Friday 12 August 2016

நாசகாரஜெயவர்த்தனேஸ்ரீலங்கா இன அழிப்பை தூண்டியநாள்1977ஆகஸ்ட்12-300பேர் கொல்லப்பட்டனர்

நாசகாரஜெயவர்த்தனேஸ்ரீலங்கா இன அழிப்பை 
தூண்டியநாள்1977ஆகஸ்ட்12-300பேர் 
கொல்லப்பட்டனர்  


2. சிங்களவர் யார்?
இலங்கைத்தீவு, இந்தியாவுக்குத் தென்கிழக்கில் பூமத்திய ரேகைக்கு ஐந்தாவது, ஒன்பதாவது அட்சக்கோடுகள் வரையிலும், சுமார் 79 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலிருந்து 82 டிகிரி கிழக்குத் தீர்க்க ரேகை வரையிலும் பரவியுள்ளது. இத்தீவின் தென், வட பகுதி தாழ்ந்தும், மத்தியப்பகுதி எட்டாயிரம் அடி வரையில் உயர்ந்த மலைகளைக் கொண்டும் அமைந்திருக்கிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமுள்ள தூரம், உறுதிமிக்க மன இயல்பு கொண்டவர்களால் நீந்தியும், நடந்தும் கடக்கக் கூடியதாக இருக்கிறது.
இத்தீவில் தற்போது சிங்களமொழி பேசும் புத்தர்கள், கிறிஸ்தவர்கள், பெரும்பான்மையாகவும், தமிழ்மொழி பேசும் சைவ இந்துக்கள், முஸ்ஸிம்கள், கிறிஸ்தவர்கள் முதலியோர் சிறுபான்மையாகவும் வசிக்கிறார்கள். மொத்தத்தில் இருவேறு கலாசார மரபுகொண்ட இனங்களாகச் சிங்கள இனமும், தமிழ் இனமும் இருக்கிறது. பெரும்பான்மை இனம் என்கிற காரணத்தினால் நாட்டை ஆளும் பொறுப்பை சிங்களவர் எடுத்துக் கொண்டனர்.
பெரும்பான்மை இனமாகக் கருதப்படுகிற சிங்களவரின் வரலாறு என்பது மகாவம்சம் என்னும் புத்த காப்பியத்தை அடிப்படையாக வைத்துப் பேசப்பட்டும், எழுதப்பட்டும் இன்றுவரை இருந்து வருகிறது.


இந்த மகாவம்சம், செவிவழிவந்த நாட்டுப்புறப் பாடல்கள், கர்ண பரம்பரைக் கதைகள் முதலியவற்றால் ஒழுங்குபடுத்தப்பட்டது. சிங்களவர்களின் பெருமையை மிகவும் உயர்த்திக்காட்டவென்றே எழுதப்பட்ட நூல் இது. இந்த மகாவம்சத்தை எழுதியவர் மகாநாமதேரர் என்னும் புத்தபிக்கு ஆவார். ஐந்தாம் நூற்றாண்டில் சிங்கள அரசனாக வாழ்ந்த தாதுசேனின் (கி.பி.463-479) மாமன் இவர். பாலி மொழியில், தமிழின் சில சொற்களைத் துணைக்கொண்டு கவிதை வடிவில் எழுதியுள்ளார். மகாநாமதேரரின் காலத்தில் வாழ்ந்த, அநுராதபுரத்திலிருந்த புத்தமடத்தின் உயர்குருவான உத்தரபிரவீணா இக்காப்பியம் சிறப்புற அமைய உரிய ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார்.
மகாநாமா தொடங்கி வைத்த இந்த மகாவம்சத்தில் சிங்கள அரசர்களின் பெருமைகளை 13, 14, 18-ஆம் நூற்றாண்டுகளில் அவ்வப்போது வாழ்ந்த கவிஞர்களைக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த சிங்கள மன்னர்களின் வரலாறு இணைக்கப்பட்ட போதிலும் மூலநூலுக்கு ஏற்ற மொழி லாகவத்துடன் பிசிறு இல்லாது ஒரே நபரால் எழுதப் பட்டதற்கான தோற்றத்தை இந்நூல் பெறுகிறது.
சிங்களவர் வரலாறு என மகாவம்சம் கூறுவது என்ன?
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் வங்க மக்களுக்குச் சொந்தமான நாட்டில் ஓர் அரசன் இருந்தான். இவன் கலிங்க நாட்டு அரசனின் மகளை மணந்தான். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவளுக்கு உரிய வயது வந்ததும் பூப்பெய்தினாள்.
