Friday 5 June 2020

KUTTY PADMINI , TAMIL ACTRESS BORN 1956 JUNE 5



KUTTY PADMINI , TAMIL ACTRESS 
BORN 1956 JUNE 5




குட்டி பத்மினி (Kutty Padmini) ஒரு தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகையாவார். கோலிவுட் படவுலகில் பிரதானமாக பணி புரிந்து வருகிறார். 1959இல் "ஆம்பள அஞ்சுலம்" எனறப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தெலுங்கு , கன்னடம், மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] இவர் தனது மூன்றாவது வயதில் தமிழகத் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.


சிவாஜி கணேசன், ம. கோ. இராமச்சந்திரன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரசினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உட்பட தமிழ் சினிமாவின் பல முக்கிய நபர்களுடன் நடித்துள்ளார். குழந்தையும் தெய்வமும் திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை கலைஞருக்கான தேசிய திரைப்பட விருதை வென்ற முதல் பெண் குழந்தை நட்சத்திரக் கலைஞராவார். களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்ததற்காக கமல்ஹாசன் முதல் முறையாக இவ்விருதினை பெற்றுள்ளார்.[2]



குட்டி பத்மினி, பெண்மணி அவள் கண்மணி, அவள் அப்படித்தான், அவர்கள், சகலகலா சம்மந்தி போன்றத் திரைப்படங்களில் துணை நடிகையாகத் தன்னை வளர்த்துக் கொண்டார், அவரது வைஷ்ணவி ஃபிலிம்ஸ் எண்டெர்பிரசஸ் லிமிடெட் என்ற தொலைக்காட்சி நிறுவனம் மூலம், "கிருஷ்ணதாசி", மற்றும் "ராமானுஜர்" போன்ற பல சிறந்த படைப்புகளை தயாரித்தார்.[3] தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினராகவும் இருக்கிறார்.[4]

சினிமா-சின்னத்திரை என்று நடித்து வருபவர் நடிகை குட்டி பத்மினி. அதோடு சீரியல் தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வரும் இவர், கடந்த 3 ஆண்டு களாக கிரிக்கெட் பவுண்டேஷன் ஒன்றை நடத்தி வந்தார். அதன்மூலம் திறமையான வீரர்களை உருவாக்கி வந்தார் குட்டி பத்மினி.

.



குட்டி பத்மினி- (பிறப்பு-5.6.1956) வயது-57. தமிழ்நாட்டில் சென்னையில் தமிழ் குடும்பத்தில் பிறந்தவர். தனது 3-ஆவது வயதிலேயே திரைப்படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1965-இல் ஏவி.எம்மின் குழந்தையும் தெய்வமும் திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜமுனாவின் மகள்களாக இரட்டை வேடத்திலும் 1967-இல் நான் படத்தில் திருச்சி சவுந்தரராஜனின் மகளாகவும் 1959-இல் கப்பலோட்டிய தமிழன் படத்திலும் 1970-இல் மாணவன் படத்திலும் நவராத்திரி, நம்நாடு, திருவருட்செல்வர், முதலாளி, ஸ்கூல் மாஸ்ரர், அவளும் பெண் தானே, பெண்மணி அவள் கண்மணி, சாது மிரண்டால், நல்லதொரு குடும்பம், மல்லுவேட்டி மைனர், ஜல்லிக்கட்டு, என் கணவர், கண் சிமிட்டும் நேரம் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். குழந்தைப் பருவத்திலும் குமாரியான பின்னரும் தொடர்ந்து நடித்து வந்தார்.

தற்போது தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளராகவுள்ளார். இவரது கணவர் பெயர் பிரபு நேபால். இவருக்கு இரு குழந்தைகள்.
குட்டி பத்மினி, கையில் புலிக்குட்டியுடன் சிங்கத்தின் மீது சவாரி செய்யும் காட்சி ஒரு தெலுங்குப் படத்துக்காகப் படமாக்கப்பட்டது. குட்டி பத்மினியின் தாயாரை தந்திரமாக வெளியே அனுப்பிவிட்டு, இக்காட்சியை டைரக்டர் படமாக்கினார். “இளங்கன்று பயமறியாது” என்பார்கள். குட்டி பத்மினி, பாம்பு கொத்துகிற மாதிரியான காட்சிகளில் கூட நடித்தார்.

