Monday 15 June 2020

C.L.ANANDAN ,TAMIL ACTOR BORN 1933 JUNE 15 - 1989 MARCH 25





C.L.ANANDAN ,TAMIL ACTOR BORN
      1933 JUNE 15 - 1989 MARCH 25




.சி. எல். ஆனந்தன் (இறப்பு: மார்ச் 25, 1989) தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் 1960 ஆம் ஆண்டில் விஜயபுரி வீரன் படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். சண்டைக் காட்சிகளில் இவர் சிறந்து விளங்கினார்.[1
நடிப்புத் துறையில்
1960ல் சிட்டாடல் பிலிம்சின் விஜயபுரி வீரன் படத்தில் ஜோசப் தளியத் இயக்கத்தில் ஆனந்தன் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். ஹேமலதா இப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். குதிரைச் சவாரி, கத்திச் சண்டைகளில் இவர் நடித்தார். இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. காட்டு மல்லிகை என்ற படத்தில் புலியுடன் சண்டை போடும் காட்சியில் அவரே நடித்தார். 1962 ஆம் ஆண்டில் வீரத்திருமகன் படத்தில் குமாரி சச்சுவுடன் இணைந்து நடித்தார்.[1]

கொங்கு நாட்டு தங்கம், யானை வளர்த்த வானம்பாடி மகன், நீயா நானா, நானும் மனிதன் தான், காட்டு மல்லிகை, அடுத்த வாரிசு, அந்த ஒரு நிமிடம், செந்தூரப் பூவே ஆகியவை ஆனந்தனின் குறிப்பிடத்தக்க படங்கள்.

பிற்காலத்தில், எம். ஜி. ஆருடன் இணைந்து தனிப்பிறவி, நீரும் நெருப்பும் ஆகிய படங்களில் நடித்தார். அதன் பின்னர் ஆனந்தனின் பட வாய்ப்புகள் குறைந்தன.

தயாரிப்பாளராக
நண்பர்களுடன் சேர்ந்து ஆனந்தன் மூவிஸ் என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நானும் மனிதன் தான் என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படம் பெரு வெற்றி பெறவில்லை.[2]

மறைவு
ஆனந்தன் 1989 மார்ச் 25 இல் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு தனது 56வது அகவையில் காலமானார்.[3] ஆனந்தனின் மனைவி பெயர் லட்சுமி அம்மாள். 3 மகன்கள். 4 மகள்கள். பிற்காலத்தில் நடன நடிகையாக விளங்கிய டிஸ்கோ சாந்தி அவரது மகள்களில் ஒருவர். இன்னொரு மகள் லலிதா குமாரி பிரகாஷ் ராஜை திருமணம் செய்தார்.[3] லலிதாகுமாரியும் மகன் ஜெய்ராமும் திரைப்படங்களில் நடித்தனர்[1]

நடிகர் சி. எல். ஆனந்தன்

அட... அந்த ஹிட்டான பாடல் ஆனந்தன் படத்திலா வருகிறது என்று நாம் வியக்கும் அளவுக்கு அருமையான பாடல்கள் இவர் நடித்த படங்களில் இடம் பெற்றன. இவர் சான்றோர சமூகத்தவர் எனபது மட்டும் எனக்குத் தெரியும். ஆனால் இவரது சொந்த ஊர் மற்றும் பெற்றோர் உடன் பிறந்தோர் விபரங்கள் கிடைக்கவில்லை! யாருக்கும் தெரியுமா? தகவல் குடுத்தால் உதவியாக இருக்கும். வாள் வீச்சில் புது லாவண்யத்தை கொண்டு வந்தவர் இந்த வாள் வீச்சு வீரர்.