இளவரசி பருவமுற்றதும் சோதிடர்கள் கொண்டு அந்நாளைக் கணக்கிட்டு அவளுக்கு எந்த நாட்டு இளவரசன் கணவனாக அமைவான்; கல்வி, கேள்விகளில், வீரத்தில் அவனது தேர்ச்சி என்னவாக இருக்கும் என்று கணிக்க முற்பட்டனர். யாருக்கும் ஒழுங்கான விடை கிடைக்கவில்லை. எல்லாருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில்- "இளவரசி மிகுந்த காமவெறி கொண்டவளாயிருப்பாள். மிருகராஜனைக் கூடுவாள்' என்று தலைமைச் சோதிடர் கூறினார். இது ஒழுக்கக் குறைவானதாக, அவமானமடையத்தக்கதாக இருந்தபோதிலும் மன்னனிடம் உண்மையைச் சொல்வதே முறை என்று அவன்முன் தங்களது கணிப்பை எடுத்து வைத்தார்கள்.

"இளவரசி காம இச்சை மிகுந்து சிங்கத்துடன் உறவு கொள்வாள்' என்ற செய்தி கேட்ட வங்க மன்னன் அதிர்ச்சிக்காளானான். இதனால் வெறுப்பும் அவமானமும் அடைந்த மன்னன் தன் மகள் எப்படியோ போகட்டும் என்று விதிப்படி விட்டுவிட்டு அமைதியானான்.
இளவரசியின் நலனில் ஆர்வமற்றவனாக அவளது திருமண ஏற்பாடுகளில் கவனம் செலுத்தாதவனாக இருந்தான். அதுமட்டுமன்றி, அவளின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்காது அவள் போக்கில் விட்டுவிட்டான். சுதந்திர வாழ்வின் சுகத்தை விரும்பியவளாக தன்னந்தனியே அரண்மனையை விட்டுப் புறப்பட்டாள் இளவரசி. மகதநாட்டுக்குச் சென்று கொண்டிருந்த நாடோடிக் கும்பலுடன் அவர்கள் அறியாத விதத்தில் சேர்ந்து கொண்டாள்.
அடர்ந்த கானகத்தை நாடோடிக் கும்பல் கடந்து கொண்டிருந்தது. பயங்கரமான சிங்கம் ஒன்று எதிர்ப்பட்டு நாடோடிக் கும்பலைத் தாக்கியது. சிங்கத்திற்குப் பயந்து அனைவரும் நாலாபக்கமும் சிதறி ஓடினர். இளவரசி மட்டும் சிங்கம் சென்ற பாதையில் சென்றாள்.

தனது எதிர்காலம் பற்றிச் சோதிடர்கள் கூறியது இப்போது அவள் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. அவர்களின் கூற்றுக்கு ஏற்பவே தான் வந்த நாடோடிக் கும்பலைச் சிங்கம் தாக்கியதை உணர்ந்தாள். தான் கூட வேண்டிய சிங்கம் இதுவே என்றும் நினைத்தாள். இந்த உறுதியுடன்தான் சிங்கத்தின் பாதச்சுவட்டைப் பின்பற்றி அதன் குகையை நோக்கி நடக்கலானாள்.
வழியில் சிங்கமோ உண்ட மயக்கத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்தது. இளவரசி சிங்கத்தின் எதிரே வந்ததும் அது காமம் மிகக்கொண்டு வாலை ஆட்டியது. இளவரசி சிறிதும் பயப்படாமல் அதன் அருகே சென்று உடலைத் தட்டிக் கொடுத்தாள். தன்னை உடன் அழைத்துத் செல்லுமாறும் வேண்டினாள்.
ஏற்கெனவே இளவரசியைப் பார்த்த மாத்திரத்திலேயே காமம் மிகுந்திருந்த சிங்கம், அவளைத் தன் முதுகுமீது அமர்த்திக் கொண்டு தனது குகையை நோக்கிச் சென்றது.
குகையை வந்தடைந்ததும் இரவு பகல் பாராது சிங்கமும் இளவரசியும் கூடி மகிழ்ந்தார்கள். சிங்கத்தினது கூடலின் விளைவாக இளவரசி கருவுற்றாள். ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகளைப் பெற்றாள். ஆண் குழந்தைக்கு சிங்கபாகு என்றும், பெண் குழந்தைக்கு சிங்கவல்லி என்றும் பெயரிட்டாள். மகன் சிங்கபாகுவின் கைகளும் பாதங்களும் சிங்கத்தினுடையதைப் போல் அமைந்திருந்தன.
