SIR ALEXANDER CUNNINGHAM ARCHAELOGIST BORN 1814,JANUARY 23-1893,NOVEMBER 28
SIR ALEXANDER CUNNINGHAM ARCHAELOGIST BORN 1814,JANUARY 23-1893,NOVEMBER 28 சர். அலெக்சாண்டர் கன்னிங்காம் (Alexander Cunningham, 23 ஜனவரி 1814 – 28 நவம்பர் 1893) ஒரு பிரித்தானியத் தொல்லியலாளரும், படைத்துறைப் பொறியாளரும் ஆவார். இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் தந்தை எனப்போற்றப்படும் இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்கரான பதவி வகித்தவர். இவரது உடன் பிறந்தோரான பிரான்சிஸ் கன்னிங்காம், ஜோசப் கன்னிங்காம் என்போரும் தத்தமது வேலைகளுக்காகப் பிரித்தானிய இந்தியாவில் பெயர் பெற்றவர்களாக இருந்தனர். இளமைக் காலம் இவர் 1814 ஆம் ஆண்டில், இலண்டனில், ஸ்கொட்டியக் கவிஞரான அலம் கன்னிங்காம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இலண்டனில் உள்ள கிறிஸ்துவின் மருத்துவநிலையம் எனப்பட்ட நிறுவனத்தில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். பின்னர் அடிஸ்கோம்பே என்னும் இடத்திலிருந்த எம். ஈ. ஐ கம்பனியின் மடாலயத்திலும், சத்தாமில் இருந்த ஆர். ஈ. எஸ்ட்டேட்டிலும் கல்வி கற்றார். 19 ஆவது வயதில் வங்காளப் பொறியாளர் குழுவில் இரண்டாம் லெப்டினண்டாக இணைந்த அவர், அடுத்த 28 ஆண்டுகள் இந்தியப் பிரித்தானிய அரச ...