ஆனால், அவருக்கே தெரிவிக்காமல் திடீரென ஒரு தெலுங்குப்படத்தில் சிங்கங்களுக்கு மத்தியில் அவரை நடிக்க வைத்தார்கள். அவரும் பயம் எதுவுமின்றி நடித்து முடித்தார். சிங்கத்துடன் நடித்த அனுபவம் குறித்து குட்டி பத்மினி கூறியதாவது:-

“சகுந்தலா” என்ற தெலுங்குப் படத்தில், நடிகை சரோஜாதேவியின் மகளாக நடித்தேன். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தது. ஐதராபாத்தில் மக்காச்சோளம் அதிகம். அம்மா மக்காச்சோளத்தை சுட்டு, மிளகாய் பொடி தூவி பக்குவமாக சாப்பிடத் தருவார். அம்மாவின் இந்த கைப்பக்குவத்துக்கு செட்டில் இருந்தவர்கள் ரசிகர்களாகி விட்டார்கள். இப்படி படப்பிடிப்பில் எல்லாருக்கும் தெரிந்தவராக, வேண்டியவராகி விட்ட அம்மாவை அன்றைய தினம் எங்கோ சுற்றிப் பார்க்க அழைத்துப்போய் விட்டார்கள். அம்மாவை திட்டம் போட்டே வெளியே அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்பது பிறகுதான் தெரிந்தது. படத்தின் டைரக்டர் என்னிடம், “உனக்கு புலிக்குட்டின்னா பிடிக்கும்தானே?” என்று கேட்டார்.



எதற்காக கேட்கிறார் என்பது புரியாமல், “ஓ! ரொம்ப பிடிக்குமே என்றேன். அதன் பிறகுதான் என்னை செட்டின் இன்னொரு புறம் கூட்டிப் போனார்கள். எனக்கு கைநிறைய சாக்லெட் தந்தவர்கள், “இப்ப நீ புலிக்குட்டியை கையில் தூக்கிக்கிட்டு சிங்கத்தின் மேல் ஏறி வரப்போறே” என்றார்கள்.சிங்கம், புலி போன்ற பயங்கர மிருகங்களை பயிற்றுவிக்கும் ‘புலி கோவிந்தராஜ்’ அங்கிருந்தார். சுற்றிலும் ஒரு இரும்பு வேலி அமைத்து, ஐந்து சிங்கங்களையும், மூன்று புலிகளையும் உலவ விட்டிருந்தார்கள். எதற்குமே வாய் தைக்கவில்லை. ‘புலி கோவிந்தராஜ்’ மாஸ்டர், அவற்றுக்கு பயிற்சி கொடுக்க அழைத்து வந்திருந்தார்.