சிங்கபாகுவிற்கு பதினாறு வயதானபோது தன் மனதிலெழுந்த சந்தேகம் பற்றித் தாயிடம் கேட்டான். அவன் கேட்டது இதுதான்:
""அம்மா, நீயும் அப்பாவும் பெருத்த வித்தியாசத்துடன் இருக்கிறீர்களே. இது எப்படி நிகழ்ந்தது?''

இளவரசி அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னாள். சிங்கபாகு, ""நாம் இந்தக் குகையை விட்டு ஏன் போய்விடக் கூடாது?'' என்றான்.
""போய்விடலாம். எனக்கும் அந்த எண்ணம் உண்டு. ஆனால் இந்தக் குகையின் வாயிலை உன் தந்தை பலமான பாறையினால் மூடி இருக்கிறாரே!'' என்றாள்.
இது கேட்டதும் சிங்கபாகு தன் பலம் முழுவதும் செலுத்தி, குகையின் வாயிலை அடைத்துக் கொண்டிருக்கும் கல்லை நகர்த்தி, அதைத் தன் முதுகில் ஐம்பது யோசனை தூரம் சென்று எறிந்துவிட்டு வந்தான். பிறகு தன் தாயை ஒரு தோளிலும், தங்கையை மற்றொரு தோளிலுமாகச் சுமந்தவாறு வெளியே வந்தான்.
இளவரசியின் யோசனைப்படி இலைத்தழைகளை ஆடையாகத் தரித்துக்கொண்டு காட்டை விட்டு வெளியே வந்தனர். ஒரு மரத்தினடியில் படைவீரன் ஒருவன் இளைப்பாறிக்கொண்டிருந்தான். அவன் இளவரசியின் மாமன் மகனும், வங்க அரசனின் படையில் ஒரு தலைவனாகவும் விளங்குபவன் என்பதை இளவரசி கண்டுகொண்டாள்.
சத்தம் கேட்டு கண்விழித்த படைத்தலைவன் இவர்களைப் பார்த்து யாரென்று விசாரித்தான். இளவரசி தனது வரலாற்றை அவனிடம் கூறினாள். படைத்தலைவன் மிகுந்த மகிழ்ச்சியுற்று இளவரசியையும் அவளது பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சென்றான். பறையறிவித்து அவளை தனது மனைவியாக்கிக் கொண்டதாகவும் அறிவித்தான்.
இளவரசியும் தனது முன்னாள் கணவனான சிங்கத்தை மறந்து தனது புதிய கணவனுடன் வாழ்ந்து வந்தாள்.
காட்டில் இரை தேடப் போயிருந்த சிங்கம் குகைக்கு வந்ததும் தனது பிள்ளைகளையும் மனைவியையும் காணாமல் எல்லையோரக் கிராமங்களுக்குச் சென்று கோபத்தில் போவோர் வருவோர் எல்லாரையும் தாக்கியது.
""சிங்கம் எங்களைத் தாக்குகிறது; எங்களை அதனிடமிருந்து காக்க வேண்டும்'' என்று குடிமக்கள் மன்னனிடம் முறையிட்டனர்.
தன்னிடமுள்ளவர்களில் சிங்கத்தின் கொட்டத்தை அடக்கும் நபர் யார் என்று கண்டுபிடிக்க முடியாத நிலை. பரிசுத் தொகையை யானை முதுகில் வைத்து, ""சிங்கத்தைப் பிடித்து, சிங்கத்தைக் கொல்பவர்கள் இந்தத் தொகையை அடையலாம்'' என்று முரசு கொட்ட வைத்தான் அரசன்.
படை வீரர்களிலும் பொதுமக்களிலும் யாரும் முன் வராத நிலையில், பரிசுத் தொகையைப் பன்மடங்கு கூட்டினான். இந்த நிலையில் சிங்கபாகு தானே சிங்கத்தின் கொட்டத்தை அடக்குவதாக அறிவித்தான். அத்துடன் தாய் தடுத்தும் கேளாது யானை முதுகின் மேலுள்ள பரிசுத்தொகையை எடுத்துக் கொண்டான். பொதுமக்கள் சிங்கபாகுவை அரசன் முன்னிலையில் கொண்டு போய் நிறுத்தினர்.
அரசனோ, ""சிங்கத்தைக் கொன்றால் என் ராஜ்ஜியத்தையே தரச் சித்தமாயிருக்கிறேன்'' என்றான்.
