Monday, 12 June 2017

JAHANARA BEGUM மொகலாய மன்னர்களை தாங்கி பிடித்த தூண்



JAHANARA BEGUM மொகலாய மன்னர்களை

தாங்கி பிடித்த தூண்

ஜஹானாரா பேகம் மொகலாய மன்னர்களை தாங்கி பிடித்த தூண் - ஷாஜகானின் மூத்த மகள் . அவுரங்கசீப்பின் சகோதரி
இன்றைக்கு தாஜ்மஹால் எல்லோருக்கும் காதலின் சின்னமாகத்தான் தெரிகிறது.அதுவும் உண்மையாக இருக்கலாம்.ஆனால் தாஜ்மஹால் பற்றிய வரலாற்றுத் தகவல்களை நாம் அறிந்துவைத்திருப்பது என்பது மிக மிக குறைவாகவே இருக்கிறது.

இந்த வரலாற்று தகவல்களை நோக்கும் போது தாஜ்மஹால் காதலின் சின்னமாக இருப்பதற்கு தகுதியானதா..? என எம் உள்ளத்தினில் வினா எழுப்பத் தோன்றுகிறது. ஆகவே தான் தாஜ்மாஹால் தொடர்பாக நான் ரசித்த ஒரு சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

மொகலாய வரலாற்றில் அதிகம் பேசப்பட்ட பெண் மும்தாஜ். உலகெங்கும் தாஜ்மகாலின் வழியாக நினைவுகொள்ளப்படுகிறார். ஆனால், பேசப்படப்படாமல் போன முக்கியமான இரண்டு பெண்கள் இருக்கின்றனர். ஒருவர்... ஷாஜகானின் மூத்த மகளும், திருமணம் 
செய்துகொள்ளாமல் அரசாட்சியில் மன்னருக்குத் துணை நின்றவளும், மிகச் சிறந்த படிப்பாளியும்,சூபி ஞான நெறியைப் பின்பற்றியவளுமான 

ஜஹானாரா பேகம்.இன்னொருவர்... 
ஒளரங்கசீப்பின் மகளும் மெய்யியல் கவிஞருமான ஜெப்உன்நிசா. 

இந்த இரண்டு பெண்களும் சரித்திர வானில் தனித்து ஒளிரும்
இரட்டை நட்சத்திரங்கள். இன்று, தாஜ்மகாலைப் பார்க்கப் போகிறவர்களில் அதிகமானவர்களுக்கு மும்தாஜின் இயற்பெயர்   

அர்சுமந்த் பானு பேகம், அவள் 13 குழந்தைகளின் தாய், தனது 14-வது பிரசவத்தில் இறந்து போனாள் என்பது தெரியும்? 14 பிள்ளைகளைப் பெற்ற மும்தாஜின் நினைவாக, தாஜ்மகால் கட்டப்பட்டு இருக்கிறது என்றால், அதைத் தாய்மையின் சின்னம் என்றோ, சிறந்த மனைவியின் நினைவுச் சின்னம் என்றுதானே நியாயமாக அழைக்க வேண்டும்?





ஜஹானாரா பேகம்,
குரால்னிசா,
தாரா ஷகோ,
முகமது சுல்தான்ஷா,
ரோஷனாரா,
ஒளரங்கசீப்,
உமித்பக்ஷி,
சுரையா பானு,
சுல்தான் முராத்,
கௌஹரா

எனும் மும்தாஜின் பிள்ளைகள் பெயர்கள்கூட தாஜ்மகாலுக்குள் போகிறவர்களுக்குத் தெரியாது என்பதுதானே நிஜம்.

காதலின் சின்னமாக திகலும் தாஜ்மஹாலை ஷாஜகான் தன் மூன்றாவது மனைவியான மும்தாஜுக்கே கட்டினார் என்பது எம்மில் பலருக்குத் தெரியாது. 1612-ம் ஆண்டு மே 10-ம் தேதி இவர்களது திருமணம் நடந்தது. அப்போது, மும்தாஜுக்கு வயது 19.

