SWAMY VIVEKANANDA`S SPEECH IN AMERICA SEPTEMBER 11,1893
SWAMY VIVEKANANDA`S SPEECH IN AMERICA SEPTEMBER 11,1893 சிகாகோ உரையில் விவேகானந்தர் என்ன சொன்னார்? 1893ஆம் ஆண்டு, september 11,அமெரிக்காவில் சிகாகோவில் மதங்களுக்கான உலக நாடாளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றி 127 ஆண்டுகள் ஆகிறது. விவேகானந்தரின் இந்த எழுச்சிமிக்க உரை, சர்வதேச நாடுகளில் மத்தியில் இந்தியாவை வலுவான நாடாக அறியச்செய்தது. விவேகானந்தரின் இந்த உரை பற்றி பரவலாக அனைவரும் குறிப்பிடுவதை அனைவரும் அறிவோம். ஆனால் அந்த உரையில் இடம்பெற்ற கருத்துகள் பற்றி அனைவருக்கும் தெரியுமா என்பது சந்தேகமே. எனவே, விவேகானந்தரின் வரலாற்று சிறப்புமிக்க உரையின் முக்கிய கருத்துகளை சுருக்கமாக பார்க்கலாம். 1. எனது அருமை அமெரிக்க சகோதர, சகோதரிகளே! நீங்கள் நேசத்துடன் என்னை வரவேற்ற பண்பு என் மனதை நிறைத்துவிட்டது. உலகின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரை மற்றும் அனைத்து மதங்களின் அன்னையின் சார்பாக நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துக்களின் சார்பாக உங்களுக்கு நன்றி கூறுகிறேன். 2. இந்த மன்றத்தில் பேசிய சில பேச்சாளர்கள், உலகில் சகிப்ப...