Posts

Showing posts with the label CHOLAN

RAJARAJA CHOLAN BORN ON AIPPASI SATHAYAM FALLS 2020 OCTOBER 26

Image
  RAJARAJA CHOLAN BORN ON AIPPASI SATHAYAM  FALLS 2020 OCTOBER 26 ராஜராஜசோழன் 947 ஆம் ஆண்டு ஐப்பசி திங்கள் சதய நாளில் பிறந்தார் அக்டோபர் 26,2020சதய நாள் . @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ தமிழ்நாட்டின் வரலாற்றில் பொற்காலத்தைப் படைத்தவர்கள் ராஜராஜசோழனும் அவன் மகன் ராஜேந்திரசோழனும் ஆவார்கள். இவர்கள் ஏறத்தாழ இலங்கையை முற்றிலுமாக வென்று, சோழ ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக ஆக்கினார்கள். கி.பி. 982-ம் ஆண்டில், ஐந்தாம் மகிந்தன் என்ற சிங்கள அரசன் இலங்கையை ஆண்டு வந்தான். அவன், சோழர்களுக்கு எதிரிகளான பாண்டியனுக்கும், சேரனுக்கும் உதவி செய்து வந்தான். படையெடுப்பு எனவே, இலங்கை மீது படையெடுக்க சோழமன் னன் ராஜராஜசோழன் முடிவு செய்தார். தன் மகன் ராஜேந்திர சோழன் தலைமையில் ஒருபெரிய கப்பல் படையை அனுப்பி வைத்தார். தமிழ்ப் போர் வீரர்களுடன் கப்பல்கள் இலங்கையை சென்றடைந்தன. போர்க் கப்பல்களைப் பார்த்து சிங்களர்கள் மிரண்டனர். சோழர் படையை எதிர்க்க துணிவின்றி, மன்னன் மகிந்தன் இலங்கையின் இன்னொரு பகுதியான ரோகண நாட்டிற்கு தப்பி ஓடி விட்டான். சோழர் படை, இலங்கையின் வடபகுதியை கைப்பற்றிக் கொண்டது. அந்தப் பகுதிக்கு `ம...

ADITYA CHOLAN 871-907 TOMB NEAR KALAHASTHI

Image
ADITYA CHOLAN  871-907  TOMB NEAR KALAHASTHI ஆதித்த சோழன் பள்ளிப்படை க்கான பட முடிவு ஒவ்வொரு கல்லிலும் வரிசை எண்ணைக் குறிப்பிட்டு உபானம் (அதிஷ்டானம்) முதல் பிரஸ்தாரம் (entablature) வரை அடித்தளத்தை வலிவாக்கி  விமானச் சுவர்களின் கருங்கற்களை பிரித்து அடுக்கிக் கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. குமுதப்படையில் நான்கு புறமும் காணப்பட்ட அரிய கல்வெட்டுகளின்மேல் சிமென்ட் காரை அப்பியிருந்தது. அருகில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்பாள் சன்னதி, பிற்காலத்தில் இக்கோவிலுடன் இணைக்கப்பட்டிருக்கலாம். அம்பாள் சன்னதியில் தினசரி பூசைகள் இடற்பாடின்றி நடந்து வந்தன. பொக்கிசம்பாளம் ஸ்ரீ காளஹஸ்தி நகருக்கு அருகே 15.6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பொக்கிசம்பாளம். இவ்வூரிலிருந்து ஸ்ரீ காளஹஸ்தி நகருக்குப் பேரூந்து மற்றும் ஷேர் ஆட்டோக்கள் சென்று வருகின்றன. இவ்வூர் இராயசீமா பகுதியில் அமைந்துள்ளது. இவ்வூரின் அமைவிடம் 13° 42′ 16.9956” N அட்சரேகை 79° 39′ 23.4932” E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 68 மீ. ஆகும். இவ்வூரின் மக்கள் தொகை 837 (ஆண்கள் 613 பெண்கள் 224) ஆகும்....

CHOLA DYNASTY -VIJAYALAYA CHOLAN BEGINS FROM THIRUPURAMBIYAM BATTLES

Image
CHOLA DYNASTY -VIJAYALAYA CHOLAN BEGINS FROM THIRUPURAMBIYAM BATTLES பண்டைத் தமிழகத்தில் மூவேந்தர்களுள் ஒருவராகப் பெரும் புகழுடன் விளங்கிய சோழர்கள் நிலை தாழ்ந்து சிற்றரசர்களாக நீண்டகாலம் இருந்தனர். இந்த நிலையைப் போக்கி சோழரின் பெருமையை மீண்டும் தமிழகத்தில் நிலை நிறுத்தியவன் விஜயாலய சோழன் ஆவான். ஸ்ரீ காந்த ஸ்ரீ மனோகரச் சோழனின் மகனான விஜயாலய சோழன் கி.பி 850இல் சிற்றரசனாக உறையூரில் பதவி ஏற்றான். இவனே பிற்கால சோழப் பேரரசிற்கான வலிமையான அடித்தளத்தை இட்டவன். கி.பி.880ல் நடந்த திருப்புறம்பியப்போரில் அக்காலத்தில் வலிமை பெற்றிருந்த பாண்டியர்களுக்குள் இருந்த உட்பகையைப் பயன்படுத்தி முத்தரையர்களின் கீழிருந்த தஞ்சாவூரைத் தாக்கி, பல்லவ பேரரசிற்கு சார்பாக போரிட்டு தஞ்சையை கைப்பற்றினான். தென்னிந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இருந்த இந்த திருப்புறம்பயம் போர் இக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது. இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம் வசப...