Posts

Showing posts with the label AMRITSAR

AMRITSAR GOLDEN TEMPLE

Image
  AMRITSAR GOLDEN TEMPLE  ஆனந்தம் பொங்கும் அமிர்தசரஸ் பஞ்சாப் மாநிலத்துக்குப் பயணம் செல்பவர்களை, ‘ஒரு எட்டு பொற்கோயிலுக்கும் போய்விட்டு வரலாமே...’ என எண்ணவைத்து, சுண்டியிழுக்கும் தங்க நகரம் அமிர்தசரஸ். 24 காரட் சொக்கத் தங்கத்தால் ஜொலிக்கும் இந்தப் பொற்கோயில்தான் சீக்கியர்களின் புனிதத் தலம். அமிர்தசரஸ் பஸ் ஸ்டாண்டைவிட்டு வெளியே வந்தால் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுநர்கள் `அமிர்தசரஸ், ஜாலியன் வாலாபாக், வாகா...’ எனக் கூவிக் கூவி அழைக்கிறார்கள். நெருக்கடியான தெருக்களையும், வாகனங்களின் அழுக்கையும் பார்க்கும்போது, ஏதோ வேறு நாட்டுக்குள் போனதுபோல இருந்தது. அங்கிருந்து கூப்பிடும் தூரத்தில்தான் பாகிஸ்தானையும் இந்தியாவையும் பிரிக்கும் `வாகா’ எல்லை. முதலில் அமிர்தசரஸ் பொற்கோயிலை தரிசிக்கலாம் என சைக்கிள் ரிக்‌ஷாவில் ஏறி உட்கார்ந்தோம். சில கிலோமீட்டர் தூரத்திலிருந்த பொற்கோயிலுக்குச் செல்ல, `முக்கால் மணி நேரம் பிடிக்கும்’ என்றார் ரிக்‌ஷாக்காரர். அதற்குள், பொற்கோயில் வரலாற்றைக் கொஞ்சம் அசைபோட்டுப் பார்த்தோம். உலகின் பழைமையான நாகரிகங்களில் ஒன்றான சிந்து சமவெளிப்பகுதியில் அமிர்தசரஸ் இருக்கிறது....