Tuesday 9 June 2020

THE STORY,F KALINGARAYAN,



THE STORY OF KALINGARAYAN

காலிங்கராயன் வரலாறு:

கி.பி 13 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒரு மாமனிதனின் வரலாறு. தமிழ்நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள கொங்கு நாட்டில் பிறந்த ஒரு மாமனிதன் காலிங்கராயன். அக்காலத்தில் கொங்கு நாடு 24 உள்நாடுகளாகப் பிரிக்கப்பட்டுப் பாளைக்காரர்களால் ஆளப்பட்டு வந்தது. அவற்றுள் ஒன்றான ஈரோடிற்க்கு அருகில் உள்ள பூந்துறையுயைத் தலைமையிடமாகக் கொண்ட பூந்துறை நாட்டில், வெள்ளொடு அருகில் உள்ள கனகபூரம் என்ற சிற்றூரில் கி.பி 1235 ஆம் ஆண்டு காலிங்கராயன் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தான். அவனது இயற்பெயர் லிங்கையன்.

லிங்கையன் சிறுவனாக இருந்த போது சோழ மன்னர் களால் கொங்கு நாடு ஆளப்பட்டு வந்தது. லிங்கையனுக்குச் சுமார் 20 வயது ஆனபோது பாண்டியன் கொங்கு நாட்டின் மீது படையெடுத்து வென்று அதனைச் சோழர்களிடமிருந்து கைப்பற்றினான். பாண்டியன் ஆட்சி மலர்ந்தது. கொங்கு நாட்டின் துணை அரசனாக நியமிக்கப்பட்ட சடையவர்மன் வீர பாண்டியன் ஆட்சியின் கீழ் பாளையக்காரர்கள் வந்தனர்.

இளைஞன் லிங்கையன் பாண்டியர் போர்த்திறத்தை நேரில் கண்டு வியந்து பாண்டியனின் படையில் சேர்ந்தான். பாண்டியன் நடத்திய பல்வேறு போர்களில் லிங்கையன் காட்டிய திறமையைக் கண்டு வியந்த பாண்டிய மன்னன் அவனுக்கு காலிங்காரயன் என்று உயர் பட்டம் வழங்கியதோடு படைத்தலைவனாகவும் பின்னர் போர் நடத்துவதில் மன்னனுக்கு ஆலோசனை கூறும் வேந்தமைச்சனாகவும் ஆக்கினான்.

அதன் பின் கொங்கு நாட்டின் பூந்துறை நாட்டிற்கு அரசியல் அதிகாரியாக நியமித்து அதனை ஆளும் பொறுப்பையும் அளித்தான். உத்திர மந்திரியாகவும் ஆக்கினான்.

நஞ்சையன் என்ற செல்வந்தனின் மகனாக பிறந்த லிங்கையன் இளம் வயதில் தமிழ்மொழி, கணிதம், பூகோளம் ஆகியவற்றை முறையாக கற்றவன். இளமையிலேயே நாட்டுப் பற்று மிகுந்தவனாக இருந்த காலிங்காராயன், பூந்துறை நாடு வறட்சியில் வாடுவதைக் கண்டு கவலையடைந்தான். அதுவும், அருகே காவிரியாறு ஆண்டு முழுவதும் வற்றாத ஜீவ நதியகா ஒடிக் கொண்டிருந்தும், தனது நாடு வறண்டு கிடந்ததை பார்த்து அவன் வேதனை அதிகமாயிற்று. பூந்துறை நாடு மேடு பள்ளமான குறிஞ்சி நிலம் நிலமானதாலும், காவிரி பள்ளத்தில் ஓடியதாலும், அதன் தண்ணீரைப் பயன்படுத்த இயலவில்லை.

பின் பூந்துறை நாட்டின் வடக்குக் பகுதியில் ஓடிய காவிரியின் உபநதிகளில் ஒன்றான பவானியாற்றில் அணை கட்டி வாய்க்கால் மூலம் தன்னாட்டை முடிந்தவரை வளப்படுத்த எண்ணிப் பாண்டியனின் அனுமதிக்காகவும், ஆலோசனைக்காகவும் உதவி வேண்டியும் மதுரை சென்றான்.


வீரமும், விவேகமும் ஒருங்கே பெற்ற கலிங்காராயனை நினைத்துப் பூரித்து போயிருந்த பாண்டிய மன்னன், அவனது நாட்டு பற்றையும் கண்டு, அனைத்து உதவிகளையும் அளிக்க உறுதி தந்து, வாய்க்கால் பணி தொடங்க உளப்பூர்வமான அனுமதியும் அளித்தான்.

அணை கட்டிய காலம்

காலிங்காரயன் அணை கட்டி கால்வாய் வெட்டிய ஆண்டு கலியுக சகாப்தம் 2000 என்று வம்சாவளியும் ஆங்கில வரலாற்று நூலும் கூறுகின்றன. அதன்படி கால்வாய் வெட்டிய காலம் கி.மு. 1101 ஆகிறது. இவ்வாண்டு மிகைப்படக் கூறலாகவே இருக்கின்றது. ஆனால் அவை இரண்டும் குறிப்பிடும் பரம்பரையின் ஆட்சி ஆண்டுகளின் தொகைகளை கூட்டிப்பார்க்கும் பொழுது காலம் கி.பி.13-ம் நூற்றாண்டுதான் வருகிறது. அக்கலாமே கல்வெட்டுகள் அனைத்திலும் காலிங்காராயன் பெயர் கூறப்படும் காலமாகும். கி.பி.-13ம் நூற்றாண்டு கல்வெட்டுக்களிலே மட்டும் காலிங்காராயன் பெயரைக்
காண்கின்றோம். கி.பி.1800-ல் எழுதப்பட்ட ஸ்ரீகைபீது" 582 ஆண்டுகளுக்கு முன்பு கால்வாய் வெட்டப்பட்டததாக கூறுகிறது. கி.பி.1800-ல் இக்கால்வாயைப் பார்வையிட்ட புக்கானன் 400 ஆண்டுகளுக்கு முன் வெட்டப்பட்டது என்று கூறுகின்றார். கல்வெட்டுகளின் கூற்றுப்படி கி.பி.1265-ல் வீரபாண்டியனிடம் அரசியல் அலுவனாக அமர்ந்த காலிங்காராயன் 12 ஆண்டுகாலம் முயன்று கி.பி.1270-ம் ஆண்டு தொடங்கி கி.பி.1282-ம் ஆண்டு பணியை முடித்தான் என்று நம்புவதற்கு போதிய ஆதாரங்கள் தொல்பொருள் ஆவண காப்பகம் எழும்பூர் சென்னையில் உள்ளது. ஜமீன் ஊத்துக்குளி அகத்தூரம்மன் கோயில் கல்வெட்டில் சாலிவாகன சகாப்தம் 1203 கலியுக சகாப்தம் 4382 விய வருடம் தை மாதம் 5-ம் தேதி அணை கட்டி முடித்தாக கூறப்படுகிறது. அதற்கு சரியான ஆங்கில ஆண்டு கி.பி.1282-ம் ஆகும்.