சிங்கபாகு சிங்கத்தைத் தன் தந்தையென்றும் பாராமல் அதனை வீழ்த்தக் காட்டுப் பகுதிக்குச் சென்றான். தூரத்தில் சிங்கபாகுவைக் கண்டதுமே தனது மைந்தன் வந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் நெருங்கி வந்தது. சிங்கபாகுவோ தான் எடுத்துக்கொண்ட காரியத்தை நிறைவேற்றும் எண்ணத்தில் அம்பு எய்து சிங்கத்தைக் கொல்ல முயன்றான். இரண்டு முறை முயன்றும் அம்பு சரியாகச் சிங்கம் மீது தைக்கவில்லை. மூன்றாவது முறையாக சிங்கபாகு எய்த அம்பு சிங்கத்தை வீழ்த்தியது.
கொய்த தலையுடன் சிங்கபாகு அரண்மனையை நோக்கி வந்தான். பொதுமக்கள் அவனது தீரத்தைப் பாராட்டிப் புகழ்ந்தார்கள். ராஜ்ஜியத்தைத் தருவேன் என்று கூறிய மன்னன் உயிருடன் இல்லை. இருப்பினும் இளவரசி மூலம் சிங்கபாகு மன்னனின் பேரன்தான் என்பதைப் பொதுமக்களும், மந்திரிமார்களும் அறிந்த காரணத்தால் சிங்கபாகுவை அரசனாக்க முயன்றார்கள். எல்லாருடைய விருப்பத்திற்கிணங்க அரசனாகப் பதவி ஏற்றுக்கொண்டு, பின் தனது தாயாரையும் அவளது புதிய கணவனையும் அழைத்து ராஜ்யத்தை அவர்கள் வசம் ஒப்படைத்தான்.
தனது தங்கையை அழைத்துக்கொண்டு தான் வாழ்ந்த காட்டுப் பகுதிக்குச் சென்றான். அங்கே தனக்கென ஒரு நகரை நிர்மாணித்துக் கொண்டான். தங்கையை (சிங்கவல்லியை) தனது மனைவி ஆக்கிக் கொண்டான். இவர்களுக்குப் பதினாறு முறை இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
இந்த முப்பத்திரண்டு குழந்தைகளில் மூத்தவனுக்கு விஜயன் என்றும், இரண்டாமவனுக்கு சுமிதன் என்றும் பெயர்களிட்டார்கள். உரிய வயது வந்ததும் விஜயனுக்கு இளவரசுப் பட்டமும் சூட்டினார்கள்.
விஜயனின் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு வெறுப்பைத் தந்தன. பொறுத்துப் பார்த்த மக்கள் நேரிடையாக மன்னனிடம் சென்று, ""உங்கள் மகனைக் கொன்று விடுங்கள்; இல்லையெனில் அவனையும் அவனது தோழர்களையும் நாடு கடத்துங்கள்'' என்று முறையிட்டனர்.
சிங்கபாகு தனது மந்திரிகளைக் கூப்பிட்டு ஆலோசனை கலந்தான். அவர்களும் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்பவே முடிவு சொன்னார்கள்.
வேறுவழியின்றி மன்னன் சிங்கபாகு, விஜயன் உட்பட அவனது எழுநூறு தோழர்களையும் பிடித்து வந்து தலையில் பாதி முடியை சிரைத்து, சுக்கான் இல்லாத கப்பலில் ஏற்றி அனுப்பி வைத்தான். விஜயனும் அவனது நண்பர்களும் இலங்கையில் தாமிரபரணி என்னும் பகுதியில் கரையேறினார்கள்.
அனைவரும் கரையேறியதும் விஜயனின் ஆட்களில் ஒருவன் தூரத்தில் பெண்ணொருத்தியைக் காண்கிறான். அவள் அத்தீவில் வசிக்கும் இயக்க குல ராணியான குவேனி என்பவள்.
குவேனி அவர்களது பசியைப் போக்க விருந்து படைத்தாள். தன்னைப் பதினாறு வயதுப் பருவப் பெண்ணாக மாற்றிக் கொண்டாள். நானாவித ஆடையாபரணங்களைத் தன்மேல் அலங்கரிக்குமாறு மந்திர சக்தியால் செய்து கொண்டாள்.
ஒரு மரத்தடியில் அழகிய வெண்கொற்றக் குறையுடன் கூடிய சிறந்த மஞ்சத்தைச் சிருஷ்டித்துக் கொண்டாள். சுற்றிலும் பாதுகாப்புக்கெனக் கூடாரம் ஒன்றையும் எழுப்பிக் கொண்டாள். விஜயனும் குவேனியின் அழகில் மயங்கி அவளை ஏற்றுக் கொண்டான். இன்பமாகப் பொழுதைக் கழித்தான்.