கொஞ்ச நேரத்தில் ஒரு ஆள் நுழையக்கூடிய வழியை திறந்து என்னை அந்த கூண்டுக்குள் அனுப்பினார்கள். சர்க்கசில்தான் ஒரே நேரத்தில் இத்தனை சிங்கம், புலிகள் பார்த்திருக்கிறேன். மாஸ்டர், அழகாக இருந்த ஒரு புலிக்குட்டியை என் கையில் கொடுத்து, “இதை கெட்டியா பிடிச்சுக்கோ” என்றார். புலிக்குட்டியை பிடித்துக்கொண்டதும், அங்கிருந்த சிங்கத்தின் மீது என்னை உட்கார வைத்தார். சிங்கம் அந்த தடுப்பு வேலிக்குள் ரவுண்ட் அடிக்க, கையில் புலிக்குட்டியுடன் சிங்கத்தின் மீது நான்! வெளியே நின்று காட்சிகளை படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். படப்பிடிப்பு குழுவில் இருந்தவர்களை நான் சிங்கத்தின் மீது வலம் வந்தபடி பார்க்கிறேன். அவர்களில் ஒருவர் முகத்திலாவது சந்தோஷம் இல்லை. கொடூர குணம் படைத்த மிருகங்களாயிற்றே. எந்த நேரத்தில் என்ன செய்து வைக்கப்போகிறதோ?” என்று அவர்கள் உள்ளூர கலங்கிக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பதட்டத்திலும் காட்சி படமாகிக் கொண்டிருக்க, அப்போதுதான் அம்மா செட்டுக்குத் திரும்பியிருக்கிறார். படப்பிடிப்பில் இருந்த மொத்தக் கூட்டமும் இமைக்காமல் இரும்பு வேலிக்குள் சிங்க ஊர்வலம் வரும் என்னைப் பார்த்துக் கொண்டிருந்ததை அம்மாவும் பார்த்து விட்டார். பெற்ற வயிறல்லவா! துடித்துப் போனார்,அம்மா. “அய்யோ! இந்தக்காட்சியை எடுக்கணும்னுதான் என்னை வெளியே அனுப்பினீங்களா?” என்று கதறினார்.நான் அங்கிருந்தபடியே, “அம்மா பயப்படாதீங்க! எனக்கு ஒண்ணும் ஆகாது” என்று சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் அவர் அழுகையை நிறுத்தவில்லை. அவசரமாய் அந்தக் காட்சியை படமாக்கி, மாஸ்டர் என்னை பத்திரமாக வெளியே அழைத்து வந்த பிறகுதான் அம்மாவுக்கு உயிரே வந்தது. அப்போது கூட எனக்கு கையெல்லாம் ஒரே வலி. நான் அசையாமல் தூக்கி வைத்திருந்தேனே புலிக்குட்டி. அது 5 கிலோவுக்கு மேல் எடை இருக்கும் போலிருக்கிறது. அதுதான் கை வலிக்கு காரணம்!
ஆனால் இந்த வலியையெல்லாம் தாண்டி அந்தப் படத்தில் என் நடிப்புக்கு ஆந்திர அரசின் ‘சிறந்த பேபி நட்சத்திர விருது’ கிடைத்தது.”

இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.

“குழந்தையும் தெய்வமும்” படத்தில் குட்டி பத்மினியின் இரட்டை வேட நடிப்பை பார்த்து வியந்த பெருந்தலைவர் காமராஜர், தேர்தல் பிரசாரத்தில் குட்டி பத்மினியை காங்கிரஸ் கூட்டங்களில் பேச அனுமதித்தார். சென்னை மைலாப்பூரில் நடந்த காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் குட்டி பத்மினியை பேச வைத்தார். தொடர்ந்து படப்பிடிப்புக்கு இடையே காங்கிரசின் மேடைப் பேச்சாளராகவே மாறிப்போனார், குட்டி பத்மினி. காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டபின், குட்டி பத்மினி தி.மு.க. கூட்டத்திலும், அதன் பிறகு அ.தி.மு.க. மேடைகளிலும் பேசினார். இதுபற்றி அவர் கூறும்போது, “நான் எந்த கட்சி மேடையில் பேசினாலும் நடந்து முடிந்த ஆட்சி பற்றி குறையெல்லாம் சொல்வதில்லை. நான் சார்ந்த கட்சி மக்களுக்கு என்ன மாதிரியான நல்ல காரியங்களெல்லாம் செய்யும் என்று மட்டுமே பேசுவேன். இதனால் மாற்றுக்கட்சிகாரர்கள் கூட என் பேச்சை கேட்டு ரசித்தார்கள்” என்றார். குட்டி பத்மினி 2 ஆங்கிலப் படங்களிலும் நடித்தார். ‘தி பிரின்ஸ் அண்ட் த பாப்பர்’, ‘டார்சான் கோஸ் டு இந்தியா’ என்ற இந்த படங்களுக்காக தனது 12-வது வயதில் காஷ்மீர் போயிருக்கிறார்.

