளார்.


l போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரியாக இருந்தபோது, விதி மீறி நிறுத்தப்பட்டிருந்த பிரதமர் இந்திரா காந்தியின் காரையே கிரேன் வைத்து அப்புறப்படுத்திய அசாத்திய துணிச்சல் படைத்தவர். இவர் பணிபுரிந்த இடங்களில் குற்றங்கள் குறைந்தன. அதனால், பெண்களின் மரியாதை, அன்பைப் பெற்றார்.


l காவல் துறையினருக்கு பல்வேறு வசதிகளைப் பெற்றுத் தந்தார். ஏராளமான சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். தனக்கு வழங்கப்படும் விருதுகளை சகாக்களோடு பகிர்ந்துகொள்ளும் பரந்த மனம் படைத்தவர்.


l 20 ஆண்டுகளுக்கு மேல் காவல் துறையில் மகத்தான சேவையாற்றியுள்ளார். சில குறுக்கீடுகளால், ‘பூலோக நரகம்’ என்று வர்ணிக்கப்பட்ட திஹார் சிறைக்கு பணிமாற்றம் செய்யப் பட்டார். அந்த சிறைச்சாலையையும் ஒரு தவச்சாலையாக மாற்றி சாதனை படைத்தார்.


l சர்வதேச அளவில் பேரும் புகழும் பெற்றார். ஐ.நா. சபையின் சிவிலியன் போலீஸ் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 1979-ல் காவல் துறை வீரப்பதக்கம், போதைப் பொருள் தடுப்பு பணிகளுக்கான நார்வே நாட்டு விருது, பிலிப்பைன்ஸ் நாட்டின் மகசேசே உள்ளிட்ட ஏராளமான விருதுகள், பட்டங்கள், கவுரவங்கள், பரிசுகளைப் பெற்றுள்ளார்.


l போதைப் பொருள் தடுப்பு மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மேம்பாடுகளுக்காக இந்தியா விஷன், நவஜோதி ஆகிய அமைப்புகளை நிறுவியுள்ளார். பல நூல்கள், ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். ‘‘இளமையில் எதற்கும் சமரசம் செய்துகொள்ளாத பண்பையும், மனசாட்சிக்கு எதிரான அநீதியை எதிர்த்துப் போராடவும் கற்றுக்கொண்டேன். அதை இன்றுவரை கடைபிடிக்கிறேன்’’ என்பார்.


l இவரது வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு பல மொழி களில் திரைப்படங்கள், ஆவணப் படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அரசியல், ஊழல் ஒழிப்பு, சமூக மேம்பாடு ஆகிய களங்களில் இன்றும் அதே மிடுக்குடனும் சுறுசுறுப்புடனும் இயங்கி வருகிறார்.



இரு அரசுசாரா அமைப்புகள்[மூலத்தைத் தொகு]
கிரண் பேடி, நலவாழ்வு மற்றும் குற்றத்தடுப்பு காவல் குறித்து 1987ஆம் ஆண்டு நவ்சோதி என்ற அமைப்பையும்[5] சிறை சீர்திருத்தங்கள்,போதைமருந்து தடுப்பு மற்றும் சிறுவர் நலம் குறித்து 1994ஆம் ஆண்டு இந்தியா விஷன் பௌண்டேசன் என்ற அமைப்பையும் [6] நிறுவியுள்ளார்.

எழுதிய ஆங்கில நூல்கள்[மூலத்தைத் தொகு]
நான் துணிந்தவள்
ஊழலை எதிர்த்து
தலைமையும் ஆளுமையும்
இந்திய காவல்துறை
பெண்களுக்கு அதிகாரம்
இது எப்பொழுதும் இயலும்
புரூம் குரூம் [7]



முதல்வர் பதவிக்கு பயிற்சியா? கிரண் பேடியின் நியமனம் பல்வேறு விதமாக பார்க்கப்படுகிறது. அவருக்கு முதல்வர் பதவியில் செயல்படுவது குறித்த "பயிற்சியாக" துணை நிலை ஆளுநர் பதவியை பலரும் பார்க்கின்றனர். அடுத்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் மீண்டும் கிரண் பேடியே பாஜக சார்பில் களம் இறக்கப்படுவார் என்றும், அதற்குள் அவர் நிர்வாக ரீதியான அனுபவத்தையும், நல்ல பெயர்யும் புதுவையில் பெற்று விட்டால் அது டெல்லி தேர்தல் களத்தில் உதவியாக இருக்கும் என்று பாஜக கணக்குப் போடுவதாக கூறுகிறார்கள்.

முதல்வர் போன்ற செயல்பாடுகள் இது உண்மையாக இருக்குமோ என்றுதான் எண்ண வைக்கிறது கிரண் பேடியின் செயல்பாடுகளும். புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தது முதல், ஒரு முதல்வர் போலத்தான் செயல்பட ஆரம்பித்துள்ளார் கிரண்பேடி. முதல்வர் அறிவிக்க வேண்டியதையும், சொல்ல வேண்டியதையும் இவர் அதிகாரிகளுக்குக் கூறி வருகிறார்.
பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

நாராயணசாமி கிரண்பேடி தனது அலுவலகத்தோடும், ராஜ்பவனோடும் முடங்கிப் போகக் கூடியவர் அல்ல என்பதை அவரது அன்றாட செயல்பாடுகள் வெளிப்படுத்துவதால், முதல்வராகப் பதவியேற்கவுள்ள நாராயணசாமிக்கு நிச்சயம் பெரிய சவாலாகவே இருக்கும்
ஆளுநரை சமாளிப்பது.ஆளுநருக்கே "பெரியவர்" பிற மாநில ஆளுநர் பதவி போல அல்ல புதுச்சேரி ஆளுநர் பதவி. இது யூனியன் பிரதேசம் என்பதாலும், மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதாலும் ஆளுநர் பதவிதான் இங்கு பெரியது. ஆளுநரைப் பகைத்துக் கொள்ள முடியாது. அதை விட முக்கியமாக மத்திய அரசை விமர்சிக்க முடியாது.
எந்த முடிவாக இருந்தாலும் மத்திய அரசின ஒப்புதல் தேவை என்று ஏகப்பட்ட லொட்டு லொசுக்குகள் உள்ளன. புதிய ஆட்சியமைக்கவே, மத்திய அரசின் உள்துறையின் அனுமதி பெற்றாக வேண்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதனால்தான் நாராயணசாமி இன்னும் பதவியேற்காமல் உள்ளார்.
சண்டை கண்டிப்பாக இருக்கும் கிரண்பேடி நிச்சயம் அதிரடியாக செயல்படுவார். அதிரடி உத்தரவுகளைப் பிறப்பிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம், டக்கென எளிதில் பணிந்து போகக் கூடியவர் அல்ல நாராயணசாமி. அதிரடியாக செயல்படக் கூடியவரும் கூட. போராடக் கூடியவரும் கூட. எனவே நிச்சயம் புதுச்சேரி அரசியல் களம் படு சூடாகவே இருக்கும் என்று இப்போதே பேச ஆரம்பித்து விட்டார்கள்.

No comments:

Post a Comment