நதிகள் இணைப்பின் முன்னோடி

காலிங்காராயன் கால்வாயில் நீர் மிகுதியாக நொய்யலில் கலப்பதைக் கண்ட காலிங்காராயன் நொய்யலில் ஒரு அணை கட்டி கால்வாய் மூலம் அமராவதி வரை பாசனம் பெறச் செய்ய எண்ணினான். நொய்யலில் ஒரு அணையும் கட்டப்பட்டது. இப்போது ஓட்டை அணை என்ற பெயரில் அழைக்கப்படும் அந்த அணை உடைந்து கிடக்கிறது. நொய்யலின் தென் கரையில் விதரி அத்திப்பாளையத்தில் இருந்து அமராவதி வரை வாய்க்கால் வெட்டும் முயற்சி நடைப்பெற்றது. வெட்டிய கால்வாயின் பகுதி ஆங்காங்கே பல இடங்களில் காணப்படுகின்றன. 27.03.1872ல் அளித்த திட்டம் ஒன்றில் வெட்டன்பர்ன் காலிங்கராயன் கால்வாய் தண்ணீரை நொய்யலில் தேக்கி அதிலிருந்து தென் கரையில் 13000 ஏக்கர் பாயும் வண்ணம் ஒரு திட்டத்தை ரூ.8,71,000 - மதிப்பீட்டில் நிறைவேற்றலாம் என்று கூறியுள்ளார்.

07.01.1800ல் புக்காணன் காலிங்கராயன் விரிவு திட்டம் பற்றி கூறியுள்ளார். எனவே பவானி, நொய்யல், அமராவதி ஆகிய மூன்று நதிகளையும் இணைக்க முயன்றுதன் மூலம் காலிங்கராயன் நதிகள் இணைப்பில் இந்தியாவின் முன்னோடியாக திகழ்கின்றார்.

வாய்க்கால் கோணலின் காரணம்:

பவானியில் தொடங்கி, நொய்யலில் கலக்கும் வரை காலிங்கராயன் வாய்க்கால் வளைந்து நெளிந்து மிகவும் கோணல் கோணலாக இருக்கிறது. அதனால்தான் கோண வாய்க்கால் என்று கூறுகின்றனர். எனவேதான் பாம்பு வழி கட்டியாக கதை உலவுகிறது. பவானி அணை கடல் மட்டத்திலிருந்து 534 அடி உயரம். நொய்யல் ஆற்றில் காலிங்கராயன் கால்வாய் கலக்கும் இடம் கடல் மட்டத்திலிறுந்து 412.48 அடி உயரமாகும். நேர்வழியாக பவானிக்கும் நொய்யலுக்கும் இடையே உள்ள தூரம் 32 மைல். ஆனால் வளைந்து செல்வதால் கால்வாயின் நீளம் 56 ½ மைல் ஆகிறது. காலிங்கராயன் கால்வாய் பவானியிலிருந்து நேராக நொய்யல் வரை செல்லுமானால் வயலுக்கு தண்ணீர் பாயாமல் நேராக விரைந்து ஓடி நொய்யலில் விழுந்து விடும். எனவேதான் நீர் தேங்கி நின்று வயலுக்கு வளப்படுத்துவதாகவும், நீரின் வேகத்தை குறைத்து கரைக்கு வெள்ளத்தினால் ஏற்படும் அழிவுகளைத் தடுப்பதற்காகவும், கால்வாய் வளைந்து வளைந்து மேட்டுப்பாங்கான இடத்திலேயே தொடர்ந்து செல்கிறது. இது காலிங்கராயனின் பொறியியல் திறமையை நன்கு வெளிப்படுத்துகிறது.

கிளை வாய்க்கால்:

காலிங்கராயன் கால்வாயில் மூன்று கிளை வாய்க்கால்கள் உள்ளன.

1. மலையம்பாளையம் பிரிவு வாய்க்கால்

காலிங்கராயன் கால்வாயில் 31.06.430 மைலில் பழனிக்கவுண்டன்பாளையம் அருகே பிரிந்து சுமார் 4 மைல் தூரம் காலிங்கராயன் கால்வாய்க்கு இணையாகவே ஓடி மலையம்பாளையம் அருகே காலிங்கராயன் கால்வாயுடனேயே கலக்கிறது. இக்கால்வாய் சுமார் 675 எக்கர் நிலங்களை வளப்டுத்துகிறது.

2. பெரியவட்டம் பரிசோதனை வாய்க்கால்:

நாகமநாய்க்கன்பாளையத்தில் காலிங்கராயன் கால்வாய் நொய்யலில் கலப்பதற்காக ஆவுடையார்பாறை நோக்கி பாயும் இடத்தில் ஒரு தடுப்பை ஏற்படுத்தி அங்கிருந்து ஒரு கால்வாய் தென்மேற்காக கொண்டு செல்கின்றனர். அது பெரியவட்டம் என்ற ஊரைக் கடந்து சிட்டப்புள்ளாபாளையம் என்கின்ற ஊரில் நொய்யலோடு கலக்கின்றது. அதற்கு காலிங்கராயன் கால்வாய் என்று பெயர் கூறி அழைகின்றனர். இக்கால்வாய் 625 எக்கர் நீலத்திற்கு நீர் அளிக்கின்றது. இதன் நீளம் 1.5.600 மைல் ஆகும்

3. ஆவுடையார்பாறை பிரிவு வாய்க்கால்:

ஆவுடையார்பாறையில் காலிங்கராயன் கால்வாய் நொய்யலோடு கலக்கும் இடத்துக்கு அருகில் மைல் 56.5.234 – ல் கால்வாய்யை ஒரு கலிங்கின் மூலமாக தடுத்து தண்ணீரை மேற்கு நோக்கி கொண்டு செல்கின்றனர். அதற்கும் காலிங்கராயன் கால்வாய் என்று பெயர் கூறுகின்றனர். 200 எக்கர்களை வலப்படுத்தும் இக்கால்வாய் புதுத்தோட்டம் என்ற இடத்தில் நொய்யல் ஆற்றோடு காலக்கிறது. இதன் நீளம் ¼ மைல்

கல்வெட்டு

கோவை மாவட்ட ஆட்சி தலைவர் தூறூறி துறையும், பொறியியலாளர் பேப்பர் துறையும் 1832 – ல் இக்கால்வாய் பழுதுப்பார்த்த விபரத்தை இக் கல்வெட்டு கூறுகிறது. மகாராச கனம் பொருந்திய கும்பினியார் அவர்கள் ஐ. டி. தூறூறி துரை அவர்களுடைய பிரின்சிபால் கலெக்டர் அதிகாரத்தில் பேப்பர் துரை அவர்கள் சிவில் என்ஜீனியிரின் அசூர் மாமரத்து சூப்பிரண்டு சுப்புராயராயராலே பாலம் பாகல்வாடம் பூர்த்தி செய்யப்பட்டது.
கொம்பனை கல்வெட்டு:

மகாராச கனம் பொருந்திய கும்பினியார்களாலே ஐார்ஜி தூறூறி துறை அவர்கள் பிரின்சிபால் கலெக்டர் அதிகாரத்தில் பேப்பர் துறை அவர்கள் அசூர் மாமரத்து சூப்பிரண்டு சுப்புராயராயராலே கீழ்ப்பாலம் பூர்த்தியாய் 1832 வருடம் செப்டம்பர் மாதம் கட்டி முடிக்கபட்டது.