குட்டி பத்மினியிடம் மிகவும் அன்பு கொண்டவர் சவுகார் ஜானகி. “எங்களுக்கிடையே இருந்தது அம்மா – மகள் உறவு” என்று சொன்ன குட்டி பத்மினி, அதுபற்றி கூறியதாவது:- “சவுகார் ஜானகியின் மகள் என்றே என்னை பலரும் நினைத்தார்கள். எங்களுக்குள் இருந்த முக ஒற்றுமை அவர்களை இப்படி நினைக்க தூண்டியிருக்கலாம். சவுகாரும் என்னை தனது மகள்களில் ஒருவராகவே நேசித்தார். படப்பிடிப்புக்கு வரும்போது தன் கைப்பட சமைத்த சாப்பாட்டை எடுத்து வருவார். தனது கலையுலக நட்பு வட்டாரத்தில் யாருக்காவது பிறந்த நாள் என்றால் அதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு பரிசளிப்பார். என்னை அவருடைய மகள் என்று நினைத்த ரசிகர்கள் பல நேரங்களில் சவுகாரின் வீட்டுக்கே என் நடிப்பை பாராட்டி கடிதம் எழுதுவதும், அதை ஆன்ட்டி என்னிடம் கொடுப்பதும் தொடர்கதை மாதிரி போய்க்கொண்டிருந்தது. எனக்கு திருமணமாகி முதல் பிரசவத்தின்போது நிஜமாகவே எனக்கு அன்னையானார். பிரசவத்தின் போது உடனிருந்து தாயாக பார்த்துக்கொண்டார். மகள் பிறந்தபோது, குழந்தைக்கு தங்கக்காசு கொடுத்து வாழ்த்தினார்.சமீபத்தில் சவுகார் ஆன்ட்டிக்கு அவரது பெண்கள், பேரன், பேத்திகள், ஸ்டார் ஓட்டல் ஒன்றில் பெரும் விழா எடுத்தார்கள். அவரை வாழ்த்தி மைக்கில் பேசும்போது அழுது விட்டேன். சினிமா மூலம் எனக்கு கிடைத்த ‘அம்மா’ அவர்.” இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.

கதாநாயகியாக நடிக்காதது ஏன்?

குழந்தை நட்சத்திரமாக 175 படங்களுக்கு மேல் நடித்து விட்டாலும், ‘கதாநாயகி’யாக குட்டி பத்மினி நடிக்கவில்லை! அதற்கான காரணம் குறித்து அவர் கூறியதாவது:-
“சிறு வயதுப் பிராயம் தாண்டி 13 முதல் 15 வயதிலான கால கட்டத்தில் ‘சிறுமி’யாகவும் நடிக்க முடியாது. பெரிய பெண்ணாகவும் நடிக்க முடியாது. அப்படியான காலகட்டத்தில் குச்சிப்புடி, கதக் நடனங்கள் கற்றுக்கொண்டேன். அப்போது நாடக மேடையில் கிடைத்த கதாநாயகி வாய்ப்பை விடாமல் பற்றிக்கொண்டேன். மவுலி, எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன், விசு என நாடக ஜாம்பவான்கள் அத்தனை பேரின் நாடகங்களிலும் தொடர்ந்து நடித்தேன்.இந்த காலகட்டத்தில் வருடம் தவறாமல், மயிலை ஆர்ட்ஸ் அகாடமியின் “சிறந்த நாடக நடிகை” விருது எனக்கு கிடைத்து விடும். நாடக காட்சியின்போது ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கான ஒரு நிமிடத்துக்கும் குறைவான இடைவெளியில் நான் வேறு புடவை மாற்றிக்கொண்டு நடிக்க வருவேன். இந்த வேகமான வித்தையை பார்த்து, நாடகத்துக்கு வந்த பெண்கள் ஆச்சரியப்பட்டார்கள். என்னிடம் நாடகம் முடிந்த நேரத்தில் இதுபற்றி பாராட்டி பேசியவர்களும் உண்டு.ஜெமினிகணேசன் சாரின் மனைவி புஷ்பவல்லியின் மகள் ரேகா, பின்னாளில் இந்தித் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். ரேகாவின் அண்ணன் பாபுஜியைத்தான் எனது இரண்டாவது அக்கா விஜயலட்சுமி திருமணம் செய்திருக்கிறார். இந்த பாபுஜி இயக்கிய ‘நயாபக்ரா’ இந்திப்படத்தில்தான் நான் ஹீரோயின் ஆனேன். படத்தில் எனக்கு ஜோடி வினோத் மெஹ்ரா. முழுக்க காமெடிப் படமான இந்தப்படம் இந்தியில் நன்றாகவே ஓடியது.