மும்தாஜ் இறந்துபோனது 1631 ஜுன் 17-ம் தேதி. அப்போது அவளுக்கு வயது 38. அதாவது,19 வருஷ இல்லறத்தில் 14 குழந்தைகளைப் பெற்றிருக்கிறாள். தொடர் பிரசவங்களால் உடல்நலிவுற்றுத்தான் இறந்துபோனாள். பிரசவ வலியில் அவள் விட்ட கண்ணீரும் வேதனைக் குரலும் தாஜ்மகாலுக்குள் கேட்கக்கூடுமா என்ன? தனி மனிதர்களின் துயரமும் வலியும் காலத்தின் முன்பு பெரிதாகக் கருதப்படுவதே இல்லை.காலம் எல்லாவற்றையும் உருமாற்றிவிடுகிறது. அவளது மரணத்தின்போது ஜஹானாராவுக்கு வயது 17. மனைவியை இழந்து துக்கத்தில் வாடிய தந்தைக்கு உறுதுணையாக இருந்தாள் ஜஹானாரா.
தனிமையிலும் வேதனையிலும் ஷாஜகான் வாடிய காரணத்தால், அரசு நிர்வாகம் செயலற்றுப் போயிருந்தது. அதைச் சரிசெய்யத் தானே அரசு ஆணைகளை பிறப்பிக்கவும், அரசரின் ஆலோசனையின் பெயரில்முக்கிய முடிவுகளை எடுக்கவும் துரிதமாகச் செயல்பட்டாள் ஜஹானாரா.

நாட்டின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை ஜஹானாராவுக்கு வழங்கினார் ஷாஜஹான். அது அவரது மற்ற இரண்டு மனைவிக ளுக்கும், ஜஹானாராவின் சொந்த சகோதரிகளுக்கும்கூடப் பொறாமையை ஏற்படுத்தியது.

தந்தையைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, அவள் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதுவும், ஒளரங்கசீப்பால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட தந்தைக்குத் தன்னைத் தவிர வேறு துணை இல்லை என்பதால், தன் வாழ்நாளை அப்பாவின் நலனுக்காகவே செலவழித்திருக்கிறாள்.

மும்தாஜ் இறந்த பிறகு ஜஹானாராவுக்கு ஒரு முக்கியக் கடமை இருந்தது. தனது சகோதரன் தாரா ஷகோவுக்கு நதிரா பானுவோடு நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தை நடத்தியாக வேண்டும். அது,
அம்மாவின் இறுதி ஆசை. எனவே, அதைச் செயல்படுத்த தீவிரமாக முயன்றாள்.

தாராவுக்கும் அவளுக்குமான சகோதர பாசம் அளப்பறியது. அவள், தாரா ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பினாள். அது, ஒளரங்கசீப்புக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. அவளை, தனது நாட்குறிப்பில் 'வெள்ளைப் பாம்பு’ என்று குறிப்பிடுகிறார் ஒளரங்கசீப். அந்தக் கோபம் ஜஹானாரா வைவிட மூன்று வயது இளைய அவளது தங்கை ரோஷனாவுக்கும் இருந்தது. அவள் நேரடியாக ஜஹானாராவிடமே தனது வெறுப்பைக் காட்டினாள். ஒளரங்கசீப்போடு சேர்ந்துகொண்டு ஜஹானாராவின் பதவியைப் பறிக்கச் சதி வலைகளைப் பின்னினாள்.

ஆனால் மன்னரின் விருப்பத்துக்குரிய மகள் என்பதால், ஜஹானாராவின் அதிகாரத்தை எவராலும் பறிக்க முடியவில்லை. ஷாஜஹான் காலகட்டத்தில் அரசின் ஆண்டு வருவாய் 60 லட்ச ரூபாய். ஆனால், செலவோ ஒரு கோடிக்கும் மேல்! ஆகவே, அந்தப் பற்றாக்குறையைச் சரிசெய்வதற்காக ஷாஜஹான் நிறையத் திட்டங்களைத் தீட்டி நாட்டின் வருவாயை ஒன்றரைக் கோடியாக உயர்த்திக் காட்டினார்.
செலவினத்தை மிகவும் குறைத்தார். 

