NAANUM ORU PENN MOVIE REVIEW
NAANUM ORU PENN MOVIE REVIEW நம் ஊரில் கருப் பாக இருப்பவர்களை ஏதோ பாவம் செய்தவர்களைப் போல பார்க்கிறார்கள். அந்த மாதிரி ஒரு பெண்ணை மையமாக வைத்து எடுத்ததுதான் ஏவி.எம்மின் ‘நானும் ஒரு பெண்’ திரைப்படம். ‘கருப்பாக பிறந்தது அந்தப் பெண்ணின் குற்றமா’ என்கிற கோணத்தில் அந்தப் பெண் வருத்தத்தை சுமக்கிற பின்னணியில் கதை நகரும். இயக்கம் ஏ.சி.திருலோகசந்தர். ‘நானும் ஒரு பெண்’ படத்துக்கு எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி நடிக்க ஒப்பந்தமானார்கள். லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் நாடகத்தில் இருந்து வந்தவர். அவரது நடிப்பு, வசன உச்சரிப்புப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. நாயகி விஜயகுமாரி, கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக வெளிப்படுத்தும் நடிகை. இவர்களோடு எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா, நாகேஷ், சி.கே.சரஸ்வதி, அறிமுகம் ஏவி.எம்.ராஜன், புஷ்பலதா என்று திறமையான நடிகர், நடிகைகள் இணைந்தனர். அந்தக் கதையும், கதாபாத்திரங்களும் சிறந்த முறையில் அமைந்ததால் மிகப் பெரிய வெற்றி பெற்று, மத்திய அரசின் விருதும் கிடைத்தது. எஸ்.வி.ரங்காராவ் ஒரு ஜமீன்தார். இறந்து போன மனைவியின் புகைப் படத்துக்கு முன் நின்று ஒ...