இந்த நேரத்தில் எனக்கு 16 வயது. எம்.ஜி.ஆர். சார் அப்போது “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தை தயாரிக்க வெளிநாடுகளுக்கு போவதாக இருந்தார். படத்தின் ஒரு கதாநாயகியாக என்னை நடிக்க வைக்கும் நோக்கில் என்னை அழைத்து வரச்செய்தார் எம்.ஜி.ஆர். அம்மாவுடன் போய் அவரை பார்த்தேன். எங்களிடம் நலம் விசாரித்த அவர், “படத்தின் 2 மாத படப்பிடிப்பு ஜப்பான், ஆங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் நடக்கிறது. எனவே, பயணச் செலவில் கூடுதல் செலவை தவிர்க்கும் விதத்தில் ‘கதாநாயகி’ மட்டுமே வரவேண்டும்” என்றார். பெண்ணை 2 மாத காலம் தனியாக அனுப்ப அம்மாவுக்கு மனதில்லை. அதனால் வீட்டில் கலந்து பேசிவிட்டு முடிவை சொல்கிறோம்” என்று சொல்லி விட்டு வந்தார். வீட்டிலும் சகோதரர்களுக்கு என்னை தனியாக அனுப்ப மனதில்லாதிருந்ததால் அந்த வாய்ப்பை ‘மிஸ்’ பண்ணி விட்டேன். சில நேரங்களில் தவறாக எடுக்கும் ஒரு முடிவு கூட எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்கு என் விஷயத்தில் என் குடும்பம் எடுத்த இந்த முடிவும் ஒரு உதாரணம்.

தொடர்ந்து நாடகத்திலும் நடித்து வந்ததால் சில கதாநாயகி வாய்ப்புகள் ‘மிஸ்’ ஆயின. இப்படி டைரக்டர்கள் கே.பாலசந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பி.மாதவன் ஆகியோர் படங்களுக்கு கேட்டு வந்த கதாநாயகி வாய்ப்பை நாடகத்துக்கு ஏற்கனவே கொடுத்த தேதிகள் கெடுத்தன. ஒரு டைரக்டர், “உனக்கு சினிமா முக்கியமா? நாடகம் முக்கியமா?” என்று கேட்டு கோபப்பட்டதும் உண்டு. நான் இப்படி மிஸ் பண்ணின சில படங்களில் ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா நடித்தார்கள். பின்பு எம்.ஜி.ஆர். சாரின் தங்கையாக “நான் ஏன் பிறந்தேன்” படத்திலும், சிவாஜி சாரின் மருமகளாக “நல்லதொரு குடும்பம்” படத்திலும் நடித்தேன். இப்படி சினிமா என்னை விட்டுப் போயிருந்தாலும், சின்னத்திரையில் நான் வலுவாக காலூன்ற அது ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்நிலையில், தனது கிரிக்கெட் பவுண்டேசனில் மேனேஜராக இருந்தவர் ரூ. 90 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார் குட்டி பத்மினி. அதுகுறித்து அவர் கூறியுள்ள செய்தியில், நான் நடத்தி வரும் கிரிக்கெட் பவுண்டேசனை நடிகர் விஷால்தான் திறந்து வைத்தார். இதை ஒரு மேனேஜரை வைத்து நடத்தி வந்தேன். ஆனால் அந்த நபர் எனக்கு தெரியாமல் இன்னொரு பவுண்டேசனை நடத்தி வந்திருக்கிறார். என பவுண்டேசனுக்கு வரும் வீரர்களை அவர் பக்கம் திருப்பி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். அதோடு என்னுடைய நிறுவனம் நஷ்டத்தில் ஓடுவதாக எனக்கு அவர் கணக்கு காட்டியுள்ளார். இதனால் அவர் என்னிடம் ரூ. 90 லட்சம் மோசடி செய்துள்ளார்.அவர் எனக்குத் தெரியாமல் இன்னொரு பவுண்டேசன் நடத்தி வரும் விவரம் எனக்கு இப்போதுதான் தெரியவந்தது. அதனால் இதுகுறித்து அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளேன். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்கிறார் குட்டி பத்மினி.சென்னை: பிரபல நடிகை குட்டி பத்மினி தனது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 3 பேர் ரூ.12 லட்சம் மோசடி செய்துவிட்டதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.பிரபல நடிகை குட்டி பத்மினி சிறு வயதில் இருந்தே நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிப்பை நிறுத்தி வி்ட்டு தன் கணவர் பிரபு நேபாலுடன் சேர்ந்து டி.வி. சீரியல்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
கணவர் பிரபு நேபாலுடன் சேர்ந்து டி.வி. சீரியல்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