காலிங்கராயன் சாபம்:

காலிங்கராயனைப் பற்றிய ஆச்சரியகரமான உண்மை என்னவென்றால், அவன் அரும்பாடுபட்டு வெட்டிய வாய்காலை தன் சொந்த நிலம் பாய்ச்ச வகை செய்யவில்லை. சாத்தந்தை கோத்திரத்தைச் சேர்ந்த தன் சொந்த பங்காளிகளுக்கும் இந்த வாய்க்கால் பயன்படவில்லை. பங்காளிகளை வெள்ளோட்டிலிருந்து தான் ஏற்படுத்திய வெவ்வேறு ஊர்களுக்குக் குடிபெயருமாறு சொல்லிவிட்டு பெரும்பகுதி தனது குடும்பப் பணத்தைக் கொண்டு வெட்டிய வாய்க்காலை நாட்டுடைமை ஆக்கிவிட்டு தானும், தன் குடும்பமும் நாட்டின் எல்லையை தாண்டி காவிடிக்கா நாட்டில் பொள்ளாச்சி அருகில் உள்ள ஊற்றுக்குழிக்குச் சென்றுவிட்டார்கள். இந்த செய்தியை கேட்டு கலங்காதவர்கள், அன்று பூந்துறை நாட்டில் யாரும் இருந்திருக்க முடியாது.


காலிங்கராயன் கதை


ஈரோடு மாவட்டமும் காலிங்கராயன் என்ற பெயரும் பிரிக்க முடியாதவை. மாவட்டத்தின் ஒரு பகுதி முழுவதும் மஞ்சளாக விளைந்து செழிக்க வலுவான காரணம் காலிங்கராயன் பாசன வாய்க்கால்.

பவானியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து பிரியும் காலிங்கராயன் பாசன வாய்க்காலில் ஆண்டில் பத்து மாதங்களுக்கும் மேலாகத் தழும்பத் தழும்பத் தண்ணீர் சென்றுகொண்டிருக்கும்.

இந்த வாய்க்காலுக்குப் பின்னால் வெவ்வேறு விதமான வரலாறுகள். வெறும் கதைகளோ என்றும் எண்ணச் செய்யும் தகவல்கள். ஆனால், மறுக்க முடியாத உண்மை, தொலைநோக்குடன் இந்தத் தடுப்பு அணையைக் கட்டி வாய்க்காலை வெட்டியவர் - காலிங்கராயன்.

பவானியில் தொடங்கி நொய்யல் வரை கோணல் மாணலாகச் சென்று, வழியெங்கும் கொங்கு மண்ணைச் செழிக்கச் செய்கிறது காலிங்கராயன் வாய்க்கால்.

இந்தக் கோணல்களுக்குத் தொழில்நுட்ப ரீதியாக ஒரு காரணம் கூறப்படுகிறது. வாய்க்கால் தொடங்கு மிடத்தில் கடல் மட்டத்திலிருந்து 534 அடி உயரம். முடிகிற இடமான நொய்யலில் 412 அடி. நேர்க்கோட்டில் தொலைவு 50 கி.மீ. இரண்டுக்கும் இடையேயுள்ள மேடு பள்ளம் காரணமாகத் தண்ணீர் விரைந் தோடிவிடுவதைத் தடுத்து வேகத்தைக் குறைப்பதற்காகவே இத்தனை கோணல்கள்.



 வளைந்து வளைந்து செல்வதால் வாய்க்காலின் நீளமும் சுமார் 90 கி.மீ. ஆக வளர்ந்து, இருபுறமும் பயனடையும் பரப்பும் அதிகரிக்கிறது. அன்றைய தமிழனின் தொழில்நுட்ப சாதனை!

தற்போது காலிங்கராயன் பாசன வாய்க்காலில் 786 மதகுகளின் வழியே பதிவு செய்யப்பட்ட 15,743 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. உண்மையில் பதிவு செய்யப் படாத நிலங்களின் பரப்பும் மேலும் சிலபல ஆயிரங்கள் இருக்கும்.

யார் இந்தக் காலிங்கராயன்? காலிங்கராயனின் கதைதான் என்ன? அறிந்துகொள்ள நமக்குப் பேருதவி யாக இருக்கிறது, ‘ஊற்றுக்குழி பாளையக்காரன் காலிங்கராயன் வமிசாவளி’!



இந்த வமிசாவளியில் ஒன்றேபோல இருந்தாலும் இரண்டு பகுதிகள் என்று கூறலாம். முதல் பகுதி, காலிங்கராயன் பெயர்க் காரணமும் காலிங்கராயன் வாய்க்கால் உருவான கதையும். இரண்டாம் பகுதியில் காலிங்கராயன் பரம்பரையில் நேரிட்டதொரு வீழ்ச்சியும் பின்னர் எழுந்துநின்று நிலைப்படுத்திக் கொண்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வமிசாவளி, அதே தமிழில்.

•••

ஊற்றுக்குழி பாளையக்காரன் காலிங்கராயன் வமிசாவளி தாராபுரம் துக்குடி பொள்ளாச்சி தாலுகா ஊற்றுக்குழி பாளையக்காரர் காலிங்கராயன் கவுண்டர் எனப்பட்டவருடைய வமிசாவளி முதலான கைபீது:

என்னவென்றால்:-

பூர்வத்தில் சோழ தேசத்தில் தொண்டை மண்டலத்து வேளாளரென்று பேர் பிரசித்திபட்ட நற்குடி நாற்பத்தெண்ணாயிரம் பசுங்குடி பன்னீராயிரம் ஆக அறுபதுனாயிரம் கோத்திரக்காரர்களில் பிற்காலம் - ரிஷபகிரி - சோழராஜா மகளை முரை சரிந்த சேர ராஜா பாணிக்கிரஹணம் பண்ணிக்கொண்ட படியினாலே அந்தச் சமயத்தில் நற்குடி நாற்பத்தியெண்ணாயிரம் குடியில் எண்ணாயிரம் குடி சீதனம் கொடுத்த படியினாலே - அப்போ வரப்பட்ட வேளாளருக்கு - தென்திசை நோக்கி வந்தபடியினாலே – தென்திசை வேளாளரென்று பேர் வரப்பட்டது.

சேர தேசத்துக்கு வரப்பட்ட வேளாளருக்கு - சேரனுக்கு கொங்கணரெண்ணும் பேர் இருக்கிற படியினாலே - கொங்கு வேளாளரென்றும் - கொங்கு இருபத்தினாலு நாடுயென்றும் - யேற்படுத்தி இறுக்கும் நாளையில் - அக்காலத்தில் - யென் வம்சஸ்தனான காலிங்க கவுண்டன் என்கிறவன் பூந்துரைநாட்டுக்கு காணியாள (னுஇ) (னுக்கு) மேல்கரை முப்பத்தி ரெண்டு கிறாமத்துக்குச் சேர்ந்த - வெள்ளோடு குடியிருப்புக் காரனாயி - தம்முடய இஷ்ட தெய்வமான - சர்வேஸ்வர பாடகவல்லி நாச்சாற் - தேவஸ்தானம் சீறனேதாரணம் பண்ணிக்கொண்டிருந்தான்...