இந்தச் செயல்பாடு காரணமாக அரண்மனையிலேயே அவருக்குக் கடுமையான எதிர்ப்பு உருவாகியிருந்தது. அதைச் சமாளிப்பதுதான் ஜஹானாராவின் முக்கியப் பணியாக இருந்தது.

இன்னொரு பக்கம், ஷாஜகானுக்குப் பிறகு அரியணைக்கு யார் வருவது என்பதில் தாராவுக்கும் ஒளரங்கசீப்புக்கும் கடுமையான பகை வளர்ந்திருந்தது. தாரா பலவீனமானவன். அவனால் ஆட்சி
செய்ய முடியாது என்று ஒளரங்கசீப் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, தனக்கான ஆட்களைத் திரட்டி ஆட்சியைப் பிடிக்கும் ஏற்பாட்டில் இருந்தான். ஆனால், தாராவுக்கே பதவி கிடைக்க வேண்டும்
என்று ஜஹானாரா உறுதியாக இருந்தாள். 

பதவிச் சண்டை குடும்பத்தில்கடும் பூசல்களை உருவாக்கியது.
தாரா, லாகூரின் புகழ்பெற்ற சூபி ஞானியான மையன்மிரின் சீடன். இந்து மதத்துக்கும் இஸ்லாத்துக்கும் இடையே இணக்கத்தை உருவாக்க, இஸ்லாமிய அறிஞர்கள் படிப்பதற்காக உபநிஷத்துகளை, பாரசீக மொழியில் தாரா மொழி பெயர்த்து இருக்கிறார். அவரது சிறந்த நூலான மஜ்மஉல்பஹ்ரெயின் எனும் இரண்டு பெருங்கடல்களின் சங்கமம், சூஃபியிசத்துக்கும் இந்து மதக் கோட்பாடுகளுக்குமான பொதுத் தன்மையைப் பேசுகிறது.

ஸர்மத் என்ற ஞானியையும் பின்பற்றினார் தாரா. ஸர்மத் பிறப்பால் ஒரு யூதர். ஆனால், இஸ்லாம் மதத்தைத் தழுவியவர். அத்துடன் ராம லட்சுமணர்களின் பக்தர். அவரது சீடனாகத் தாரா இருப்பதை ஒளரங்கசீப் ஏற்றுக்கொள்ளவில்லை. அதை மத விரோதச் செயல் என்று கண்டி த்தார். இந்தச் சகோதரச் சண்டைக்கு நடுவில் ஜஹானாரா மாட்டிக்கொ ண்டு தவித்தாள்.

இப்போது உள்ள பழைய தில்லி’ அன்று ஷாஜகானாபாத் என அழைக்கப்பட்டது. அந் த நகரை வடிவமைக்கும்போது ஜஹானாரா ஐந்து முக்கிய இடங்களை தானே முன்னின்று வடிவமைத்துத் தந்தார். அப்படி உருவாக்கப்பட்டதுதான் சாந்தினி சௌக்.

1644 மார்ச் 29-ம் தேதி தாராவின் திருமண ஏற்பாடுகளை செய்து  கொண்டு இருந்தபோது ஜஹானாராவின் மெல்லிய பட்டு மேலாடையில் தீப்பற்றி அவளது தாடையிலும் பின் கழுத்திலும் தீக்காயங்கள் ஏற்பட்டன. அவளது அழகான முகம் சிதைந்துபோனதை ஷாஜகானால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சிகிச்சை செய்யப் பல நாட்டு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். ஆனாலும், இளவரசியின் சிதைந்த முகத்தை முன்பு போல பொலிவுறச் செய்ய முடியவில்லை.

