LARISSA WATERS , AUSTRALIA MINISTER FILED AMENDMENTS WHILE FEEDING BREAST MILK
LARISSA WATERS , AUSTRALIA MINISTER FILED AMENDMENTS WHILE FEEDING BREAST MILK BORN 1977 FEBRUARY 8 தாய்ப்பால் அளித்தபடி மசோதா தாக்கல் செய்த அமைச்சர்! தாய்மைத் தருணம் தாய்ப்பால் பொது இடங்களிலும், பேருந்துகளிலும் எத்தனையோ அம்மாக்கள் பசியால் அழும் தங்களின் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டமுடியாமல் தவிப்பதைப் பார்த்திருக்கிறோம். அதை தர்மசங்கடமாக அவர்கள் நினைப்பதற்குக் காரணம், பொது இடங்களில் தாய்ப்பால் புகட்டுவதை இந்தச் சமூகம் அநாகரிகமாகப் பார்க்கும் மனோபாவம்தான். நம் நாட்டில் மட்டுமல்ல, மேலை நாடுகளிலும் இதுவே நிலை. இத்தகைய மனோபாவம் ஆண்களிடம் மட்டும் இருப்பதில்லை; பெண்களிடமும் இருக்கிறது. ஆனால், இந்த மனப்போக்கை உடைக்கும் விதமாக அமைந்திருக்கிறது ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு சம்பவம். ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில், லரிசா வாட்டர்ஸ் (Larissa Waters) என்ற பெண் அமைச்சர், நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்படும் நிலக்கரி தொழிலாளர்கள் பற்றியும், அவர்களுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் மசோதாவைத் தாக்கல்செய்தவாறே, தனது மூன்று மாத குழந்தைக்கு தாய்ப்பால் ...