Friday 26 June 2020

M.M.DHANDAPANI DESIGAR ACTOR SINGER BORN 2008 AUGUST 27 - JUNE 26,1972


M.M.DHANDAPANI DESIGAR ACTOR SINGER             BORN 2008 AUGUST 27 - JUNE 26,1972




எம். எம். தண்டபாணி தேசிகர் (பிறப்பு: ஆகத்து 27, 1908 - சூன் 26, 1972) ஒரு தமிழிசைக் கலைஞர். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். பல தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
வாழ்க்கைச் சுருக்கம்
தண்டபாணி தேசிகர் சென்னை மாகாணம் நன்னிலத்துக்கு அருகில் உள்ள திருச்செங்காட்டங்குடி என்ற ஊரில் முத்தையா தேசிகருக்கு மகனாகப் பிறந்தார். மாணிக்க தேசிகர், கும்பகோணம் ராசமாணிக்கம் பிள்ளை ஆகியோரிடம் இசைப் பயிற்சி பெற்றார். தெருவெங்கும் திருப்பாக்களைப் பாடி, தேவாரப் பாடகாசிரியராக அமர்ந்திருந்த தண்டபாணி தேசிகரை பட்டினத்தார் திரைப்படம் அவரைச் சென்னைக்கு இழுத்து வந்தது. பட்டினத்தார், நந்தனார் உட்படப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1952 தியாகராசர் ஆராதனை சம்பவம்
1952 தியாகராசர் ஆராதனை விழாவில் தண்டபாணி பாட அழைக்கப்பட்டார். அவரின் வழமை போல அவர் தமிழ்ப் பாட்டு ஒன்றோடு தொடங்கினார். பின்னர் அவர் தெலுங்கு, சமசுகிருத பாடல்களைப் பாடினார். இறுதியாக அவரின் வழமை போல தமிழ்ப் பாட்டோடு முடித்தார். தமிழ்ப் பாடல்களைப் பாடியது
அங்கிருந்தவர்களுக்கு ஆத்திரம் ஊட்டியது. இவர் பாடி முடித்தவுடன் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்தனர். பல கருநாடக இசைக் கலைஞர்கள், நாளிதழ்கள் இவரைக் கடுமையாக விமர்சித்தன. தமிழ்ப் பாடல்களால் தியாகராசர் ஆராதனையில் புனிதத்தை கலைத்து விட்டதாகக் அவர்கள் சாடினார்கள்.[1]
விருதுகளும் பட்டங்களும்
சங்கீத சாகித்திய சிரோமணி பட்டத்தை 1951 ஏப்ரல் 3 ஆம் நாள் எம். பக்தவத்சலம் வழங்கிக் கௌரவித்தார்.
சங்கீத கலாசிகாமணி விருது, 1955. வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி (மிருணாளினி சாராபாய் தலைமை)
இசைப்பேரறிஞர் விருது, 1957. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[2]
சங்கீத நாடக அகாதமி விருது, 1969. வழங்கியது: சங்கீத நாடக அகாதமி[3]

.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள திருச்செங்காட்டங்குடி என்ற ஊரில் பிறந்தவர் (1908). சிவத்தொண்டு புரிந்து வரும் ஓதுவார் குடும்பத்தைச் சேர்ந்தவர். கோயில்களில் தந்தை பாடும்போது உடன் இருந்த இவருக்கும் இசை மீது ஆர்வம் ஏற்பட்டது. சடையப்ப பிள்ளை என்ற சங்கீத வித்வானிடம் முறையான இசைப்பயிற்சி பெற்றார். *மாணிக்க தேசிகர், கும்பகோணம் ராசமாணிக்கம் பிள்ளை ஆகியோரிடமும் இசைப் பயிற்சி பெற்றார். முதன்முதலாக இவரது சங்கீத அரங்கேற்றம் திருமருகல் ராமர் கோயிலில் நடைபெற்றது. கணீரென்ற சிறுவனது குரல் அனைவரையும் கவர்ந்தது. 18-வது வயதில் மதுரையில் நடந்து வந்த தேவாரப் பாடசாலையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