.
நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்தார் நகரில் தன் குடும்பத்தோடு வசித்து வருகிறார். அங்கு தான் அவரது அலுவலகமும் உள்ளது. நேற்று காலை 11 மணியளவில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த நடிகை குட்டி பத்மினி துணை கமிஷனர் ஆசியம்மாளிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,என் அலுவலகத்தில் பணிபுரிந்த சமீரா என்ற பெண் உள்பட 3 பேர் சேர்ந்து எனக்கு தெரியாமல் ரூ.12 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். இது மட்டுமின்றி என் அலுவலகத்தில் இருந்து கணவர் பிரபு நேபாலுடன் சேர்ந்து டி.வி. சீரியல்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.







.
நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்தார் நகரில் தன் குடும்பத்தோடு வசித்து வருகிறார். அங்கு தான் அவரது அலுவலகமும் உள்ளது. நேற்று காலை 11 மணியளவில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த நடிகை குட்டி பத்மினி துணை கமிஷனர் ஆசியம்மாளிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,என் அலுவலகத்தில் பணிபுரிந்த சமீரா என்ற பெண் உள்பட 3 பேர் சேர்ந்து எனக்கு தெரியாமல் ரூ.12 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். இது மட்டுமின்றி என் அலுவலகத்தில் இருந்து நிறைய பைல்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். தற்போது அவர்கள் 3 பேரும் தலைமறைவாக உள்ளனர். சமீரா எனக்கு அனுப்பிய இ-மெயிலில், நான் பணத்தை கேட்டு போலீசில் புகார் கொடுத்தால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டியள்ளார். எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை வாங்கித் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டிருந்தது.இந்த புகாரின் பேரில் தக்க நடவடிக்கை எடுக்குமாறு நுங்கம்பாக்கம் உதவி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.





Filmography[edit]

Tamil[edit]

YearTitleRoleNote
1959Abalai Anjugam
1960Deiva Piravi
1961Pasa MalarYoung Radha
1962Azhagu NilaLakshmi
1962Nenjil Oru AalayamDying Child
1962Kaathiruntha KangalLalitha, Shenbagam
1962Avana IvanMeena
1963Aasai AligalKannama
1964NavarathiriLalitha Arputhara
1964Vazhkai VazhvatharkeValli
1965Kuzhandaiyum DeivamumLalli/Padmini "Pappi"
1966Sadhu MirandalPreema
1966Motor Sundaram PillaiRajee
1966Anbe Vaa
1967ThiruvarutselvarPonni
1967Naan
1967Anubavam Pudumai
1968Thirumal PerumaiYoung Kothai
1969Nam NaaduSelvi
1969Ulagam Ivvalavuthan
1970Maanavan
1972Naan Yen PiranthenAnoushia
1974Avalum PenthaneNishalu
1974Sisubalan
1977AvaragalGayathri
1978Aval Appadithanherself
1979Nallathoru Kudumbam
1981NanduLakshmi
1981Arumbugal
1986Mella Thirandhathu Kadhavu
1986Thazhuvatha Kaigal
1987Oru Thayin SabhathamMrs. Ravi
1987JallikattuKutty Amma
1987Kootu Puzhukkal
1987Kani Nilam
1987Neethikku Thandanai
1987Ullam Kavarntha Kalvan
1987Thali Dhanam
1988Sakalakala SammandhiVellai Amma
1988Kan Simittum NeramVanni
1988Illam
1988Therkathikkallan
1989Penn Buthi Pin Buthi
1990Shathriyan
1991Karpoora Mullai
1992Pattathu Raani

Telugu[edit]

YearTitleRoleNote
1959Daiva Balam
1959Illarikam
1960Shanthi Nivasam
1961Bhakta Jayadeva
1962Manchi Manasulu
1963Irugu Porugu
1965Anthasthulu
1966Asthi ParagluAmmulu
1966SakunthalaBharatha
1966Leta Manasulu(Puppy) / Lalitha (Lalli) (Dual role)
1967Chikkadu Dorakadu
1969Eka Veera
1969Kadhanayakudu
1969Vichithra Kudubam
1970Pasidi Manasulu
1971Vichithra Thambathiyam
1971Amaayakuraalu
1972Vichitra Bandham
1972Kula Gouravam
1978Chilipi KrishnuduCollege student
1982AnthaBanthaluAs a patient
1985Jeevitha Bandham
1986Karu Diddina Kapuram
1996Pavithra Bandham