பூந்துரை னாட்டுக்கு - னட்டானஇ - வெள்ளோட்டு குடியிறுப்புக் காரனஇ யிருக்கும்னாளையில் - கங்கை குலம் - சரதந்த கோத்திரம் காலிங்ககவுண்டன்- யென்குங்குர - தன்னுடைய குமாரனுக்கு – கலியாணம் பண்ண வேணுமென்று நினைச்சு - மாமன் மச்சுனனான - பண்ணகுலத்தாளி வீட்டுல - பெண் கேட்டு கலியாணம் செய்யத் தக்கதாக யோசிச்சு –பெண் சம்மதமாகி அந்த றாத்திரி சாப்புடுகுரதுக்கு சமயல் பண்ணுகிறவன் வந்து இவற்களுக்கு சமயல் பண்ணு குரதுக்கு யெந்த அரிசி போடுகிறது யென்று கேட்க அவாள் கம்பு வெளயிற சீற்மையிலேயிருக்கிற பேர்களுக்கு யெந்த அரிசி யென்று தெரிய போகுது பரறசிதானே போடு போவென்று சொல்ல அதுசேதி மேற்படி காலிங்க கவுண்டன் கேட்டு அவாள் வீட்டிலே சாப்புடாத படிக்கு இறுந்து நெல்லு வெளையும்படியாக நீர் பாங்கு உண்டுபண்ணிக் கொண்டு உங்கள் வீட்டுப் பெண் கொண்டு சாப்பிடுகுரோ மென்று செபுதம் கோறிக்கொண்டு வந்துதம் வூருலே வந்துசேர்ந்து மனதிலே சூடு தோணி இருக்கும் நாளையில் இவர் இஷ்ட தெய்வமான சர்வேஸ்வரரை தன்னுடைய அபீஷ்டம் சித்த வேணுமென்று நினைச்சுயிருக்கு வேளையில் றாத்திரி சொப்பனத்திலே ஒரு விருத பிராமண ரூபமாய் வந்து இந்தச் சர்ப்பம் போற வளியாக வாக்கியால் வெட்டி வைக்கச் சொல்லி காரணமாக சொப்பணமாச்சுது அந்த சொப்பன மானவுடனே கண்முளிச்சு பாற்கும் மிடத்தில் ஒரு சர்ப்பம் பிரதிட்சமாக யிருந்து தான் கண்டு இருக்கப்பட்ட சொப்பனத்தை கண்டு அறிய வேணுமென்று நினைச்சு வீடு விட்டுவெளிஇலே வந்த சமயத்தில் சற்ப்பம் இவனைக் கண்டு முன்னே நடந்தது. அந்த சற்ப்பத்தைத் துடர்ந்து போய்யிந்த வழியாக போகுதென்ரு அடையாளங்கள் போட்டுக்கொண்டு வருகிற போது கொடுமுடி சேத்திரத்திலே சற்ப்பம் நிண்ணுது.



அந்த சற்ப்பம் போன போக்குலே வாக்கியாலு வெட்டி வைக்க வேணுமென்று னினைச்சு பவானி ஆத்தில குறுக்க அணை கட்டி வைக்க வேணுமென்கிறதாக நினைச்சு யிருந்த சமயத்தில் பவானி கூடல் ஸ்தளத்துக்கு மேல் புறத்தில் பவானி யாத்துல சர்ப்பம் குறுக்கே படுத்துக் கொண்டது. அந்த யிடத்துலே அணைக் கட்டி வைக்க வேணுமென்று பவானி கூடலுக்கே வடக்கை வூறாச்சி மலையும் தடமும் சுத்த கிறயத்துக்கு வாங்கி அணை கட்டுகிற சமயத்தில் வெள்ளை வேட்டுவற்யென்ங்குற பாளையக்காரன் அணை கட்டுகுர யெல்லை தன்னதென்று சண்டை பண்ணின படியினாலே வெள்ளை வேட்டுவரை செயிச்சு அணையும் கட்டி வெகு திரவியங்கள் செலவளிச்சு சற்பம் போகியிருந்த அடையாளங்களைப் பிடிச்சு வாக்கியால் வெட்டி கொடுமுடி வரைக்கும் வாக்கியால் வெட்டி வச்சு பவானி அணை முதல் கொடுமுடி ஸ்தளத்து ஆத்து வரைக்கும் முக்காத வழி தூரத்துக்கு சற்ப்பம் போன போக்குலே வாக்கியால் வெட்டின யேளு காத வழி நடை கோணக் கோணலாக வாக்கியால் வெட்டி வச்சான்.

அந்தச் சற்ப்பம் போக்குலே வாக்கியால் வெட்டி வச்சு பவானி ஆத்துலே - சற்ப்பம் படுத்துயிறுந்த இடத்துல - அணையும் கட்டி விச்சு படியினாலே காளிங்க கவுண்டன் யென்னும் பேற்வரப்பட்டு பிரசித்திப்பட்டவனாய் இருக்கும் நாளையில் முன்னாலே சபுத்தம் கோறியிருக்கப்பட்ட பெண்ணை குலத்துல தன்புள்ளைக்கு கலியாணமும் செய்துகொண்டு அம்ச புராணமாயி தெய்வ கடாட்சத்துனால சற்ப்பத்து னாமதேயமான காளிங்கரென்கிற நாமதேயமும் வேளாள சாதியானபடியினாலே கவுண்டர் என்ற நாமதேயமும் இரண்டு நாமதேயமும் சேர்ந்து காளிங்க கவுண்டர் யென்குர பேற் பிறசுத்திப் பவறாயி தான் கட்டிவச்ச அணைக்கு காலிங்க கவுண்டன் அணையென்றும் காலிங்கக் கவுண்டன் வாக்கியா லென்றும் தான் உண்டு பண்ணின நீற்ப்பாங்கு நிலத்தில் வெளயப்பட்ட காலிங்க நெல்லுயென்று வெளயப் பண்ணி சம்மந்த பாத்தியங்களுஞ் செய்துகொண்டுயிருந்தான்.



இப்படி வாக்கியால் வெட்டி அணை கட்டி பிள்ளைக்கு கலியாணம் பண்ணுகிற வரைக்கும் சபுதம் கோரி தீட்சை வளைத்துக்கொண்டு யிருக்கும் சமயத்தில் தெய்வ கடாட்சத்தினாலே மனோபீஷ்டம் நெறவேறி யிருக்கும் சமயத்தில் ஒரு நாள் ஆயாசத்துடனே நித்திரை பண்ணிக்கொண்டு யிருக்கிற சமயத்திலே ஒரு னாசுவண் திட்சை மயிரை வாங்கிப் போட்டு நிலைக்கண்ணாடியை யெதிரே வச்சு வணக்கத்துடனே நிண்ணுக்கொண்டு யிருந்தான். நித்திரை தெளிஞ்சி நெலை கண்ணாடி பார்த்தவுடனே ஆயுஷகாறம் மாகியிருந்தபடியினாலே சந்தோஷம் வந்து நாசுவனைப் பார்த்து உனக்கு என்ன வேணுமென்று கேட்டார். அந்த னாசுவன் யென் பேர் வெளங்கியிறுக்கும்படியாக பண்ண வேணுமென்று மனுவு கேட்டுக்கொண்ட படியினாலே தாம் கட்டுவிச்சு அணையோடும் தான் இறுக்கப்பட்ட காலிங்கன் பாளையத்துக்கு தென்பிறம் நாசுவன் பேறாலே வூரு உண்டுபண்ணி னாசுவன்பாளையமென்றும் பேர் விளங்க பண்ணி அந்த னாசுவனுக்கு அந்த பாளையம் சர்வ மானியமாகக் கொடுத்தார்.

இப்படிக்குக் காலிங்கறாயக் கவுண்டர் யென்கிற பேர் பிறசித்திப் பெற்றவராய் வெள்ளோட்டுக் குடியிருப்புக் காரராயி பூந்துறைனாட்டு நாடாதி பத்தியம் தாம் உண்டு பண்ணின அணை வாக்கியால் பரிபாலனம் பண்ணிக் கொண்டு புள்ளை புள்ளை தலைமுறைக்கும் காலிங்க கவுண்டன் என்கிற நாமதேயம் உண்டானவர்களாய்யிறுந்தார்கள்.