குவேனியின் புத்திமதிப்படியே விஜயன் இயக்கராஜனுடைய உடைகளை அணிந்து கொண்டான். தாமிரபரணி என்னும் நகரத்தை ஏற்படுத்திக் கொண்டான். குவேனியையும் முறைப்படி மனைவியாக்கிக் கொண்டான்.
ஆனாலும் அவன் தன்னை அரசனாக முடிசூட்டிக் கொள்ளவில்லை. உயர்குலப் பெண்ணொருத்தியை மணந்து அவளைப் பட்டமகிஷியாக்கிக் கொண்ட பிறகே தான் அரசனாக முடியும் என்று கருத்துக் கொண்டிருந்தான். அதனால் விஜயனின் மந்திரிமார்களில் சிலர் பாண்டிய நாடு சென்று அந்த மன்னனிடம் பெண் கேட்டார்கள்.
பாண்டிய மன்னனும் தனது மகளை விஜயனுக்குத் தரச் சம்மதித்து, விஜயனின் நண்பர்களை மணந்து கொள்ளவும், தனது மகளுக்குத் துணையாக இருக்கவும் என்று நூறு பாண்டிய நாட்டுப் பெண்களையும் அனுப்பி வைத்தான்.
ஒரு குறிப்பிட்ட தினத்தில் பாண்டிய நாட்டு இளவரசியை மணந்து கொண்டான் விஜயன். பின் குவேனியை தனது நாட்டை விட்டே துரத்துகிறான். குவேனியின் மூலம் பிறந்த ஒரு மகன், ஒரு மகளையும் கானகத்துக்குத் துரத்தியடிக்கிறான் விஜயன். இந்த விஜயனே முதல் சிங்கள மன்னன் என்று மகாவம்சம் நூல் கூறுகிறது. இவனது வாரிசுகளே இன்றைய சிங்களவர்கள்!
3. இலங்கையின் பூர்வ குடிகள் யார்?
மகாவம்ச வரலாறு மூலம், விஜயன் வருவதற்கு முன்பு இலங்கைப் பகுதியில் மக்கள் வசித்திருக்கிறார்கள்; அவர்கள் இயக்கர்கள் என்றும், நாகர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்; அவர்களுக்கென்று ஓர் அரசு இருந்திருக்கிறது என்பது புலனாகும்.
மகாவம்சம், சிங்களவர்களின் பெருமை பேசவென்று எழுதப்பட்ட நூலானதால் குவேனியையும் அவளது சுற்றத்தாரையும் அமானுஷ்ய சக்தி கொண்ட, மனிதர்களைப் பிடித்துத் தின்னும் நாகரிகமற்றவர்களாகக் காட்டுகிறார்கள். உண்மையில் இவர்களே இலங்கைத் தீவின் பூர்வகுடிகளாவர். அழியாத குமரிக்கண்டத்தின் வரலாற்றுப்படி ஒப்பு நோக்கினால், அவர்கள் அசல் திராவிடர்கள் என்பதும் புலனாகும்.
புத்த மதம் வந்தபோது இருந்த மன்னன் யார்?
மகாவம்சக் கூற்றுப்படி இலங்கைக்குப் புத்த மதம் வந்தபோது அரசனாக இருந்தவன் யார் என்பது ஒரு பெரிய சந்தேகம். புத்த மதம் இலங்கைத் தீவுக்குள் நுழைந்தபோது இலங்கையை ஆண்ட மன்னன் மூத்தசிவனின் (மூத்த+சிவம்) மகன் தேவனாம்பிய தீசன். இவன்தான் மகிந்ததேரரை (அசோகனின் மகன் மகேந்திரன்-மகாவம்ச கூற்றுப்படி) வரவேற்றது. இவன் ஒரு தமிழ் மன்னன். இங்கு கூறப்படும் மூத்தசிவனின் மகனான தேவனாம்பிய தீசன் வேறு; அசோக மன்னனின் அடைமொழியைத் தன் பெயராக வைத்துக்கொண்ட தேவனாம்பிரிய தீசன் வேறு!
தேவனாம்பிரிய~என்றால் தேவனுக்குப் பிரியமான என்பதைக் குறிக்கும். இங்கு தேவன் என்பது புத்தரைக் குறிக்கிறது. தீசன் என்பது மோகாலி என்பவருடைய மகன் ஆகிறது. இந்த மோகாலி, அசோக மன்னனின் காலத்தில் இருந்த புத்தமகாசபையின் தலைவர் ஆவார்.

