THE STORY,F KALINGARAYAN,
THE STORY OF KALINGARAYAN காலிங்கராயன் வரலாறு: கி.பி 13 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒரு மாமனிதனின் வரலாறு. தமிழ்நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள கொங்கு நாட்டில் பிறந்த ஒரு மாமனிதன் காலிங்கராயன். அக்காலத்தில் கொங்கு நாடு 24 உள்நாடுகளாகப் பிரிக்கப்பட்டுப் பாளைக்காரர்களால் ஆளப்பட்டு வந்தது. அவற்றுள் ஒன்றான ஈரோடிற்க்கு அருகில் உள்ள பூந்துறையுயைத் தலைமையிடமாகக் கொண்ட பூந்துறை நாட்டில், வெள்ளொடு அருகில் உள்ள கனகபூரம் என்ற சிற்றூரில் கி.பி 1235 ஆம் ஆண்டு காலிங்கராயன் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தான். அவனது இயற்பெயர் லிங்கையன். லிங்கையன் சிறுவனாக இருந்த போது சோழ மன்னர் களால் கொங்கு நாடு ஆளப்பட்டு வந்தது. லிங்கையனுக்குச் சுமார் 20 வயது ஆனபோது பாண்டியன் கொங்கு நாட்டின் மீது படையெடுத்து வென்று அதனைச் சோழர்களிடமிருந்து கைப்பற்றினான். பாண்டியன் ஆட்சி மலர்ந்தது. கொங்கு நாட்டின் துணை அரசனாக நியமிக்கப்பட்ட சடையவர்மன் வீர பாண்டியன் ஆட்சியின் கீழ் பாளையக்காரர்கள் வந்தனர். இளைஞன் லிங்கையன் பாண்டியர் போர்த்திறத்தை நேரில் கண்டு வியந்து பாண்டியனின் படையில் சேர்ந்தான். பாண்ட...