Posts

Showing posts with the label JUNE 6

ALANGUDI SOMU ,LYRICS WRITER BORN 1932 DECEMBER 12 -1990 JUNE 6

Image
  ALANGUDI SOMU ,LYRICS WRITER BORN  1932 DECEMBER 12 -1990 JUNE 6 #நினைவு_அஞ்சலி ஆலங்குடி சோமு (12 திசம்பர் 1932 - 6 சூன் 1990) தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், தயாரிப்பாளரும் ஆவார். தமிழ்த் திரையுலகில் 1960-களில் நுழைந்து 1990-களின் இறுதிக் காலம் வரை திரையிசைப் பிரியர்களுக்குப் பல கருத்தாழம் நிறைந்த பல வெற்றிப் பாடல்களைத் தந்தவர் ஆலங்குடி சோமு. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர் சோமு. 1932-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் திகதியன்று பிறந்தவர். திரைக்கதை எழுதவேண்டுமென்ற ஆவலோடு திரையுலகை நாடி வந்த சோமுவுக்கு பாட்டெழுதும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தவர் இவரது பள்ளித் தோழனும், பக்கத்து ஊர்க்காரருமான கவிஞர் புரட்சி தாசன். சோமுவைத் தயாரிப்பாளர் சின்னப்பா தேவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். ‘’யானைப்பாகன்’’ திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த தேவர் இப்படத்திற்குப் பாடல் எழுதும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி ஆலங்குடி சோமு எழுதிய முதற்பாடல் 1960-இல் வெளிவந்த ‘’யானைப்பாகன்’’ திரைப்படத்தில் ஏ.எல்.இராகவனும், எல்.ஆர்.ஈஸ்வரியும் இணைந்து பாடிய ’ஆம்பளைக்குப் பொம்பள...

ALEXANDER PUSHKIN ,RUSSIAN WRITER BORN 1799 JUNE 6 -1837 FEBRUARY 10

Image
ALEXANDER PUSHKIN ,RUSSIAN WRITER  BORN 1799 JUNE 6 -1837 FEBRUARY 10 அலெக்சாந்தர் செர்கேயெவிச் பூஷ்கின் (Aleksandr Sergeyevich Pushkin,[1] உருசியம்: Алекса́ндр Серге́евич Пу́шкин, சூன் 6 [யூ.நா. மே 26] 1799 - பெப்ரவரி 10 [யூ.நா. சனவரி 29] 1837) உருசிய மொழியின் ஒரு சிறந்த கவிஞர், நாடகாசிரியர், எழுத்தாளர்.[2] மிகப்பெரிய கவிஞராக பலரால் கருதப்படும் இவர் நவீன உருசிய இலக்கியத்தின் நிறுவனர். பூஷ்கின் தனது கவிதைகளிலும் நாடகங்களிலும் உரைநடையைக் கையாள்வதில் முன்னோடியாகவிருந்தார். அத்துடன் ரஷ்ய இலக்கியத்தில் ஒரு தனித்துவமான கதைசொல்லும் பாங்கையும் உருவாக்கியிருந்தார். இவை முன்னெப்போதுமில்லாத அளவில் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தின. வாழ்க்கை அலெக்சாந்தர் புஷ்கின் ரஷ்ய உயர்குடியைச் சேர்ந்த செர்கேய் புஷ்கினுக்கும் நதேழ்தா கண்ணிபாலுக்கும் மகனாக 1799ல் பிறந்தார். தன் மைத்துனரான ஜார்ஜா த அந்தேசுடனான துப்பாக்கிச் சண்டையில் குண்டடிபட்டு இறந்தார். அலெக்சாண்டர் புஷ்கின் ருஷ்ய இலக்கிய,அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத, மறக்க முடியாத படைப்பாளி. ஆம், அவர் சரி...

NORMANDY LANDINGS , D-DAY 1944 JUNE 6

Image
NORMANDY LANDINGS , D-DAY  1944 JUNE 6 நார்மாண்டி படையிறக்கம் அல்லது நார்மாண்டி தரையிறக்கம் (Normandy landings) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த படையிறக்க நடவடிக்கையைக் குறிக்கிறது. நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல் வழி படையெடுப்பு ஜூன் 6, 1944ம் தேதி துவங்கியது. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த இப்படையெடுப்புக்கு ஓவர்லார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. இப்படையெடுப்பின் முதல் நடவடிக்கையான பிரான்சு கடற்கரையில் படைகளைக் கரையிறக்கும் நடவடிக்கைக்கு நெப்டியூன் நடவடிக்கை (Operation Neptune) என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. இதுவே நார்மாண்டிப் படையிறக்கம் என அழைக்கப்படுகிறது. இந்தக் குறியீடு நார்மாண்டி படையெடுப்பு மற்றும் ஓவர்லார்ட் நடவடிக்கை, டி-டே போன்ற நிகழ்வுகளில் இருந்து வேறுபட்டது. பிரான்சு மீதான ஒட்டு மொத்த படையெடுப்பு நிகழ்வு ஓவர்லார்ட் நடவடிக்கை எனப்படுகிறது. இது ஜூன் 6 முதல்-ஆகஸ்ட் 25ல் பாரிசு வீழ்ந்தது வரை நடந்த மொத்த நடவடிக்கைகளைக் குறிக்கிறது. இதன் ஆரம்பக கட்ட த...

AARTHY AGARWAL ,TELUGU ACTRESS BORN 1984 MARCH 5- JUNE 6,2015

Image
AARTHY AGARWAL ,TELUGU ACTRESS  BORN 1984 MARCH 5- JUNE 6,2015 ஆர்த்தி அகர்வால் (மார்ச் 5, 1984 – சூன் 6, 2015) ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். அதிகமாக தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் பம்பரக் கண்ணாலே திரைப்படத்தில் நடித்துள்ளார்.[3] இறப்பு அதிகமான உடல் எடையைக் குறைப்பதற்காக அமெரிக்காவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த இவர் 2015 சூன் 6 அன்று எதிர்பாராத விதமாக மரணமடைந்தார்.[4] கொழுப்புறிஞ்சல் முறையில் அதிகமுறை சிகிச்சை மேற்கொண்டதன் விளைவாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது.[5] [6] [7] மாரடைப்பின் காரணமாக இவர் மரணமடைந்ததாக இவரது உதவியாளர் தெரிவித்தார்.[8] [9] இவர் ஐக்கிய அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.[10] [11 Aarthi Agarwal (March 5, 1984 – June 6, 2015) was an Indian-American actress who primarily worked in Telugu cinema, also known as Tollywood.[7] She is the older sister of Aditi Agarwal, also an actress Early life and career Agarwal was born on March 5, 1984 in New Jersey to Gujarati parents.[8] Her fathe...