இக்குறிப்புகள் மூலம் சிங்கள வரலாற்று அறிஞர்கள் அசோகனின் மகனான மகிந்ததேரரை வரவேற்றது தமிழ் மன்னன் மூத்தசிவனின் மகனான தேவனாம்பிய தீசன் என்பதைத் திரித்து புத்த மகாசபையின் தலைவர் மோகாலியின் மகனான தேவனாம்பிரியதீசன் என்று உண்மைக்கு மாறாக வரலாற்றை உலகிற்குக் கூறுகின்றனர்.
இந்த திரித்தல் வேலை ஏன் நடைபெற வேண்டும்? விடை சுலபமானது. இந்த திரித்தல் மூலம் மகிந்ததேரரை வரவேற்றது தேவனாம்பிரியதீசன் என்று குறிப்பிட்டுவிட்டால் தமிழர்களுக்கு முன்பாகவே புத்தர்கள் இலங்கையில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்று வலியுறுத்த முடியும். அதற்காகவே தேவனாம்பியதீசன்~தேவனாம்பிரிய தீசன் ஆகிய இருபெயர்களிலும் இருக்கும் ஓர் எழுத்து (ரி) வித்தியாசத்தை மூடி மறைத்து தேவனாம்பிய தீசனுக்குப் பதில் தேவனாம்பிரிய தீசனை நுழைக்கிறார்கள். இப்படி நுழைப்பதன் மூலம் புத்தமத வாதத்திற்கு மேலும் வலுவிருக்கும் என்று நம்புகின்றனர் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாகும்.
மேற்கண்ட தகவல்களுக்கு மகாவம்சக் கூற்றே மகா முரணாக இருக்கிறது. அது~
""இரண்டு சாம்ராஜ்யாதிபதிகளும், அதாவது தேவனாம்பிரியதீசனும் தம்மசோகாவும் ஏற்கெனவே ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதில்லை. இருப்பினும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு நட்புக் கொண்டிருந்தார்கள்'' (மகாவம்சம் 11:19) என்பதாகும்.
இதிலிருந்து தேவனாம்பிரிய தீசனும் தம்மசோகாவும் (தர்ம அசோகர்) வேறுவேறு மன்னர்கள் என்பதும் அவர்கள் நட்புரிமையுடன் பழகி வந்தார்கள் எனவும் தெரிகிறது. சிங்கள அறிஞர்களின் கூற்றுப்படி மோகாலியின் மகன்தான் அசோகனின் மகனை வரவேற்றது என்பது உண்மையானால், அசோக மன்னனை அவன் சந்திக்காது இருந்திருக்க முடியுமா என்பது வரலாற்று அறிஞர்களின் கேள்வியாக இருக்கிறது.
சிங்கள வரலாற்று அறிஞர்கள் இத்துடன் நின்று விடவில்லை. சிங்கள இனத்தை ஆரிய இனமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக மேலும் பல திரிப்பு வேலைகளைச் செய்கிறார்கள். தென்னிந்தியாவில் மதுரையையும் அதை ஆண்ட பாண்டியர்களையும் பற்றிய குறிப்புகளை (மகாவம்சத்தில் வரும்போது) யமுனை நதிக்கரையில் வாழ்ந்த பாண்டுவுடனும், முத்ராவுடனும் முடிச்சுப்போட்டு திரிக்கின்றனர்.

அதுமட்டுமல்ல; மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் இலங்கைக்கு, இந்தியாவுடனான தெற்கத்திய தொடர்புகளைப் பற்றி ஏனைய அறிஞர்கள் ஏற்றுக் கொண்டாலும், சிங்களவர்கள் மட்டும் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராய் இல்லை, என்றும் பொருளாகிறது.
இப்படி யமுனை நதிக்கரைப் பாண்டுவோடும், முத்ராவோடும் விஜயனைத் தொடர்புப்படுத்தித் திரித்துக் கூறுவதன் மூலம் மகாவம்சத்தின் ஆசிரியர் மகாநாமதேரரைக் கேலிக்குரியவராக்குகிறார்கள் என்பதே பொருள்.
வேதகாலத்திற்குப் பின் குருவம்சம் மிகச் சிறப்பான ஒரு பழங்குடி வம்சம் என்று இந்திய வரலாறு (பக். 46-இல்) எழுதிய சின்ஹா~பானர்ஜி தெரிவிக்கிறார்கள். மிகச் சிறப்பான வம்சம் என்று கருதப்படும் குருவம்சத்துடன் விஜயன் தொடர்பு வைத்துக்கொள்ளாமல் கீழான நாகரிகம் கொண்ட யமுனை நதிக்கரைப் பாண்டுவுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக மூல நூலான மகாவம்சம் கூறியிருக்க முடியுமா? (1) இலங்கையின் ஆதிக்குடிகளான தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களே என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.
