LOUIS PADTEUR ,SCIENTIST FOUND MEDICINE FOR RABBIES
LOUIS PADTEUR ,SCIENTIST FOUND MEDICINE FOR RABBIES லூயி பாஸ்ச்சர் (Louis Pasteur, டிசம்பர் 27, 1822 – செப்டம்பர் 28, 1895) நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் வேதியியலாளர். வேதி நிகழ்வுகளில் ஒன்றான நொதித்தல் நிகழ்வை உற்றுநோக்கும் போது நுண்ணுயிரிகளைப் பற்றி இவர் அறிந்துகொண்டார். நுண்ணுயிரியல் துறையில் இவரது பங்களிப்பு அளப்பரியது. இவர் நடத்திய ஆய்வுகளின் பயனாய் பல நோய்கள் நுண்ணியிரிகளால் ஏற்படுகின்றன என்று கண்டறிந்தார்.[2][3][4] தடுப்பு மருந்து, நுண்ணுயிர் நொதித்தல் மற்றும் பாஸ்ச்சர் முறை ஆகிய கொள்கைகளைப் பல கண்டுபிடிப்புகள் மூலம் ஏற்படுத்திப் புகழ் பெற்றவர். நோய்க்கான காரணங்கள் மற்றும் அவற்றின் தடுப்புமுறைகள் குறித்த அவரது ஆராய்ச்சி ஒரு முக்கியத் திருப்புமுனையாக இருந்தது. அவரது கண்டுபிடிப்பு அன்றிலிருந்து பல உயிர்களைக் காத்து வருகிறது. பிரசவத்திற்குப் பிந்தைய தொற்றுகளினால் ஏற்படும் இறப்பு வீதத்தைக் குறைத்ததுடன், வெறிநாய்க்கடி நோய் மற்றும் ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்களுக்கு முதலில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்தார். அவரது மருத்துவக் கண்டுபிடிப்புகள் நோய்க் கிரும...