பவானி கூடலுலே கலிங்கக் கவுண்டன்யென் கிறவன் அணை கட்டி வச்சு மேற்பிடுறத்தி பண்ணினது. கலியுக சாகாபுதம் 2000 காலிங்க கவுண்டன் கட்டி யிருக்கப்பட்ட அனைஇலே மேற்படி கவுண்டனையும் சற்ப்பத்தேயும் சிலா பிறதிமை ரூபமாக கல்வெட்டி வச்சு சிலாசாசனமும் யெளுதியிருக்குரது அந்த அணை போட்டு யிறுக்கப்பட்ட இடத்தில் குடிகள் பறம்பரையாஇ வருஷயிறுதியும் உச்சவம் பண்ணிக்கொண்டு வருகுரது வருஷப் பிரதியும் காலிங்கக் கவுண்டன் பிறதிமைக்கி பூசை நெய்வேத்தியம் பண்ணிக்கொண்டு வந்தால் வெள்ளம் வந்து வெள்ளாண்மை வெளஞ்சுக்கொண்டு வருகிறது.

இப்படி ஈஸ்வரர் அனுக்கிறஹத்துநாலே மூர்த்தி கரம் உண்டாகியிருக்கிறது. இஸ்வறா அனுக்கிறஹத்துனாலே காலிங்க கவுண்டன் யென்ங்குர அம்சை புறுஷன் வம்ச பரம்பரையிலே காலிங்க கவுண்டற்யென்று பேர் வச்சுக்கொண்டு வருகிறது.

2

இப்படி காலிங்க கவுண்டர் என்கிற பேர் பிரசித்திப் பட்டவர்களாய் பலாட்டியனாய் வெள்ளோட்டு பூந்துரை னாடாதிபத்தியம் ஆண்டுகொண்டு வரும் நாளையிலே கொங்கு இருவத்தினாலு நாட்டுக்கும் பட்டக்காற்களாகி யிறுக்கப்பட்டவற்கள் சரியிருப்பும் சரிமறியாதிகளும் குடுக்கப்படாது யெந்று சொன்னதுனாலேயும் பூர்வத்தில் சேரமாம் பெறுமாள் சா(த்)தந்த கோத்திரகாற்களுக்கு கார் விடிக்கை நாடு பிறவும் பண்ணிக்கொடுத்து யிறுக்கிற படியினாலேயும் நாட்டு, பட்டக்காரர்கள் சரிமரியாதி நடக்க மாட்டாதென்று சொல்லிக் கொண்ட படியினாலே வெள்ளோடு விட்டு மணவெருப்புனாலே ஆணைமலை சரிவிலே தங்கள் காணியாட்சியான காவிடிக்கநாடு காடு கொண்டு வனமாயிருந்ததில் தங்கள் பசுமாடுகளை விட்டுயிருந்து மாடுகளை சம்ரட்சணை பண்ணுகுரதுக்காக தங்கள் சனங்கள் இருந்த படியினாலே காவிடிக்க நாட்டு வனத்துக்கு வந்து மாடுகளையும் பாத்து மா(ட்)டுகளுக்கு சமரட்சணைக்காக பட்டிகளும் போடுவிச்சு அஞ்சாறு காளைகளும் கட்டிவிச்சு கொங்குயிருவத்திநாலு நாட்டுக்கும் பாளையப்பட்டுகளுக்கும் இவற்களுக் கெல்லாம் அதிகமறியாதெகள் உண்டுபண்ணிக் கொள்ள வேணுமென்று நினைச்சு றாயசமுஸ்தானத்துக்குப் போனார்.

றாய சமுஸ்தானத்தில் காத்துக்கொண்டுயிருக்கும் நாளையில் பனிரெண்டு வருஷம் வரைக்கும் றாயரவர்கள் பேட்டியில்லாமல் கய்யிலே கொண்டு போன திரவியங் களெல்லாம் செலவழிந்து போய் கஷ்டப்பட்டுக் கொண்டு அதிவெஸனத்தை அடஞ்சவனாய் தன்னுடைய இஷ்ட தெய்வத்தைப் பிராத்தனைச் செய்துகொண்டு மனவயிரத்தை அடஞ்சவனாய் பெனுக்கொண்டை பட்டணத்துக்கு வெளியிலே தென்புறம் காளி கோவிலிலே போய் செத்திரமாகப் படுத்துக்கொண்டு இருந்தார்.



சுத்தவுபவாசத்துடனே காளி கோவிலிலே யிருக்கப்பட்ட காலிங்க கவுண்டன் சொப்பனத்துலே பனிரெண்டானாள் றாத்திரி றாயர் குமாரனுக்கு சித்த பிறம்மை பிடுச்சு அது னிவாரணம் யில்லாமல் யிருக்கிற படியினாலே நீ என்னுடைய சன்னியதானத்தில் இருக்கப் பட்ட விபூதியைக் கையிலே கொண்டு போய் அந்த சித்த பிறமையாயிருக்கப்பட்டவன் பேரில் போட்டால் சித்த பிறமை தீந்து றாசகுமாரனாக அரமனை போய் சேர்ந்து யிருப்பான் றாயர் அவர்கள் உன் பேரிலே சந்தோஷமாய் உன் மனோ பீஷ்டம் சித்தியாகும் என்று சொப்பனமாச்சுது.

அந்த சொப்பனத்தைக் கண்டவுடனே பனிரென்று நாள் பட்டினியிருக்கப்பட்டவன் விபூதியெடுத்துக் கொண்டு பெனு கொண்ட பட்டணத்துக்கு வந்து இது சொப்பனத்து சோதனை பாத்துக்கொண்டு வறுகுர சமயத்தில் றாசகுமாரன் பட்டணத்து வீதிகளிலே சித்த பிறமை பிடிச்சு தன்னப்போலே திறியுர குறிப்பை கண்டு பிடிச்சுறாசகுமாரன் பேறிலே காளியெ நினைச்சு விபூதி போட்டன் அந்த விபூதி தூளி றாசகுமாரன் பேறிலே விளுந்தவுடனே சித்த பிறமை தெளிஞ்சவனாய் றாச சின்னம்ங்களுடனே அரமனைக்குப் போய்ச்சேர்ந்தார்.

அக்காலத்தில் நரபதி சிம்ஹ ஸனாதிபதியான பெனு கொண்டை விசயநகரம் ஆளப்பட்ட தேவராயர் அவர்கள் தம்முடைய குமாரனானவனுக்கு சித்த பிறமை விடுதலை பண்ணினவனை தரிவிக்கச் சொல்லி மந்திரி பிரதானிகளுக்கு உத்திரவு செய்த படியினாலே அந்தச் சமயத்தில் தரிவிச்சு றாயர் அவர்கள் ரொம்பவும் சந்தோஷத்துனாலே காலிங்க கவுண்டனை பாத்து உன் சென்மபூமி முதலான விர்த்தாந்தம் என்ன வென்று கேட்குமிடத்தில் பவாநி கூடல் சமீபத்தில் உண்டு பண்ணின அணை வாக்கியால் வரலாறு முதலாகிய சங்கதிகளும் தெயிவ கடாச்சயத்துனாலே காலிங்க கவுண்டன் என்ற பேர் வரப்பட்ட வரலாறும் கொங்கு இருவத்தினாலு நாட்டுலே பட்ட குறுப்பு காரற்களை பாளையக்காற் சமானவசி மறியாதிகள் தாள்வு நடக்கப் பட்டு சமுஸ்தானத்துலே காத்து கொண்டுயிருந்து காளிகாதேவி அனுக்கிரஹம் பண்ணின நாள் வரைக்கும் வரலாறு அறியப் பண்ணிக் கொண்டபடியினாலே றாயர் அவர்கள் ரொம்பவும் சந்தோஷப்பட்டு உன்னுடைய நாமதேயம் என்ன வென்று கேட்டார்கள்.