மேலைநாட்டு அறிஞர் கால்டுவெல் கருத்துப்படி முதல்சங்க, இடைச்சங்க காலத்தில் நிகழ்ந்த கடல் கொந்தளிப்பின் விளைவாக லெமூரியாக் கண்டத்திலிருந்து பிரிந்த நிலத்திட்டுத்தான் இலங்கை ஆகும். இதன் மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உள்ள புராதனத் தொடர்பை அறிய முடியும். மேலும், சின்ஹா~பானர்ஜி தமது இந்திய வரலாற்றில் குறிப்பிடுகையில் வரலாற்றுக்கு முந்தைய திராவிடர்கள் கடற்பயணம் மேற்கொண்டு அதன் மூலம் வணிகத்தில் சிறந்து விளங்கினார்கள்; சிறந்த பயன் அடைந்தார்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அதுபோலவே, ஆங்கில வரலாற்று ஆசிரியர் டியோலி கிழக்கத்திய மற்றும் தூரக்கிழக்கு நாடுகளோடு மிக நீண்ட காலமாகவே வணிகத் தொடர்பினைத் தமிழர்கள் கொண்டிருந்தார்கள் என்று குறிப்பிடுகிறார்.
ஆனால், வட இந்திய ஆரியர்கள் கடல் போக்குவரத்துப் பற்றிய தெளிவான அறிவினை கொண்டிருந்தார்கள் என்று நம்புவதற்குப் போதிய ஆதாரம் இல்லை. கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர்களுக்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு, சமீபத்தில் அங்கு நடந்த அகழ்வாய்வுச் சான்றுகளின் மூலம் அறியப்படுகிறது. அச்சான்றுகளை மூன்று பிரிவாக வகைப்படுத்தலாம்.

1948-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டம் இவர்களை நாடற்றவர்களாக ஆக்கியது. 1964-ம் ஆண்டு சிறிமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம் இவர்களின்
 நிலையை மேலும் சிக்கலுக்கு உரியதாக ஆக்கிற்று. மலையகத் தமிழர்களுக்கு ஆதரவாக தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்றோர் வாதாட, ஜி. பொன்னம்பலம் அவர்களுக்கு எதிராக இருந்தார்.
இன்றைய ஈழப் போராட்டத்தின் அடிநாதம் என இரண்டு விஷயங்களை குறிப்பிடலாம்.
1. 1956-ம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டார நாயக கொண்டு வந்த தனி சிங்களச்சட்டம்.
2. 1970-ம் ஆண்டு சிறிமாவோ பண்டார நாயக்க கொண்டு வந்த 'தரப்படுத்துதல் சட்டம்' இந்த தரப்படுத்துதல் சட்டம் தமிழ் மாணவர்களை பெரிதும் பாதித்தது. பல்கலைக்கழக கல்விக்குச் செல்ல சிங்கள மாணவனுக்கும், தமிழ் மாணவனுக்கும் மதிப்பெண்களின் அளவுகோல்களில் வேறுபாடு காண்பிக்கப்பட்டது.
இதனால் தமிழ் மாணவர்களின் மேற்படிப்பு பாதிக்கப்பட்டது. அரசு அலுவலர்களில்; தங்களது கல்விப் புலத்தால் செல்வாக்கு செலுத்திய தமிழ் மேட்டுக்குடியினர் இதைக் கடுமையாக எதிர்த்தனர்.

தமிழரசுக் கழகமாக முன்பு இருந்த தமிழர் கட்சி தந்தை செல்வாவின் மறைவுக்குப் பிறகு 1976-ம் ஆண்டு, ஜி.ஜி. பொன்னம்பலத்தின் தமிழ்காங்கிரஸ், தமிழ் தோட்டத் தொழிலாளர் கட்சியான தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ்த் தேசியவாதியான பேராசிரியர் சி. சுந்தரலிங்கம் ஆகியோர் 'தமிழர் விடுதரை ஐக்கிய முன்னிலையை அமைத்தனர். இந்த முன்னனியால் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் நடந்த கட்சி மாநாட்டில் தான் 'தமிழ் ஈழம்' என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. அதை அகிம்சை முறையில் அடைய வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் இலங்கை இடதுசாரி கட்சியான ஜே.வி.பி.யால் 1971-ம் ஆண்டு நடத்தப்பட்ட கலகமும், பங்களாதேஷ் யுத்தமும், தமிழ் இளைஞர்களை போராட்ட பாதைக்கு திருப்பின. போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், கோரிக்கை மனு அளித்தல் போன்றவைகளில் இளைஞர்கள் நம்பிக்கை இழந்தனர். 'தமிழ்ப் பேரவை' 'தமிழ் இளைஞர் பேரவை' போன்ற அமைப்புக்கள் அன்றைய ஈழ இளைஞர்களால் துவக்கப்பட்டன. படித்த இடதுசாரி இளைஞர்கள் இவைகளால் உள்வாங்கப்பட்டனர். யாழ் பகுதியில் போலீஸ் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டன. இதில் அன்றைய யாழ் நகர மேயர் திரு. ஆல்பிரட் துரையப்பா முன் நின்றார்.
