TIGER OF MYSORE BIOGRAPHY
TIGER OF MYSORE BIOGRAPHY மைசூர்ப் புலி என்று போற்றப்படும் திப்பு சுல்தான் 1750ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் தேவனஹள்ளி என்ற ஊரில் ஹைதர் அலிக்கும், பாக்ர்-உன்-நிசா அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். ஹைதர் அலியும் இந்திய வரலாற்றில் முக்கிய இடம் பெற்றவர். இந்த ஹைதர் அலிதான் வேலு நாச்சியாருக்குப் படை கொடுத்து ஆங்கிலேயரை வெல்ல உதவியவர். ஹைதர் அலி எளிய குதிரைவீரராக இருந்து, படிப்படியாக உயர்ந்து, பிறகு மைசூர் அரசையே ஆளும் மன்னராக உயர்ந்தவர். இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்டவர். பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயரை எதிர்த்து வெற்றி வாகை சூடியவர்கள் ஒருசிலரே. அவர்களுள் தந்தை ஹைதர் அலியும் மகன் திப்பு சுல்தானும் அடங்குவர். 1782ஆம் ஆண்டு தந்தை ஹைதர் அலியின் மரணத்திற்குப் பிறகு, தனது 32ஆம் வயதில் மன்னராக அரியணை ஏறினார் திப்பு. 1782 முதல் 1799 வரை மைசூர் பகுதியை ஆட்சி செய்தார். ஆட்சித் தலைநகரமாக சீரங்கப்பட்டினம் இருந்தது. மைசூரின் மன்னராகப் பொறுப்பேற்ற திப்பு சுல்தான் தனக்குரிய அடையாளமாகப் புலிச் சின்னம் பொறித்த கொடியைப் பயன்படுத்த...