தமிழ்த் திரையில் எம்.ஜி.ஆர், ரஞ்சன், ஸ்ரீராம் ஆகியோருக்கு அடுத்து வாள்வீச்சில் வல்லவராக இருந்தார் சி.எல்.ஆனந்தன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவருடனும் பல படங்களில் நடித்தவர் சி.எல்.ஆனந்தன். விஜயபுரி வீரன் ஆனந்தன் என்றே ஊடகங்களாலும் மற்றவர்களாலும் இவர் அடையாளப் படுத்தப்பட்டுள்ளார்.
படங்களில் ஸ்டண்ட் நடிகராகவும் கோஷ்டி நடனக்காரராகவும் நடித்து வந்த சி.எல்.ஆனந்தனை நாயகனாக்கி, THREE MUSKETERS படத்தை தமிழில் விஜயபுரி வீரன் என்ற பெயரில் தயாரித்தார் சிட்டாடல்
ஃபிலிம்ஸின் அதிபர் ஜோசப் தளியத். ஆனந்தன் பெயரே அவர் நடித்த வேடத்தின் பெயராகவும் இப்படத்தில் அமைந்துள்ளது. டி.கே.எஸ்.நாடகக் குழுவில் நடித்து வந்த ஹேமலதா என்பவரை இப்படத்தின் நாயகியாக நடிக்க வைத்தனர். இப்படம் வெற்றிப் படமாக அமைந்தது. இப்படத்தில் ஆனந்தனின் வாள் வீச்சைக் கண்டு தமிழ்த் திரையுலகமே சற்று பிரமிக்கத்தான் செய்தது.

குடும்பக் கதைகளையே தயாரித்த ஏவி.எம். நிறுவனத்தின் முதல் சண்டைப் படமாக வீரத்திருமகன் படம் அமைந்தது. ஏவி.எம். நிறுவனத்திற்காக ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கிய முதல் படம் இது. இப்படம் ஏவி.எம். என்ற பெயரில் வராமல், முருகன் பிரதர்ஸ் என்ற பெயரில் திரையிடப்பட்டது. தமிழ்ப் படங்களிலேயே முதன் முதலாக மெüண்ட் ரோடில் நியான் ûஸன் விளம்பரம் செய்யப்பட்டதும் இப்படத்திற்குத்தான். முதன் முதலில் தண்ணீரில் செட்டிங் போட்டு எடுத்த படமும் இதுவாகத்தானிருக்கும். நீலப் பட்டாடை கட்டி பாடல் காட்சிக்காக சென்னைக்கருகிலுள்ள துரைப்பாக்கத்தில் தண்ணீர் சூழ்ந்த பகுதியில், ஒரு தாமரைப் பூவும் அதைச் சுற்றிலும் 24 தாமரை இலைகளும் அமைக்கப்பட்டு படமாக்கப் பட்டது.

இப்படியான பலவிதங்களில் முதன்மையான வீரத்திருமகன் படமானது, விஜயபுரி வீரன் படத்தைப் போல வெற்றி பெறவில்லையென்றாலும் சுமாரான வெற்றியைத் தொட்டது.
நானும் மனிதன்தான் என்ற படத்தை ஆனந்தன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்தார். இப்படம் வெற்றி பெறவில்லை என்றாலும், ஆனந்தன் ஒரு சிறந்த நடிகர் என்ற பெயரை அவருக்கு பெற்று தந்தது. விஜயபுரி வீரன் படத்தில் நடித்த பாண்டி செல்வராஜ் என்பவர், இப்படத்தில் நடித்ததுடன் இப்படத்தின் கதை வசனத்தையும் எழுதியுள்ளார். பஞ்சு அருணாசலம் முதன் முதலாக எழுதிய திரைப் பாடல் இப்படத்தில்தான் இடம்பெற்றது.

இவர் பெண் வேடமிட்டு நடித்த ஒரே படம் வீரத்திருமகன் படம் மட்டுமே. இப்படத்தில் வரும் வெத்தல போட்ட பத்தினி பொண்ணு என்ற பாடல் காட்சியில் டி.எம்.எஸ். குரலில் பாடலை பாடி நடித்துள்ளார் ஆனந்தன்.
சண்டைக் காட்சிகளில் மட்டுமின்றி, மிருகங்களுடன் நடிக்கும் காட்சிகளிலும் (டூப் போடாமல்) இவரே துணிவுடன் நடித்தார். காட்டு மல்லிகை (புலி), செங்கமலத் தீவு (சிறுத்தை), குபேரத் தீவு (கரடி) போன்ற படங்களில் மிருகங்களுடன் நடித்தபோது, மிருகங்கள் தந்த வீர விருதுகளென, இவர் உடலில் காயத்தழும்புகள் இருந்தன.

