GIREESH PUTHENCHERRY , LYRICS WITH ILAIYARAJA
GIREESH PUTHENCHERRY , LYRICS WITH ILAIYARAJA பாடலாசிரியர் GIREESH PUTHENCHERY அவர்கள் இந்தத் தாமரைப் பூ தீயில் இன்று, காத்திருக்கும் உள்ளம் நொந்து, கண்கள் என்னும் பூந் தேன் தும்பி பாடிச் செல்லாதோ? இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில், மலையாளத்தில் பல பாடல் வரிகளைப் பாடலாசிரியர் Gireesh Puthenchery அவர்கள் எழுதியுள்ளார். இசைஞானியின் இசையில், "Kaalapani" எனப்படும் மலையாளப் படத்தில் (தமிழ்: சிறைச்சாலை) அனைத்துப் பாடல்களின் வரிகளையும் எழுதியது இவரே என்பது குறிப்பிடத் தக்கது. இப் படத்தில் வந்த "Chempoove Poove" என்னும் மலையாளப் பாடலின் போது இசைஞானிக்கும், இவருக்குமிடையில் நடந்த சம்பவமொன்றை எப்போதோ வாசித்துள்ளேன். அச் சம்பவம் பற்றி என் நினைவிலிருப்பதை இங்கே உங்களனைவருடனும் பகிர விரும்புகிறேன்: "Chempoove Poove" பாடலுக்காகக் Gireesh Puthenchery அவர்கள் எழுதிய வரிகள் விரசம் கொண்டனவையாக இருப்பதினால், பாடலின் வரிகளை மாற்றா விடில் இப் பாடலுக்கு இசையமைக்க மாட்டேனென இசைஞானி மறுத்து விட்டார். வரிகளில் ஒரு சொல்லைக் கூட மாற்ற மாட்டேனெனச் சொல்லிய Gireesh Puthenchery அவர்...