Posts

Showing posts with the label CRY

MIDNIGHT CRY OF A CHILD

Image
குழந்தையின் நடு நிசி அழுகை  மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு கிராமம்... தென்னந்தோப்புகளும் பாக்கு தோட்டங்களும், ரப்பர் தோட்டங்களும் நிறைந்தபகுதி அது! நிலத்தை ஒட்டிய பகுதியில் வீடுகட்டி ஒரு சிறிய குடும்பம் வாழ்ந்துகொண்டு இருந்தது! நடுத்தர வயதை ஒட்டிய ஒரு கணவன் மனைவி, அவர்களுக்கு பத்து வயதில் ஒரு பெண் குழந்தை! ஒரு நாள் அந்த வீட்டை சேர்ந்த பெண் தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, மாடு களுக்கு புல் அறுப்பதற்காக தென்னந்தோப்புக்கு செல்கிறாள்! அவள் புல் அறுத்துக்கொண்டு இருக்கும்போது ஒரு குழந்தையின் அழுகுரல் கொஞ்சம் கொஞ்சமாக கேட்கிறது! அவள் பதட்டத்துடன் எங்கிருந்து வருகிறது என்று தேட கொஞ்ச நேரத்தில் அந்த குழந்தையின் அழுகுரல் நின்று விடுகிறது! திரும்பவும் மீண்டும் ஒரு முறை அதே அழுகுரல் கேட்கிறது! பயத்துடன் அந்த அழுகுரல் வரும் திசையை நோக்கி நடக்கிறாள்! ஒரு தென்னை மரத்தில் இருந்து அந்த அழுகுரல் வருவதை கவனிக்கிறாள்! தென்னை மரத்தில் ஏதாவது குழந்தை இருக்கிறதா என்று மேலே பார்த்தபடி தேடுகிறாள்! எந்த குழந்தையும் அவள் கண்ணுக்கு தெரியவில்லை! ஒர...