நான்கு மாதங்கள் தொடர் சிகிச்சை நடந்தது. இந்த நாட்களில், தனது மகள் நலம்பெற வேண்டும் என்பதற்காக தினமும் 1,000 வெள்ளி நாணயங்களை ஏழைகளுக்கு தானம் அளித்ததோடு, துறவிகளையும் ஞானிகளையும் வரவழைத்து பிரார்த்தனையும் செய்துவந்தார் ஷாஜகான். பல நாட்கள், மகளின் அருகில் அமர்ந்து வேதனையோடு கண்ணீர்விட்டார் என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.

எட்டு மாதத் தொடர் சிகிச்சை நடந்தது. ஈரானிய மருத்துவரின் முயற்சியால் அவள் குணம் அடைந்தாள் என்றும், ஆங்கில மருத்துவர் ஒருவரின் உதவியால் ஜஹானாரா நலமடைந்தாள் என்றும் இரண்டு விதத் தகவல்கள் கூறப்படுகின்றன. இரண்டையுமே உறுதி செய்யும் ஆதாரங்கள் எதுவும் இல்லை. அவள் நலமடைந்த சந்தோஷத்தில்,
80,000 ரூபாய் தானத்துக்காகச் செலவிடப்பட்டது என்றும், மாமன்னர் தன் மகளுக்கு 139 அரிய வகை முத்துக்களையும் அரிய வைரம் ஒன்றையும் பரிசளித்தார் எனவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல்களோடு சூரத் துறைமுகத்தின் வரி வசூல் முழுவதும்
அவளது வருவாயின் கீழ் கொண்டு வரப்பட்டது என்றொரு துணைத் தகவலும் காணப் படுகிறது.

ஜஹானாரா, தனது தாய் இறந்த பிறகு, அவளது சொத்தில் பாதியை உரிமையாகப் பெற்றிருந்தாள். அந்தப் பணத்தை, டச்சு வணிகர்களுடன் சேர்ந்து கப்பல் வணிகம் செய்தாள் என்றும் மகாஜன் வித்யாதரின் குறிப்பு கூறுகிறது. அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், ஆங்கிலேயருக்கு அவள் வணிகம் செய்ய உதவி இருக்கக்கூடும்.
மன்னரோடு மாளிகையில் வாழாமல் தனியே தனக்கென ஓர் அரண்மனை அமைத்துக்கொண்டு வாழ்ந்தவர் ஜஹானாரா. 

தனிமையில் வாழ்ந்த அழகியான ஜஹானாராவை, யூசுப் என்ற கவிஞன் காதலித்தான். அவளும் அவன் மீது மிகுந்த காதலுடன் இருந்தாள். தந்தையைக் கவனித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்த காரணத்தால், அந்தக் காதல் முறிந்துபோனது என்றொரு கதையும் வரலாற்றில் உலவுகிறது.

1658-ம் ஆண்டில் ஷாஜகான் உடல் நலமற்றுப்போனார். பதவியைக் கைப்பற்ற நான்கு புதல்வர்கள் இடையே கடும் போராட்டம் ஏற்பட்டது. 1659-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி ஒளரங்கசீப்பின் ஆட்கள், தலை வேறு உடல் வேறாக தாராவை வெட்டிக் கொன்றார்கள். 

வயோதிகத்தைக் காரணம் காட்டி ஷாஜகானைச் சிறையில் அடைத்தான் ஒளரங்கசீப். தனிமையும் நோயுமாக தனது வயோதிகக் காலத்தைக் கழித்த ஷாஜகானுக்கு இருந்த ஒரே ஆறுதல் மகள் மட்டுமே. அவள், ஷாஜகானின் இறுதி நாள் வரை உடனிருந்து பராமரித்து வந்தாள். அப்பாவின் மரணத்துக்குப் பிறகு அவள் தனித்துவிடப்பட்டாள். ஒளரங்கசீப்பால் துரத்தப்பட்ட அப்பாவின் மற்ற மனைவிகளையும் அரண்மனைப் பெண்களையும் தனது பொறுப்பில் கவனித்தாள். ஒளரங்கசீப் அவள் மீது இரக்கம்கொண்டு மீண்டும் அவளுக்கு அரண் மனையின் உயரிய பதவியான முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை அளித்தார்.