*இசை என்பது ஒரு சிலர் பாடி, கேட்டு ரசிக்கும்படியாக மட்டும் இருக்கக் கூடாது, சாதாரண மக்களும் இசையைக் கேட்டு ரசிக்க வேண்டும் என்று கருதியவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத் துறைத் தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது ‘தமிழ்ப் பாமாலை’ என்ற நூலை வெளியிட்டார். திருக்குறளுக்கு முதன்முதலாக இசை அமைத்து, அதை இறைவணக்கமாகப் மேடையில் பாடியவர் என்ற பெருமை பெற்றார்.*கர்நாடக இசையில் அமைந்த பல கீர்த்தனைகளையும் இவர் புனைந்துள்ளார். 1935-ல் இவரது பாடும் திறனால் கவரப்பட்ட வேல் பிக்சர்ஸ் அதிபர்கள் இவரைப் ‘பட்டினத்தார்’ படத்தில் நடிக்கும்படி அழைப்பு விடுத்தனர். இதில் பெரும்பாலான பாடல்களை இவரே பாடினார். இப்படம் 25 வாரங்கள் ஓடியது.

*பின்னர் ஜெமினி நிறுவனம் தயாரித்த ‘நந்தனார்’ படத்திலும் பாடி நடித்தார். தொடர்ந்து, ‘வள்ளாள மகாராஜா’, ‘தாயுமானவர்’, ‘மாணிக்கவாசகர்’, ‘திருமழிசை ஆழ்வார்’ உள்ளிட்டப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது வெண்கலக் குரலில் திரைப்படங்களில் இவர் பாடிய ‘ஜகஜனனீ’, ‘என் அப்பன் அல்லவா’, ‘வழிமறித்து நிற்குதே’, ‘காண வேண்டாமா’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தன.*திரைப்படங்களில் நடித்து வந்தாலும் முழு நேர இசைக் கலைஞராகவே வாழ்ந்து வந்தார். தமிழகம் முழுவதும் கச்சேரிகள் நடத்தி வந்தார். ‘சங்கீத சாகித்திய சிரோமணி’, ‘சங்கீத கலாசிகாமணி’, ‘இசைப்பேரறிஞர்’, ‘சங்கீத நாடக அகாடமி’ விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார். *தமிழ்ப்பாடல்களை மூலை முடுக்கெல்லாம் பரவச் செய்தவர். தேவாரப் பாடல்களை இசைத் தட்டுகளாக வெளியிட்டார்.

*சுருதி சுத்தமான சாரீரம், அபாரமான உச்சரிப்புத் திறன், பாடல்களின் பொருள் உணர்ந்து உணர்ச்சிபூர்வமாகப் பாடும் தன்மை ஆகியவை இவரது தனித்தன்மையாக விளங்கின. தன் இசை நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்களையும் தேவார, திருமுறைகளையும் பாடி, 1940-களில் தோன்றிய தமிழிசை இயக்கத்துக்குகு வளம் சேர்த்தார்.*இசையின் பல்வேறு நுணுக்கங்களை ஆழ்ந்து ஆராய்ந்து இடைக்கால இசை, இயலும் இசையும், இசையும் நாடகமும் உள்ளிட்ட பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.*‘நடமாடும் தமிழிசை’, ‘ஐந்தாம் தமிழ்ச் சங்கம்’ என்றெல்லாம் புகழப்பட்டவரும் தமிழகத்தின் தலைசிறந்த சங்கீத வித்வான்களில் ஒருவருமான எம்.எம்.தண்டபாணி தேசிகர் 1972-ம் ஆண்டு, ஜூன் மாதம், 64-வது வயதில் மறைந்தார்.

