இரண்டாம் ஜாலியன் வாலாபாக் - தேவகோட்டை துப்பாக்கி சூடு 14 பெண்கள் உட்பட 75 பேர் பலி 1942 ஆகஸ்ட் 17
இரண்டாம் ஜாலியன் வாலாபாக் - தேவகோட்டை துப்பாக்கி சூடு 14 பெண்கள் உட்பட 75 பேர் பலி 1942 ஆகஸ்ட் 17 அப்போது ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. யுத்தத்தின் காரணமாகக் கடும்பஞ்சம். ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் தாங்களுக்குத் தெரிந்த வழிகளில் போராடிக்கொண்டிருந்தார்கள். சிவகங்கையில் அரசுக் கருவூலம் கொள்ளையடிக்கப்பட்டது. தேவகோட்டையில் இருந்த சப்-கோர்ட்டை நெருப்பு வைத்துக் கொளுத்தினார்கள். திருவாடானை நீதிமன்றத்தையும் போலீஸ் ஸ்டேஷனையும் முற்றுகையிட்டு பொதுமக்கள் கைப்பற்றிக்கொண்டார்கள். போலீஸ் எதுவும் செய்யத் திராணியற்று முடங்கிப் போனது ஏனைய அரசு அலுவலங்கங்கள் எதுவும் செயல்படமுடியவில்லை. ராணுவம் வரவழைக்கப் பட்டது .துப்பாக்கி சூடு நடத்தினர் .இதில் 61ஆண்களும் 14 பெண்களும் சுட்டு கொல்லப்பட்டனர் - 300 பேர் காயம் இது அக்காலத்தில் இரண்டாம் ஜாலியன் வாலாபாக் என்று அழைக்கப்பட்டது -1942 august 1942 இன்றைக்கு சிவகங்கை மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டம், விருதுநகர் மாவட்டம் என்றழைக்கப்படும் மூன்றும் அன்றைக்கு ஒரே மாவட்டமாக இருந...