அதைப் பெரிதாகக் கருதாமல் 16 ஆண்டுகள் அப்பாவின் நினைவில் வாழ்ந்த ஜஹானாரா, 1681-ம் ஆண்டு இறந்துபோனார். அவளுக்கு, நிஜாமுதீன் தர்காவில் கல்லறை அமைக்கப் பட்டது. 

'என்னுடைய கல்லறையை அலங்காரமாக மூட வேண்டாம். அங்கே பசும்புற்கள் முளைத்து என்னை மூடட்டும்’ என்ற அவளது இறுதி வார்த் தைகள் அங்கே பொறிக்கப்பட்டுள்ளன.

Jahanara Begum (1614-1681)




Khurram and ArjumandIn 1614, a daughter was born to a most romantic couple, Khurram, prince of the Moghul Empire, and his wife, Arjumand Banu Begum, the neice of the Moghul Empress, Mehrunnisa, known as Nur Jahan. The girl was a small dissapointment to the Moghul people as she would never be able to succeed to the throne, yet, Khurram and his wife adored their baby girl, and one day she would become the most powerful woman in all of India.

Khurram was born on January 5, 1592 to the Emperor Jahangir and one of his concubines. His family was a hostile one, constantly competing for the throne of the richest kingdom in the world that their father ruled. Before Khurram was coronated as the ruler of the Moghul Empire, he had seen the deaths of his brothers Prince Khusrau, whom Khurram himself had killed because of Khusrau's attempt to unseat Jahangir from the throne, and Prince Shariyar, who was killed under the orders of Khurram's father-in-law, Arjumand's father, Asaf Khan. Arjumand Banu was born in 1598 (some put it at 1593) to Asaf Khan, the wazir to Jahangir, and one of his wives. She most likely grew up in a suitable environment, perhaps even the harems at the palaces, as her aunt was the Empress.

Khurram first met his future wife at a court festival known as the Nine Days' Bazaar. At this nine day festival, the women of the harem may come out of seclusion and mingle with average people (heavily veiled of course). What is unique is that there was a sort of mock bazaar set up. The harem women ran the stalls at the bazaar, selling things such as turbans and chadors and instruments. Khurram met Arjumand at one of these stalls. The Empress Nur Jahan herself was helping the young Arjumand run her little shop and urged her neice to speak to the prince. The two fell in love immediately, and on May 10, 1612, when Arjumand was 14 and Khurram 20, the couple was married, making Arjumand his third wife. 

His two other wives included a Hindu woman and a haughty concubine. Later on he would marry a Christian concubine from Armenia. But everyone knew that Arjumand was his true love.

Arjumand and Khurram celebrated their first child with Huralnissa, a girl born on March 30, 1613. She died when she was only 3, on June 14, 1616. A year after Huralnissa was born, and two years before she died, the couple celebrated their second child, Jahanara, born on April 2, 1614. Following Jahanara came the beloved first boy, Dara, born on March 30, 1615. Next came Shuja, another son, born on July 3, 1616, then another girl, Raushanara, born Spetember 3, 1617, then a boy, Aurangzeb, born November 3, 1618. Afterwards there followed numerous miscarriages by Arjumand.

In 1620, Emperor Jahangir fell seriously ill. Nur Jahan, hoping to seal the family quest for power, married her daughter to one of Jahangir's sons by another queen, Shahryar. She wished for the couple to produce an heir to the throne if Jahangir died, which seemed very likely. 

Jahangir had always feared the Persians to the west, as the Persians feared the Moghuls to the east. With the present disputes in the Moghul courts, the Persians decided to take advantage and captured Qandahar, a Moghul possesion. When the dying Jahangir and Shahryar raised a rebellion against the Persians, Khurram openly denied them his assistance. A family rebellion exploded and he led his armies against his powerful father and Shahryar. However, he was defeated. Instead of being executed or being held for other treasonous acts, Nur Jahan dictated her orders that Khurram should relocate his family. And that Dara and Aurangzeb should be handed over as hostages.