அப்பொ பேற் அறிய பண்ணிக் கொண்டபடியினாலே றாயற் அவர்கள் உத்திரவு செய்து என்னுடைய வம்சம் உத்தாரம் பண்ணியிறுக்குறபடியினாலே யென்னுடைய பேற் தெயிவ கடாட்சயத்துனாலே உண்டாகிய பேருடனே றாச கடாட்சயத்துனாலே குடுக்கப்பட்ட றாச சபுதத்துடனே காலிங்கறாய கவுண்டன் யென்று பேர் வச்சு உனக்கு யென்ன வேணுமென்று கேட்டார்கள். அந்தசமயத்தில் யென் காணியாட்சியான ஆனைமலை சாற்வுலே கானிக்கை நாடு யென்னப்பட்ட பூமியை தயவு செய்ய வேணுமென்று கேட்டுக்கொண்டார்.

றாயரவர்கள் கடாட்சம் செய்து யாளி, சிமஹல்லா பல்லாக்கு, உபய சாமரம், சுறுட்டி, சூறியபான ஆல வட்டம், வெள்ளைக் கொடை பச்சைக்கொடை, பஞ்சவர்ண கொடை, பஞ்சவர்ண வெட்டுப் பாவாடை, அனும டால், கெறுட டால், மகர டால் பசவங்கர டால் பஞ்சு வற்ன டால், ஆனை மேல் பேறிகை, ஒட்டகை மேல் நகாறு, குதிரை மேல் டங்கா, யெருது மேல் தம்பட்டம், தாரை, சின்னம், யெக்காளம், பூரிகை, சிக்குமேளம் இது முதலான வாத்தியங்கள் பிறுதுகளும் கொடுத்து ரண பாஷிகாம் கலிகிதுறாயி, முத்தொண்டி, பஞ்சொண்டி, ஒண்டிரெக்கு வீர சங்கிலி, னாக்ககாணும் புவி சேறமம், கரடிமயிற் வக்கியபிரீ, தங்கனிகளம், வீரகண்டாமணி, சாமதுரோஹாவெ(ண்)டையும் தங்க மிஞ்சு யிது முதலான ஆபரணங்கள் எல்லாம் அலங்கறிச்சு குதிரைக்கு புலி தோல் மொமட்டு, அண்ட கல்வி, முகசல்லி, பக்கசல்லி, கால்தண்டை கலிகிதுறாயி இது முதலான ஆபரணங்கள் தறிச்சு பட்டத்து குதிரையென்று நெமுகம் செய்து பட்டண பிறவேசம் பண்ணிவிச்சு ஆனைமலை சறிவிலே காவிடிக்கை நாட்டு பூமிக்கு நீயே மானசதாரனாக ஆண்டு அனுபவிச்சுக் கொண்டு வர வேணுமென்று பட்டாபிஷேகம் செய்துபட்டத்து ஆயுதம் கையிலே கொடுத்து அறுபத்து நாலு அமர காரரை மேமுகம் செய்து இரட்ட வாள், பச்ச ஈட்டி, கறீட்டி, வெள்லி ஈட்டி, தங்க கட்டு துப்பாக்கி வெள்ளி முலாம் துபாகி சீனா மானுடை இது முதலான ஆயுதங்களும் கொடுத்தார்கள்.

முன்னாலே நாகூர் பாளைப்பட்டு பட்ட குறுப்புக்காற்கள் சரிசமான மறியாதெ குடுக்கரது யில்லை யென்று சொன்ன மனவெறுப்பு னாலே றாயசமுஸ்தானத்திலே காத்துயிருந்து தெய்வ கடாட்சத்துனாலே சகல பிறுதுகள் ஆயுதங்களும் உண்டாய் காவிடிக்கை நாட்டுக்குப் பாளையக்காரனாக காலிங்க ராய கவுண்டர் என்கிற பேர் பிரசித்திப்பட்டராய்ப்பட்டு கட்டியங்களுடனே புறப்பட்டு ஆனைமலை சறவுலே வனாந்திரத்திலே தம்முடைய மாட்டுப் பட்டிகள் இருக்கப்பட்ட யிடத்தில் சேர்ந்து அரமனையுங் கட்டி வீடுகள் உண்டுபண்ணி பூர்வத்தில் வனத்திலே மாடுகளுக்கு ஆதாரமாக தோண்டியிருக்கப்பட்ட ஊற்றுக் குளிகள் இருக்கப்பட்ட யிடத்தில் ஊர் கட்டி விச்சபடியினாலே ஊத்துக்குளியென்று கிராம நாமதேயம் உண்டாய் ஊற்றுக்குழி பாளையக்காரர் என்று பேர் பிரசித்திப் பட்டவனாய் இருந்தார்கள்.

இராயர் சமுஸ்தானத்திலே காலிங்கராயக் கவுண்டர் என்கிற பேர் தெய்வ கடாட்சத்துனாலேயும் ராஜ கடாட்சத்துனாலேயும் பாளையக்காரர் என்று பேர் பிரசித்திப்பட்டு பாளையப்பட்டு உண்டான னாள் முதல் சாலிவாகன சகாபுதம் 1120 முதல் சகாபுதம் 1712 வரைக்கும் ஆண்டு 582க்கு பட்டங்களுடைய வரிசைகளையும் அவாளவாளுடைய சறியேகளும் இதன் கீளே எழுதி வருகிறது.

வம்ச பரம்பரையாய் தெய்வ கடாட்சத்துனாலேயும் ராஜ கடாட்சத்துனாலேயும் காலிங்கராய னென்கிற பேர் வமுச பரம்பரையாய் பட்டகார்களுக்குப் பேர் உண்டாகி வருகிறது. காலிங்கராயன் என்பது ஒரு பட்டப் பெயரே. பாண்டியர் ஆட்சிக் காலத்தில் கொங்கு நாட்டில் பகுதி அலுவலராக இருந்தவர் இந்தக் காலிங்கராயன்.

தெய்வ கடாட்சத்துனாலே சர்ப்பம் போன போக்கு வாய்க்காலும் வெட்டிவிச்சு அணையும் கட்டிவிச்சு காலிங்கராய னென்கிர பேர் பிரசித்திப்பட்டு வமுசா பிவிற்த்தியிலே காலிங்கறாய் னென்கிறவர் காவிடிக்க மனசுபுதாராறாயி காலிங்கறாயர் னென்கிற பேரிலை ஊத்துக்குளி பாளையக்காரர் என்று பட்டாபிஷேகம் அனைவருடைய னாள் வரைக்கும் வெகுகாலமான படியினாலே வமுசங்கள் ஒளுகாயிதெறி(ய) வில்லை அணைக்கும் வாக்கியாலுக்கும் காலிங்கராயன் அணையென்றும் காலிங்கராயன் வாக்கியால் என்றும் பேர் பிரசித்தி படலாச்சுது.

•••

காலிங்கராயன் வாய்க்கால் வெட்டிய ஆண்டு கலியுக சகாப்தம் 2000 என்று வம்சாவளி கூறுவதைப் போலக் கொண்டால் கி.மு. 1101 என்றாகிறது. ஆனால், கி.பி. 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில்தான் காலிங்கராயன் பெயர் காணப்படுகிறது. கி.பி. 1800- இல் வாய்க்காலைப் பார்வையிட்ட புகானன், 400 ஆண்டுகளுக்கு முன்னர் வெட்டப்பட்டதாகப் பதிந்துள்ளார்.

