Posts

Showing posts with the label NIVEDITHA

BHARATHIYAR GURU NIVEDITHA

Image
  BHARATHIYAR GURU NIVEDITHA சரி !ஆணாக பிறந்த நீ  என்ன சாதித்து விட்டாய்  எதிர்பாராத அதிர்ச்சி இரண்டு முறை ஏற்பட்டிருக்கிறது பாரதியாருக்கு ! ஒன்று 1921ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி கோவில் யானை, தும்பிக்கையால் தூர தள்ளியபோது..! இன்னொன்று அதற்கு சில வருடங்களுக்கு முன்பு, சகோதரி நிவேதிதாவை சந்தித்தபோது ! (நிவேதிதா விவேகானந்தரின் சீடர்) யானை கீழே தள்ளியபோது ஏற்பட்ட அதிர்ச்சியை விட மிகப்பெரும் அதிர்ச்சி, பாரதிக்கு ஏற்பட்டது அந்த சந்திப்பில்தான். அது நடந்தது கல்கத்தாவில். அங்கே நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்கு போயிருந்தார் பாரதியார். தற்செயலாகத்தான் சகோதரி நிவேதிதாவை அந்த இடத்தில் சந்தித்தார். இருவரும் பல்வேறு விஷயங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தபோது, இயல்பாகத்தான் நிவேதிதா அந்தக் கேள்வியைக் கேட்டார் : "ஆமாம். உங்கள் மனைவியை நீங்கள் உங்களோடு அழைத்து வரவில்லையா ?" பதில் சொன்னார் பாரதி : "எங்கள் சமுதாயத்தில் பெண்களை இந்த மாதிரி வெளியில் அழைத்து வரும் வழக்கம் இல்லை." பாரதி சொல்வதை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் நிவேதிதா. தொடர்ந்து சொன்னார் பாரதி : "இன்னொரு விஷயம். இது அரசிய...