Princess of PrincessesJahanara grew up among splendor in the middle of nowhere. She and her family lived in huge tents, ate and drank from plates and goblets of gold, and wore the most expensive chadors and kameez. The family had relocated to the Nizamshahi Territory in the Deccan, a wasteland and breeding ground for rebels, traitors, and criminals. However, on October 28, 1627, Emperor Jahangir died.

 Khurram took advantage of this opportunity and he and his family and their enormous entourage made their way to the royal compunds in Rajasthan, Fatehpur Sikri. A legend goes that Khurram faked his own death by drinking goat's blood and spitting it up very graphically to not attract attention and fear by other competitors to the throne. Only his closest accomplices, including Arjumand, knew he still lived

Jahanara had to live in despair for a few days thinking that the father she loved was dead. However, when the entourage reached Rajasthan, Khurram lifted himself out of his prye and became the Emperor of the Moghul Empire. He ordered all other competitors to the throne, including Shahryar, executed, had Nur Jahan brought to his palace to live under his surveillance as she was a powerful and ruthless woman, and set about to restore the royal compounds. He became Shah Jahan, "king of the world", Arjumand became Mumtaz Mahal, which can be roughly translated as "crown beauty of the palace", and Jahanara inherited the prestigous title of Begum Sahib, Princess of Princesses. Hence she became one of the most powerful women at court at the age of 14.

Shah Jahan set about to first restore Fatehpur Sikri. He re-did the entire harem apartments, which in itself was its own palace. Jahanara's rooms can still be seen today, though not in the splendor they were fitted to at the time. Rubies, sapphires, emeralds, and diamonds were scattered across the walls of her apartments, creating flowers designs. 

Various jewels were set into the floors and even into her large swimming pool. Niches were carved, setting candles across her rooms. Her rooms would have truly been a wonder, with candlelight shimmering among the rubies and diamonds and emeralds and sapphires, shimmering on the cool pool waters, and across the vast marble and jeweled floors.

Jahanara spent her days in the royal harem, the most protected and secluded places in the land. She spent her nights with her father and mother, painting, writing poems, and helping her father plan reconstructions of other palaces and monuments. 

Jahanara truly was a gifted young woman. She was known to her closest family simply as 'Janni'. She spent her days with all the women of the court, from the lowest concubines to her step-mothers. She had a very good relationship with her brother Dara, who shared her love of the arts, but was hostile towards Raushanara and Aurangzeb, both said to be in league with each other and very devious and disrespectful towards their mother, their father, and even other minorities in the harem, such as the Hindu wife and Christian wife of Jahan.

 Of course the children were schooled, Jahanara included. The were taught by many tutors, including Mumtaz's secretary, Sati-un Nissa, nicknamed Sati. Many lessons were based on the Koran, which captivated Aurangzeb and led him into even more small mindedness towards other minorities and peoples and ideas.

Jahanara spent her teenage years travelling all over the empire, visiting her father's many splendors with the court. The family visited the beautiful palace at Srinagar in Kashmir, where the harem often went for picnics on Silver Island on Lake Dal. And they also toured Jahan's masterpiece, the Red Fort, an ostentatious palace that rivaled any palace they had ever seen. The Nine Days Bazaar, which had simply died in Jahangir's later reign, even made a come back in Jahan's reign, which Jahanara took a part in.

However, tragedy struck the family in 1631. While giving birth to her 14th child, Mumtaz died on June 17. The child lived, the later Gauhara Begum. With the death of the empress, Jahanara became the uncrowned woman figure head next to her father. She took on many responsibilites, including all the responsibilities of operating the harem, from food to clothes to tutoring.

Empress of PrincessesJahanara planned weddings alike. She saw to Dara's betrothal to a begum, Nadira Banu, and planned out the wedding. While attending a garden party in 1644, Jahanara's heavily perfumed kameez, trousers, and pairhan, robes, caught fire. She became seriously sick and Jahan himself nursed his beloved daughter back to health, which took many weeks.