தீவிரவாத தமிழ் இளைஞர்கள் பெருகத் தொடங்கினர். இவர்கள் தங்களின் ஆயுத தேவைக்கு பணம் திரட்ட வங்கிகளை கொள்ளையிட்டனர். யாழ் திருநெல்வேலி நீர்வேலி வங்கி, புலோலி வங்கி, என பல இலங்கை தேசிய வங்கிகள் கொள்ளையிடப்பட்டன.

1974-ம் ஆண்டு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற 4-வது உலகத் தமிழ் மாநாட்டின் இறுதி நாளன்று போலீஸ் கூட்டத்தில் புகுந்து குழப்பம் செய்ததால், மின்சாரம் தாக்கி, 9பேர் இறந்தனர். இது தமிழர்கள் மனங்களில் ஆறா வடுவை ஏற்படுத்தியது. யாழ் மேயர் ஆல்பிரட் துரையப்பாவின் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை அதிகரித்ததால் அவரை ஒழித்துக்கட்ட தமிழ் இளைஞர்கள் தீர்மானித்தனர். 1975-ம் ஆண்டு ஜீலை மாதம் 27-ம் தேதி கலாநிதி, கிருபாகரன் துணையோடு பிரபாகரன் துரையப்பாவை சுட்டுக் கொன்றார். பிரபாகரன் செய்த முதல் அரசியல் கொலை இதுவேயாகும்.
இதற்கிடையே 1977-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் யு.என்.பி.யைச் சேர்ந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனே வெற்றிபெற்று ஜனாதிபதியாகிறார். இவர் என்றுமே தமிழர்களின் எதிரிதான். தமிழர் பிரச்சனை வேகம் எடுப்பதையொட்டி ஜெயவர்த்தனே நாடாளுமன்றத்தில் 1979-ல் பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) கொண்டு வந்தார்.
அதுவரை அமிர்தலிங்கம் தலைமையிலான விடுதலைக் கூட்டணியோடு பேச்சு வார்த்தையில் ஒரு தீர்வு கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்து நம்பியிருந்த தமிழர்கள் ஏமாற்ற மனநிலைக்கு உள்ளாயினர். தமிழர் விரோதப் போக்குகள் அரசால் பகிரங்கமாக தூண்டிவிடப்பட்டது. 1981-ல் அன்றைய அமைச்சர் காமினிதிஸ நாயக்க, மற்றும் சிரில் மாத்யூ தலைமையிலான ராணுவமும், சிங்கள காடையர்களும் ஆசியாவிலேயே மிகப் பெரிதான யாழ்ப்பாணம் நூல் நிலையத்தை தீயிட்டு கொளுத்தினர். இனி சிங்களவர்களோடு சமரசமாக வாழ முடியாது என்ற ஒரு நிர்ப்பந்தத்தை தமிழர்களின் மனதில் விதைத்தது. இந்த நூலக எரிப்பு சம்பவம்தான்.
1977 ஜூலை 21 இல் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழர்களை அளிக்கும் முகமாக 
ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கூட முடியாத நிலையில் எதிர்க்கட்சியான 
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ,ஸ்ரீலங்கா சாம சமாஜ கட்சி ,ஸ்ரீலங்கன் கம்யூனிஸ்ட் கட்சி ,மக்கள் குடியரசு கடசி மீது வேண்டுமென்றே வன்முறையை தூண்டிவிட்டு 300 பேர் கொல்லப்பட்டனர் - இதிலிருந்து தான் இலங்கை கலவரம் ஆரம்பம் ஆனது 
Anti-Left pogrom[edit]
Prior to the 1977 elections, JR Jayawardene promised that he would give the Police a week's leave so that his supporters could attack members of opposing parties. After his victory, his Government launched unprecedented state violence against the opposition, targeting supporters of the Sri Lanka Freedom Party, the Lanka Sama Samaja Party, the Communist Party of Sri Lanka, and the People's Democratic Party. In particular, some 9,000 families of supporters of LSSP leader NM Perera in Yatiyantota were driven from their homes, many of which were destroyed.


No comments:

Post a Comment