Posts

Showing posts with the label M.G.SAKKARAPANI

M.G.SAKKARAPANI ,TAMIL ACTOR BORN 1911 JANUARY 13 - 1986 AUGUST 17

Image
M.G.SAKKARAPANI ,TAMIL ACTOR BORN  1911 JANUARY 13 - 1986 AUGUST 17 எம். ஜி. சக்கரபாணி என்றறியப்படும் மருதூர் கோபாலன் மேனன் சக்கரபாணி (13 சனவரி 1911 – 17 ஆகஸ்ட் 1986) தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் எம். ஜி. ஆரின் மூத்த சகோதரர் என்பதால், ஏட்டன் (மூத்த சகோதரன்) எனும் பெயராலும் குறிப்பிடப்பட்டார்.[1] சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் நினைவு நாளை ஒட்டி எம்.ஜி.ஆரின் விசுவாசி ஒருவர், அன்றைய நாளிதழில் வெளியான செய்தியை பகிர்ந்துள்ளார். எம்.ஜி.ஆரின் பலமே அவருடைய அண்ணன் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி தான். அவர் சொன்னதை தட்டாமல் கேட்பவர். எம்.ஜி.ஆரின் வெற்றியில் பெரும்பங்கு இவருக்குண்டு. சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால் தன் அண்ணனைத் தான் எல்லாமுமாக நினைத்து வந்தார் எம்.ஜி.ஆர். தன் அண்ணனின் திடீர் மறைவை எம்.ஜி.ஆரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தன்னுடைய பலம் அத்தனையும் திடீரென காணாமல் போய்விட்டது போல் உணர்ந்தார். அதன் காரணமாகவோ என்னவோ அண்ணன் மறைந்த ஒரு வருடத்திலேயே தானும் விண்ணுலகை அடைந்துவிட்டார். எம்.ஜி.ஆரின் அண்ணன் பெரியவர் ...

M.G.SAKKARAPANI , VILLAIN ACTOR BORN 1911 JANUARY 13

Image
M.G.SAKKARAPANI , VILLAIN ACTOR  BORN 1911 JANUARY 13 ஜூபிடர் நிறுவனம் பி.யு.சின்னப்பாவை வைத்து தயாரித்த படத்தில் எம்.ஜி.சக்கரபாணிக்கு பிரதான வில்லன் வேடம் கிடைத்தது. தரமான படங்களைத் தயாரித்து வந்த ஜூபிடர் நிறுவனத்தின் மேல் எம்.ஜி.ஆருக்கு ஒருவித காதல் இருந்த காலம் அது. தரமான படங்களைத் தயாரித்து வந்த அந்த நிறுவனத்தின் ஒரு படத்தில் நடித்து விட்டால் தனக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கை அவர் மனதில் ஆழமாக இருந்தது. இதனால் அண்ணனைப் பார்க்கும் சாக்கில் நேரம் கிடைத்தபோதெல்லாம் 'மஹாமாயா' செட்டுக்குப் போய் விடுவார் எம்.ஜி.ஆர். ஜூபிடர் நிறுவன உரிமையாளர்கள் வரும்போதும், போகும்போதும் அவர்கள் பார்வையில் படும்படியான இடத்தில் நிற்பார். அழகும், மிடுக்கும் இணைந்த வாலிபர் ஒருவர் அடிக்கடி தென்படுவதைக் கண்டு, ஒருநாள் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான எம்.சோமசுந்தரம், அவர் யார் என தயாரிப்பு நிர்வாகியிடம் கேட்க, 'சக்கரபாணியின் தம்பி' என அவரை அறிமுகப்படுத்தி வைத்தார் நிர்வாகி. எம் ஜி ஆர்சக்கரபாணியும் தன் பங்குக்கு எம்.ஜி.ஆரின் முந்தைய படங்களைப் பற்றி எடு...