கல்வெட்டுத் தகவல்கள், கிடைக்கும் வரையிலான சான்றுகளின்படி, கி.பி. 1265-இல் வீரபாண்டிய மன்னனின் அலுவலராகப் பணியாற்றத் தொடங்கிய காலிங்கராயன், கி.பி. 1270 ஆண்டு தொடங்கி, 12 ஆண்டு காலத்தில் வாய்க்காலை வெட்டி முடித்துள்ளார். சாலிவாகன சகாப்தம் 1203 கலியுக சகாப்தம் 4382 விய வருஷம் தை மாதம் 5 ஆம் தேதி, அதாவது கி.பி. 1282 ஆம் ஆண்டில், வாய்க்கால் பணி நிறைவு பெற்றதாக ஜமீன் ஊத்துக்குளி அகத்தூரம்மன் கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது.

காலிங்கராயன் வாய்க்கால் மூலம், நதிகள் இணைப்பின் முன்னோடியாக, பவானி ஆறும் நொய்யலும் இணைக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளலாம்.

காலிங்கராயன் வாய்க்காலிலிருந்து மலையம் பாளையம் பிரிவு வாய்க்கால், பெரிய வட்டம் வாய்க்கால், ஆவுடையார்பாறை வாய்க்கால் என மூன்று கிளைகள் பிரிகின்றன.

உறுதிபடத் தெரிய வராத ஏதோ ஒரு காரணத்தால் வாய்க்காலை வெட்டிய காலிங்கராயனோ அவர் குடும்பமோ அல்லது அவருடைய சாத்தந்தை கோத்திரத்தைச் சேர்ந்த பங்காளிகளோ காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்தால் பயன் பெறவில்லை என்றொரு தகவல் இருக்கிறது. பூந்துறை நாட்டிலிருந்த காலிங்க ராயன், வாய்க்காலை மக்கள் பொறுப்பில் விட்டுவிட்டு, உறவினர்களை இந்தப் பாசனப் பகுதிகளிலிருந்து வெளியேறப் பணித்துவிட்டு, குடும்பத்துடன் பொள்ளாச்சி அருகேயுள்ள ஊற்றுக்குழிக்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. வமிசாவளியிலும் ஏதோ மரியாதைக் குறைவு காரணமாக நாட்டைவிட்டுக் காலிங்கராயன் வெளியேறிய தகவல் இடம் பெற்றிருக்கிறது.

காலிங்கராயன் என்பது ஒரு பட்டப் பெயரே. பாண்டியர் ஆட்சிக் காலத்தில் கொங்கு நாட்டில் பகுதி அலுவலராக இருந்தவர் இந்தக் காலிங்கராயன். யாராக இருந்தாலும் இன்றும் என்றும் ஈரோடு மாவட்டத்தின் செழிப்பில் இடம் பெற்றிருக்கும் பெயர் காலிங்கராயன், அவர் வெட்டிய வாய்க்காலில் வழிந்தோடும் நீரால்!

சான்றுகள்:

1) பாளையப்பட்டுகளின் வமிசாவளி - தொகுதி 1, தொல்லியல் ஆய்வுத் துறை, தமிழ்நாடு அரசு

2) காலிங்கராயன் கால்வாய் / புலவர் செ. இராசு

3) காலிங்கராய கவுண்டரின் கதை / எம். பாண்டிய ராஜன் / தினமணி - பெரியார் மாவட்டச் சிறப்பிதழ்/ 31.3.1997




ஈரோடு,

.பவானி அருகே காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். இந்த வாய்க்கால் மூலமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதில் கடைமடை வரை தண்ணீர் சீராக செல்லும் வகையில் பாசூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் காலிங்கராயன் வாய்க்கால் சீரமைக்கும் பணி ஈரோடை அமைப்பு சார்பில் நடக்கிறது.

இதுகுறித்து ஈரோடை அமைப்பின் தலைவரும், ஈரோடு சுதா ஆஸ்பத்திரியின் நிர்வாக இயக்குனருமான டாக்டர் சுதாகர் கூறியதாவது:-

மொத்தம் 95 கிலோ மீட்டர் நீளமுள்ள காலிங்கராயன் வாய்க்காலில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு பொதுப்பணித்துறை சார்பில் ஏற்கனவே கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. கடைமடை பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஈரோடை அமைப்பு சார்பில் பாசூரில் இருந்து ஆவுடையார்பாளையம் வரை சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.13 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி கடந்த வாரம் முதல் தொடங்கி நடந்து வருகிறது. ஏற்கனவே பெரும்பள்ளம் ஓடை, கீரிப்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன்பள்ளம் ஓடை, சூரம்பட்டி அணைக்கட்டு மற்றும் கீழ்பவானி பிரதான வாய்க்கால் ஆகியன தூர்வாரப்பட்டு உள்ளது. தற்போது காலிங்கராயன் வாய்க்கால் தரைதளத்தை தவிர மற்ற இரு கரைகளிலும் கான்கிரீட் அமைக்கப்படும். இந்த பணிகள் ஒரு மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், மலையம்பாளையம், பழனிகவுண்டம்பாளையம் பகுதியில் செல்லும் கிளை வாய்க்கால்களும் தூர்வாரப்படுகிறது.

.

காக்க... காக்க காலிங்கராயனைக் காக்க!
Vikatan Correspondent
உலகின் மிகப் பழமையான வாய்க்கால்களில் ஒன்றாக ஐ.நா. அவையால் அங்கீகரிக்கப்பட்ட வாய்க்கால் ஈரோடு காலிங்கராயன் வாய்க்கால். பவானி ஆற்றில் இருந்து பிரிந்து 56 மைல் தூரம் சீறிப் பாய்ந்து ஓடுகிறது இந்த வாய்க்கால். ஒருகாலத்தில் ஓஹோ என்று விவசாயத்தைச் செழிக்கவைத்த இந்த வாய்க்காலை இன்று பார்த்தால் கண்ணீர்தான் வருகிறது. வரலாறு தெரியாமல் இந்த வாய்க்காலைக் களங்கப்படுத்திவிட்டன தோல் தொழிற்சாலைகள். இதன் நெகிழ்வூட்டும் வரலாற்றை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் ஈரோட்டைச் சேர்ந்த 'இந்தியாவுக்காக இந்தியர்கள்’ அமைப்பின் அகரம் பார்த்திபன்.


காக்க... காக்க காலிங்கராயனைக் காக்க!
##~##

''தன்னைத் தானே நாடு கடத்திக்கொண்ட ஒரு மன்னன் இருந்தான் என்றால், அவர்தான் காலிங்க ராயன். அன்றைய காலகட்டத்தில் தமிழ்நாடு சேர, சோழ, பாண்டிய, தொண்டை, கொங்கு என ஐந்து நாடுகளாக இருந்தது. கி.பி 1282-ல் பாண்டிய மன்னன், வீரபாண்டியனின் பிரதிநிதியாகப் பூந்துறையைத் தலைமை இடமாகக்கொண்டு கொங்கு நாட்டை ஆட்சி செய்தவர் காலிங்கராயன். இவருடைய சொந்த ஊர் வெள்ளோடு. இவர் வாழ்ந்த பகுதிகள் முழுவதும் மேட்டுப் பகுதிகள் என்பதால் இங்கு ஆற்றுப் பாசனம் கிடையாது. கிணற்றுப் பாசனம் மட்டும்தான்.

