ALEXANDER PUSHKIN ,RUSSIAN WRITER BORN 1799 JUNE 6 -1837 FEBRUARY 10
ALEXANDER PUSHKIN ,RUSSIAN WRITER BORN 1799 JUNE 6 -1837 FEBRUARY 10 அலெக்சாந்தர் செர்கேயெவிச் பூஷ்கின் (Aleksandr Sergeyevich Pushkin,[1] உருசியம்: Алекса́ндр Серге́евич Пу́шкин, சூன் 6 [யூ.நா. மே 26] 1799 - பெப்ரவரி 10 [யூ.நா. சனவரி 29] 1837) உருசிய மொழியின் ஒரு சிறந்த கவிஞர், நாடகாசிரியர், எழுத்தாளர்.[2] மிகப்பெரிய கவிஞராக பலரால் கருதப்படும் இவர் நவீன உருசிய இலக்கியத்தின் நிறுவனர். பூஷ்கின் தனது கவிதைகளிலும் நாடகங்களிலும் உரைநடையைக் கையாள்வதில் முன்னோடியாகவிருந்தார். அத்துடன் ரஷ்ய இலக்கியத்தில் ஒரு தனித்துவமான கதைசொல்லும் பாங்கையும் உருவாக்கியிருந்தார். இவை முன்னெப்போதுமில்லாத அளவில் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தின. வாழ்க்கை அலெக்சாந்தர் புஷ்கின் ரஷ்ய உயர்குடியைச் சேர்ந்த செர்கேய் புஷ்கினுக்கும் நதேழ்தா கண்ணிபாலுக்கும் மகனாக 1799ல் பிறந்தார். தன் மைத்துனரான ஜார்ஜா த அந்தேசுடனான துப்பாக்கிச் சண்டையில் குண்டடிபட்டு இறந்தார். அலெக்சாண்டர் புஷ்கின் ருஷ்ய இலக்கிய,அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத, மறக்க முடியாத படைப்பாளி. ஆம், அவர் சரி...