நடித்த திரைப்படங்கள்
பட்டினத்தார் (1936)
வள்ளாள மகாராஜா (1937)
தாயுமானவர் (1938)
மாணிக்கவாசகர் (1939)
நந்தனார் (1942)
திருமழிசை ஆழ்வார் (1948)

இசை உலகில் முத்திரை பதித்தவர் எம்.எம்.தண்டபாணி தேசிகர்

தமிழ்நாட்டின் சிறந்த சங்கீத வித்துவான்களில் ஒருவரான எம்.எம்.தண்டபாணி தேசிகர், ஜெமினியின் ‘நந்தனார்’ உள் பட சில திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.

தண்டபாணி தேசிகர், தஞ்சை மாவட்டம் திருச்செங்காட்டன்குடியில் 1908-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ந்தேதி பிறந்தவர். பெற் றோர்: முத்தையா தேசிகர் -பாப்பம்மாள்.
பழந்தமிழ் நாட்டில், கோவில்களில் திருப்பதிகங்களைப் பாட மன்னர்களால் நியமிக்கப்பட்டவர்கள் ஓதுவார்கள். அந்த ஓதுவார்களின் பரம்பரையைச் சேர்ந்தவர், தண்ட பாணி தேசிகர்.
கோவில்களில் தந்தை பாடும்போது உடன் இருந்த தண்டபாணி தேசிகருக்கு இசை மீது ஆர்வம் ஏற்பட்டது. தந்தையிடம் இசையைக் கற்றுக் கொண்ட தேசிகர் பின்னர், சடையப்ப பிள்ளை என்ற சங்கீத வித்வானிடம் முறையான இசைப்பயிற்சி பெற்றார்.
அவருடைய சங்கீத அரங்கேற்றம் திருமருகல் ராமர் கோவிலில் நடந்தது. கணீர் என்ற குரலில் தேசிகர் பாடிய பாடல்கள், அவையோரைக் கவர்ந்தன. அவருக்கு அன்பளிப்பாக ஐந்து ரூபாய் கொடுத்தார்கள். அக்காலத்தில் அது பெரிய தொகை. ஐந்து ரூபாயைத் தன் தந்தையிடம் கொடுத்து ஆசி பெற்றார்.
பின்னர் பிரபல வயலின் வித்துவான் ‘பிடில்’ ராஜ மாணிக்கம் பிள்ளையிடம் 4 ஆண்டுகள் இசை பயின்றார். 18-வது வயதில், மதுரையில் நடந்து வந்த தேவாரப் பாடசாலையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.
1935-ல், வேல் பிக்சர்ஸ் என்ற படக்கம்பெனி, ‘பட்டினத்தார்’ என்ற படத்தைத் தயாரித்தார்கள். அக்காலத்தில் பாடத் தெரிந்தவர்கள்தான் சினிமாவில் நடிக்க முடியும்.
தேசிகரின் பாடலைக் கேட்ட வேல் பிக்சர்ஸ் அதிபர்கள், அவரை பட்டினத்தாராக நடிக்க அழைத்தார்கள். நடிப்பில் முன்அனுபவம் பெற்றிராத தண்டபாணி தேசிகர், பட்டினத்தாராக சிறப்பாக நடித்தார்.
இந்தப்படத்தில் வி.என்.சுந்தரம், பி.ஜி.வெங்கடேசன், டி.ஆர்.முத்துலட்சுமி, ஜெயலட்சுமி, ராதாபாய் ஆகியோர் நடித்தனர். டி.சி.வேல் நாயக்கர் டைரக்ட செய்தார். படத்தில் 52 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. பெரும்பாலான பாடல்களை தேசிகர் பாடினார்.
தேசிகரின் குரல் கம்பீரமானது. வெண்கலக் குரலில் கணீர் என்று பாடுவார். பட்டினத்தார் கதை வலுவானதாக இருந்ததாலும், தேசிகரின் பாடல் சிறப்பாக அமைந்ததாலும் ‘பட்டினத்தார்’ 25 வாரங்கள் ஓடியது.
அடுத்தபடியாக, இதே வேல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ‘வல்லாள மகாராஜா’ என்ற படத்தில் தேசிகர் நடித்தார். இந்தப் படம் தோல்வி அடைந்தது.