போதுமான நீர் வசதி இல்லாததால், இங்கு விவசாயம் செழிக்கவில்லை. முக்கிய உணவுப் பயிரான நெல்கூட விளைவிக்க முடியவில்லை. இந்த நிலையில் காலிங்கராயன், தன் மகனுக்குப் பெண் கேட்க தஞ்சைப் பகுதியில் வசிக்கும் தன் சகோதரி வீட்டுக்குப் போனார். அப்போது அந்த வீட்டின் சமையல்காரன், 'இவர் களுக்கு விருந்து சமைக்கப் பழைய அரிசி போடுவதா? புதிய அரிசி போடுவதா?’ என்று கேட்டு இருக்கிறான். அதற்கு காலிங்கராயனின் உறவினர்கள், 'நெல் விளையாத தேசத்துக்காரர்களுக்கு எந்த அரிசியாக இருந்தால் என்ன?’ என்று கேலி செய்திருக்கிறார்கள்.


காக்க... காக்க காலிங்கராயனைக் காக்க!
இதைக் கேட்டுப் பொறுத்துக்கொள்ள முடியாத காலிங்கராயன், எங்களுடைய புன் செய் நிலங்களை எல்லாம் நன்செய் நிலங்களாக மாற்றிக் காட்டுகிறேன் என்று சபதம் எடுத்திருக்கிறார். பவானி ஆற்றில் இருந்து தங்களுடைய மேட்டுப் பகுதியை நோக்கி வாய்க்கால் வெட்டி நீரைக் கொண்டுவருவதுதான் காலிங்கராயனின் திட்டம். ஆனால், மேட்டுப் பகுதியை நோக்கி வாய்க்கால் வெட்டுவது சாத்தியம் இல்லை என்று பலரும் சொல்லி இருக்கிறார்கள்.

ஒருநாள் காலிங்கராயனுக்கு ஒரு பாம்பு, மேட்டை நோக்கி வளைந்து நெளிந்து செல்வதுபோலக் கனவு வருகிறது. அதன்படி வாய்க்காலையும் வளைத்து நெளித்து வெட்டுவது என முடிவு எடுக்கிறார். வாய்க்கால் வெட்டுவதற்கு நிதி கேட்டு இவர் தன் இன மக்களிடம் போனபோது, எவருமே உதவ முன் வரவில்லை. அப்போது இவருடைய தாயார், 'தயிர் விற்ற பணம் தாவாரம் வரை கிடக்குது; மோர் விற்ற பணம் முகடு வரை கிடக்குது; எடுத்து வாய்க்காலை வெட்டு’ என்று சொல்லவே, வாய்க்கால் வெட்டும் பணியைத் தொடங்குகிறார். காலிங்கராயன் வாய்க்காலை வெட்டும்போது, அவருக்கு உடல் உழைப்பில் பெரிதும் கைகொடுத்தவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களே.

காக்க... காக்க காலிங்கராயனைக் காக்க!

அவர் சபதம் எடுத்தபடியே வெற்றிகரமாக வாய்க்காலை வெட்டி பவானி ஆற்றுத் தண்ணீரை மேட்டுப் பகுதியை நோக்கிப் பாயச் செய்தார். புன்செய் நிலங்கள் எல்லாம் நன்செய் நிலங்களாகின. அப்போது, 'காலிங்கராயன் தன்னுடைய சொந்தப் பயன்பாட்டுக்காகத்தான் வாய்க்காலை வெட்டினார்’ என்று சிலர் பேசக் கேட்ட காலிங்கராயன், 'இந்த வாய்க்காலில் இருந்து நானோ என்னுடைய சந்ததியினரோ ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூடப் பயன்படுத்த மாட்டோம்’ என்று சொல்லிவிட்டு, ஊத்துக்குளிக்கு இடம் பெயர்ந்துவிட்டார்.

உலகிலேயே மேட்டை நோக்கிப் பாய்கிற ஒரே வாய்க்கால் இது ஒன்றுதான். வளைந்து நெளிந்து பாய்வதால் இதைக் கோணவாய்க்கால் என்றும் சொல்வர். 800 ஆண்டுகள் பழமையான இந்த காலிங்கராயன் வாய்க்காலை, கழிவுகளில் இருந்து காப்பாற்றுவதே தன்மானத் தமிழன் காலிங்கராயனுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்!'' என்கிறார் பார்த்திபன்.   

காக்க... காக்க காலிங்கராயனைக் காக்க!
- கி.ச.திலீபன்
down in Uthukuli near Anaimalai
Breif History of Kalingarayar Canal

During the time of Authondai ChakravarthiChakravarthy, one of the Chola kings, Kalingan of Sathanthai Gothram (a very ancient family), was the ruler of Perianadu Nadumandalam, which was occupied by the VellalarsVellalar, a powerful community in those days. Authondai chakravarthiChakravarthy, with the help of Chera and the Pandya Kings, took possession of Nadumandalam, and with a view to disperse these VellalarsVellalar from their stronghold, he sent some of them with Chera, and some with Pandya, when Sathanthai Kalingan accompanied Chera to Kongunadu.

At that time this country was mostly covered with dense forests and was divided into twenty-four portions.

Pundurai, one of the divisions, consisting of thirythirty-two villages, was bestowed on Sathanthai Kalinga Rayar, he was made chief of that place, with Vvellodu as his capital. He constructed a temple there and dedicated it to Padagavalli Nachiar. He went to his brother-in-law, Pannai-kulathan, at Karur and proposed his daughter for his own son. The betrothal was made, but a slight incident occurred which caused the postponement of the marriage. During his stay, the cook of the bride’s party asked his master whether coarse or fine rice should be cooked for guests. He replied in jest, “What matters it if you cook coarse or fine rice for the people living in dry lands? Cook anything.” Being offended at this remark, Sathanthai Kalinga Rayar, with his party, left the place immediately, saying that he would marry his daughter after he could raise wet crops in his lands. On his return to his capital, with a dejected heart, he prayed to his tutelary deity, God Subramanya, for the grant of wet lands and retired to bed. He vowed a life of penance till his prayer was granted and left his beard to grow in token of his vow. God Ssubramanya, in the form of an old sage, appeared to his vision, while he was asleep and said, “Why art thou dejected? Do not be disheartened; construct an anicut at Bhavani and dig a channel; thy object will be realized.” He asked “Oh! Swami! I am perplexed. I do not where to construct the anicut and in what course to dig the channel.” The sage replied, “A peacock has run chasing a snake from a certain point at the bed of the river Bhavani. There are the traces left. Take that course. “He woke up and straight away went to the point indicated and to his great joy and surprise saw traces of a serpent having been chased by a peacock. Accordingly he began to dig a channel there and construct a dam with stones brought from the Urachi Hills. But it was obstructed by Vellai Vettu Poligar on the ground that the land in question was his own. His objection was overcome and an anicut and a channel as far as Kodumudi were built at an enormous cost. They were named after the serpent Kalingan Channel and Anicut. All the dry lands of Pundurai division were then converted into wet lands. As he was the founder of the Kalingan Channel and Anicut, he added to his name the appellation of Kalingan and called the paddy that was grown in his fields as Kalingan Paddy. As his object was fulfilled, he went again to Karur and celebrated his son’s marriage according to his promise. He then came back to his country and lived with his family in peace and plenty. Since then peacock has become the emblem of the family.

The Kalingan channel and Anicut are said to have been constructed about 2,000 years of Kaliyuga Sakaptam and stone statues of Kalinga Rayar and the serpent were placed near the anicut, and festivals and pujas were performed by his descendants and other riots.

They did not want to reap the benefits of their noble deeds. Later the Kalinga Rayars moved to Anaimalai area converted the forest into a village called it Uthukuli and established a principality of themselves in that territory.


.

No comments:

Post a Comment