M.R.RADHA LEGEND ACTOR DIED SEPTEMBER 17,1989
M.R.RADHA LEGEND ACTOR DIED SEPTEMBER 17,1989 #பெரியாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர்.ராதா நினைவுநாள் இன்று.. 'எம்.ஆர்.ராதா லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியால் சுட்டார்' -என அரசுத் தரப்பு வக்கீல் நீதிமனாறத்தில் குற்றம் சாட்டிக் கொண்டே போக, ஒருகட்டத்தில் கடுப்பான ராதா, "யுவர் ஆனர். வழக்கில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். 'லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியால் ராதா சுட்டார்' என அரசுத் தரப்பு வக்கீல் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். துப்பாக்கியால் சுட்டதில் நானும் சாகவில்லை. ராமச்சந்திரனும் சாகவில்லை. யாரையும் கொல்லாத ஒரு துப்பாக்கிக்கு லைசென்ஸ் தேவையா?" எனக் கேட்க, அதிர்ந்தது நீதிமன்றம். ஆம் இது எம்ஜியார் சுடப்பட்ட வழக்கில் எம்.ஆர்.ராதா நீதி மன்றத்தில் கூறிய வார்த்தைகள்... துப்பாக்கிச் சூடு வழக்கு மிக விரைவாக நடந்தது. நீதிபதி லட்சுமணன் தீர்ப்பை வாசித்தார். ராதாவுக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து ராதா உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தார். மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அப...