இதற்குக் காரணம், படத்தின் கதைதான். கடவுள் மீது பக்தி கொண்ட அரசன், தன் மனைவியை இறைவனின் படுக்கை அறைக்கு அனுப்பி வைப்பதுதான் கதையின் மையக்கருத்து. இதை ரசிகர்கள் ஜீரணிக்க முடியாததால், படம் தோல்வியில் சுருண்டது.
படம் தோல்வி அடைந்தாலும், தேசிகரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அப்படத்தில் கதாநாயகியாக நடித்த தேவசேனா, தேசிகரின் வாழ்க்கைத் துணைவியானார். (தியாகராஜ பாகவதர் நடித்த ‘சத்தியசீலன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர்தான் இந்த தேவசேனா)’வள்ளால மகாராஜா’வைத் தொடர்ந்து, ‘தாயுமானவர்’ (1938), ‘மாணிக்கவாசகர்’ (1939) ஆகிய படங்களில் தேசிகர் நடித்தார். இவை சுமாராக ஓடின.
1942-ல் ஜெமினியின் மகத்தான தயாரிப்பான ‘நந்தனார்’ படத்தில், நந்தனாராக தேசிகர் நடித்தார். முருக தாசா டைரக்ட் செய்தார். செருகளத்தூர் சாமா, வேதியராக நடித்தார். மற்றும் கொத்தமங்கலம் சுப்பு, எல்.நாராயணராவ், சுந்தரிபாய் ஆகியோர் நடித்தனர். கதாநாயகி இல்லாத படம் இது!
இதில் தேசிகர், நந்தனாராகவே வாழ்ந்தார். அவர் பாடிய பாடல்கள் இனிமையாக ஒலித்தன. ‘என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா’, ‘சிவலோகநாதனைக் கண்டு’, ‘காணவேண்டாமோ’ முதலான அனைத்துப் பாடல் களும் அருமையாக அமைந்து, ‘நந்தனார்’ படத்தை ஒரு இசைக் காவியமாக உயர்த்தின. இக்காலக்கட்டத்தில், பாகவதர், பி.யு.சின்னப்பா, எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோ ரின் படங்கள்தான் மாபெரும் வெற்றியைப் பெற்றன. அந்த அளவுக்கு வெற்றி பெற்ற படம் ‘நந்தனார்.’
இந்தப் படத்தில் வரும் பாடல்களில் சிறந்த 3 பாடல் களை சரியாக தேர்வு செய்பவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு என்று அறிவித்தார், ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன். ‘நந்தனார்’ படம் ஓடிய தியேட்டர்களில் ஓட்டுப் பெட்டிகள் வைக்கப்பட்டன. டிக்கெட்டுடன், ஒரு கூப்பன் கொடுக்கப்பட்டது. அதில் சிறந்த மூன்று பாடல்களை ரசிகர்கள் எழுதி, ஓட்டுப்பெட்டியில் போட்டனர்.
இசை வல்லுனர்களால் தேர்வு செய்யப்பட்டு, ‘சீல்’ செய்து வைக்கப்பட்ட 3 பாடல்களின் பெயரை சரியாக எழுதிய ரசிகர்களுக்கு, ரூ.10 ஆயிரம் பகிர்ந்து வழங்கப்பட்டது.
தண்டபாணி தேசிகர் சில சினிமாப் படங்களில் நடித்த போதிலும், அவர் முழு நேர இசைக் கலைஞராகவே வாழ்ந்தார். தமிழ்நாடு முழுவதும் கச்சேரிகள் நடத்தி வந்தார். இவருடைய கச்சேரிகளில் தமிழிசைப் பாடல்களே முதலிடம் பெற்றன.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், இசைத்துறை தலைவராகவும் தேசிகர் பணிபுரிந்தார்.
1972 ஜுன் 26-ந்தேதி காலமானார். தேசிகர் – தேவசேனா தம்பதிகளுக்குக் குழந்தைகள் இல்லை.




.

No comments:

Post a Comment