ANNADURAI SEEDS SOCIAL INJUSTICE TO TAMILNADU
ANNADURAI SEEDS SOCIAL INJUSTICE TO TAMILNADU அண்ணா -தமிழகத்தை குட்டிச்சுவர் ஆக்கிய கதை அண்ணா நாமம் சொல்லும் ..ஜெ.. Courtesy Stanley Rajan இன்றைய தமிழகம் நாசமாகி நிற்பதற்கெல்லாம், மாபெரும் சீரழிவில் இம்மாநிலம் சிக்கி இங்கு கோவில் முதல் அரசியல் வரை சரிந்து கிடப்பதற்கெல்லாம், இங்கு எல்லா இடத்திலும் ஊழலும் லஞ்சலாவண்யமும் பெருகி எல்லாமே எல்லை மீறி காண சகிக்கா அளவு சாக்கடையாக கிடப்பதற்கெல்லாம் அவர்தான் காரணம் 4 படம் நடிப்பதற்குள் அவனவன் முதல்வர் கனவில் அலைவதற்கும், தமிழக அரசியலுக்கு வர சினிமாதான் தகுதி என விதி எழுதியதற்கும் அவர்தான் காரணம் அந்த சந்தர்ப்பவாதியின் குழறுபடியால், நிலையில்லா புத்திகொண்ட, எதிலுமே வெற்றிபெறாமல் மக்களை வீண் குழப்பத்திலும் பயத்திலும் ஆழ்த்தி, பொய் ஒன்றே தன் மூலதனமாக கொண்டு , நாளுக்கொரு பொய் வேளைக்கொரு வேடம் என இட்டு தமிழத்தை நாசக்கியது சாட்சாத் அவரேதான் இன்றிருக்கும் பிழைப்புவாத பெரும் அரசியலை தொடங்கி வைத்ததும் அவர்தான் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை, அவரின் நினைவுநாளில் அவரின் மாபெரும் பொய்களையும், தன்னெஞ்சு அறிய அவர் மக்களுக்கு கொடுத்த மயக்க மருந்தையும், ஒரு ...