எம்ஜியாரும் கருணாநிதியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான் மது விலக்கு விலக்கி கொள்ளப்பட்ட நாள் 1971 ஆகஸ்ட் 30
எம்ஜியாரும் கருணாநிதியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான் மது விலக்கு விலக்கி கொள்ளப்பட்ட நாள் 1971 ஆகஸ்ட் 30 அது 1971-ம் வருடம். கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்த ராஜாஜி, மதுவிலக்கை ரத்து செய்தால் எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படும் என கடுமையாக வாதாடினார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும் என கருணாநிதி கூறியபோது, அவர் மதுவிலக்கு கொள்கையில் அந்தர் பல்டி அடித்திருக்கிறார் என்றே பெரும்பாலானோர் விமர்சனத்தை முன்வைத்தனர். 1971 ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் தமிழக அரசியல் என்ன நடந்தது. மாநிலத்தில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது எப்படி என்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் நினைவு கூர்ந்துள்ளனர். அந்த வருடம்தான் (1971), மாநிலத்தின் பொருளாதார சூழலை காரணம் காட்டி அப்போதைய முதல்வர் கருணாநிதி மதுவிலக்கை ரத்து செய்ய முடிவு செய்தார். அப்போது நாடு முழுவதிலும் குஜராத், தமிழகம் என இரு மாநிலங்களில் மட்டுமே மதுவிலக்கு அமலில் இருந்தது. மதுவிலக்கை ரத்து செய்ய முடிவு செய்த போது கருணாநிதி, "நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படு...