After almost 30 years as the lead woman in the empire, Jahanara took on another duty: to tend to her dying father. When Jahan fell ill, his four sons (Dara, Aurangzeb, Shuja, and Murad) broke into wars against one another to succeed their father. Aurangzeb triumphed. He had Dara and Murad executed and Shuja fled. It is unclear how or where he died. Although Jahan was still living, Auranzgeb declared himself the Emperor and had his father locked up in his palaces in Agra. Jahanara lived with her father for the rest of his life.

While in captivity, Jahan had to watch in seclusion as his most famous masterpiece rose into the sky. The Taj Mahal. It was begun in 1631, and not finished until 1648. Jahanara herself had even helped in its designing. The building was to serve as a tomb for Mumtaz, and later on for Jahan, so they would be with each other eternally. Legend says that Jahan had intended to build a black version of the Taj Mahal on the opposite side of the river that the Taj Mahal sat upon. And it is also said that Jahan had the hands of the carpenters who built the Taj Mahal removed so they would never build a monument like it or greater than it ever again 

(Ivan the Terrible of Russia is rumored to have done the same when building the Kremlin and the St. Basil's Cathedral).

Shah Jahan died on October 22, 1666, at the age of 74, Jahanara at his side. He had left behind many masterpieces. The Taj Mahal is the most famous yet he also built the grand palaces at Agra, the Red Fort, restored Fatehpur Sikri, and had commisoned the ostentatious peacock throne, a large throne with a covering supported by four poles at each corner of the square, made entirely of countless jewels including diamonds, rubies, sapphires, emeralds, etc. In his reign he led a few war campaigns and had put the Deccan territory to some rest. He even succeeded in restoring Qandahar back to the empire.

Jahanara returned to court lfie after her father's death, despite that the court now belonged to the new emperor, her hated brother Aurangzeb, a despotic bigot and chauvinist. In Aurangzeb's reign he had numerous luxuries banned. The Nine Days Bazaar was gone. Harem women were even more secluded and Christians, Hindus, or any other non-Muslims were tortured and spit upon.

Jahanara was allowed certain licenses. She became the Padishah Begum "Empress of Princesses" under Aurangzeb's orders. With this title, Jahanara was permitted to disobey Aurangzeb's laws and criticize him. Doing so she wore the clothes women were no longer allowed to wear, such as kameez, and embraced Hindus and Christians as her brother, Dara, had.

Jahanara's final years are mysterious. She did leave the royal palaces and lived in her father's city of Delhi for the rest of her life and commisioned numerous structures, including the Chandni Chowk, a large and ornate marketplace. Jahanara composed many poems, painted, and honored her father and mothers' love of the arts. In a away she continued what her father had started. Raushanara was still living with Aurangzeb at the time. 

Being the jealous type, she asked Aurangzeb if she could be permitted the freedoms Jahanara had. Aurangzeb responding by saying no, that he needed his sister to care for his children (Aurangzeb had married 5 wives and fathered 4 daughters and 6 sons). Jahanara never married, and knew she never would all her life, as it was forbiden for Moghul princesses to wed. Jahanara is rumored to have asked her father to lift this law, but it never happened. And the ruthless Aurangzeb would certainly never let the law be sanctioned, even if Jahanara was the Empress of Princesses.

Jahanara died on Setpember 6, 1681, at the age of 67. She did nt have many personal possessions but the ones she did have, mostly clothes and jewels, were left to her neice, Dara's daughter, Jani Begum.
Aurangzeb ruled for another 26 years. He is remembered today mostly for his inhumanity and bigot ways, yet he did strengthen the empire in many ways, at the price of others.

Jahanara is a revered Indian icon today. A woman who had numerous powers in a time when royal women were secluded and not allowed many liberties. She was an engineer, a writer, a painter, and an activist.

I





No comments:

Post a Comment