Malayalam[edit]

YearTitleRoleNote
1964School Master
1965Odayil NinnuYoung Lakshmi
1965KuppivalaTharabi
1973Surya Gandhi
1976Aalinganam
1977Anandham Paramanandham
1977Aha Nimisham
1977Aa Nimisham
1978Vayanadan Thamban
1985Anubandham
1991Enda Sooriya Puthri

Kannada[edit]

YearTitleRoleNote
1963Saaku MagaluBabu (baby boy)
1965Satya HarischandraLohitasya
1967Sri Purandara Dasaru
1975Katha SangamaShoba

Hindi[edit]

YearTitleRoleNote
1963GrahasthiAbbitu
1963Dil Ek MandirUma
1987Kudrat Ka Kanoon

TV Serials[edit]

YearTitleCredited asLanguageNotes
ProducerDirectorWriterActed
1986ShrimanjiGreen tickGreen tickGreen tickHindi
1987Kishan KhanyaGreen tickGreen tickGreen tickHindi
1986Bhool Na JhanaGreen tickGreen tickHindi
1989TarazuGreen tickGreen tickHindi
1991KittigaduGreen tickGreen tickTamilTeluguHindi
1991Valar PiraiGreen tickGreen tickTamil,
1991VaishaliGreen tickGreen tickTamil
1992SangurshGreen tickGreen tickHindi
1994Aadhar ShilaGreen tickGreen tickGreen tickHindiTamil
1995F.I.RGreen tickGreen tickGreen tickTamil
1995KadamaiGreen tickGreen tickGreen tickTamil
1995Kash Ma KashGreen tickGreen tickHindi
1995Nijamana UyarangalGreen tickTamil
1995Oliyum OliyumGreen tickTamil
1995Thulasi ThalamGreen tickTamil
1996Ab Aaya Na MazaGreen tickGreen tickHindi
1996SthreeGreen tickGreen tickHindi
1996Dharm AdharmGreen tickHindiTamil
1996Anandha Rao PalliGreen tickTelugu
1997Olimighu BharathamGreen tickTamil
1997Ungal ViruppamGreen tickTamil
1997NayagiGreen tickGreen tickTamil
1997Pen NinaithalGreen tickGreen tickGreen tickTamil
1998Naveena NakeeranGreen tickGreen tickTamil
1999PoomanamGreen tickGreen tickGreen tickTamil
2000UravugalGreen tickTamil
2000KrishnadasiGreen tickGreen tickTamil
2001Jhala KhreedaiGreen tickTamil
2001NilaGreen tickTamil
2002Chutti Payal KittuGreen tickTamil
2002SwarangalGreen tickTamil
2002KadhiravanGreen tickGreen tickTamil
2002Swaati MuthuGreen tickGreen tickKannada
2002Thillu MulluGreen tickTamil
2004Kana KandenGreen tickTamil
2004BairaviGreen tickGreen tickTamil
2003Cinta Bollywood (Part - I)Green tickMalay
2003Cinta Bollywood (Part - II)Green tickMalay
Masakan Afrikan SeletanGreen tickMalay
2004Malayu AftrikaGreen tick-
2004Masakan IndiaGreen tick-
2004Teroka AfrikaGreen tickMalay
2004Teroka IndiaGreen tick-
2004Teroka JaipurGreen tick-
Avakai GirlsGreen tickTelugu
2007KoharaGreen tickGreen tickGreen tickHindi
Kannadi KadavugalGreen tickTamil
2008KalasamGreen tickGreen tickTamilCreative Head
2010BakthavijayamGreen tickTamil
2010SuryaputhriGreen tickTamil
2012Romapuri PandianGreen tickGreen tickTamil
2015RamanujarGreen tickGreen tickTamil
2016Thenpandi SingamGreen tickTamil
2017Maya ThirraiTamilCreative Head

Awards and honours[edit]

No comments:

Post a Comment