தனிப் பிறவி படத்தில் நாயகி ஜெயலலிதாவுக்கு சித்தப்பாவாக நடித்துள்ளார் ஆனந்தன். நீரும் நெருப்பும் படத்தில் எம்.ஜி.ஆருக்கும் ஆனந்தனுக்கும் நடக்கும் நகைச்சுவையான வாள் சண்டையில், இடது கரத்தாலேயே வாளை வீசி ஆனந்தனை வெற்றி கொள்வார் எம்.ஜி.ஆர்.
கல்யாண மண்டபம் படத்தில் ஆனந்தன் நாயகன், ரவிச்சந்திரனுக்கு துணை வேடம். நினைவில் நின்றவள், எதிரிகள் ஜாக்கிரதை ஆகிய படங்களில் ரவிச்சந்திரன் நாயகன், ஆனந்தனுக்கு துணை வேடம்.
அடுத்த வாரிசு படத்தில் விரல் நகத்தை கடிக்கும் வீரய்யன் வேடத்தில் நடித்தார் ஆனந்தன். இந்த வீரய்யன், படத்தின் நாயகனைப் (ரஜினியைப்) போல் முகமாஸ்க் போட்டு (ரஜினியாக) நடிப்பார். வில்லத்தனம் வெளிப்பட்டு முகமாஸ்க் எடுக்கப்பட்ட பிறகு வீரய்யன் (ஆனந்தன்) முகத்திலேயே நடிப்பார்.

அந்த ஒரு நிமிடம் படத்தில் நாயகன் கமலுக்கும் வில்லன் ஆனந்தனுக்கும் நடக்கும் வாள் சண்டையில் கமல் ஜெயித்து விடுவார். அப்பொழுது உடனிருக்கும் மகேந்திரன், இதுக்கு விஜயபுரியில இருந்து ஒரு வீரன கொண்டாந்துட்டாங்க என்று நையாண்டி பேசுவார்.

ஆனந்தன் கதாநாயகனாக 11 படங்களிலும், துணை வேடங்களில் 14 படங்களிலும் ஆக மொத்தம் 25 படங்களில் நடித்துள்ளார். கதாநாயகனாக நடித்த 11 படங்களும் கருப்பு வெள்ளை படங்களாகும். துணை வேடங்களில் நடித்த 14 படங்களில் நீரும் நெருப்பும், அடுத்த வாரிசு, அந்த ஒரு நிமிடம், செந்தூரப்பூவே, யானை வளர்த்த வானம்பாடி மகன் ஆகிய 5 படங்கள் வண்ணப் படங்களாகும்.

ஆனந்தன் கதாநாயகனாக நடித்த 11 படங்களில் கொங்கு நாட்டு தங்கம், செங்கமலத் தீவு, நீயா நானா, குபேரத் தீவு, நானும் மனிதன்தான், லாரி டிரைவர் ஆகிய 6 படங்கள் சமூகக் கதையமைப்பு கொண்ட படங்களாகும், விஜயபுரி வீரன், வீரத் திருமகன், காட்டு மல்லிகை, கல்யாண மண்டபம், தாயின்மேல் ஆணை ஆகிய 5 படங்கள் சரித்திர ராஜா ராணி கதையமைப்பு கொண்ட படங்களாகும்.



சி.எல்.ஆனந்தன் துணை வேடங்களில் நடித்த படங்களும் அப்படங்களின் நாயக நடிகர்களும் 1.எம்.ஜி.ஆர். தனிப் பிறவி, நீரும் நெருப்பும் 2. ஜெமினி கணேசன் பொற்சிலை, மலைநாட்டு மங்கை, யானை வளர்த்த வானம்பாடி மகன் 3. ஜெய்சங்கர் அத்தை மகள், யார் நீ, நான்கு கில்லாடிகள் 4. ரவிச்சந்திரன் நினைவில் நின்றவள், எதிரிகள் ஜாக்கிரதை, 5. ரஜினிகாந்த் அடுத்த வாரிசு 6. கமல் ஹாசன் அந்த ஒரு நிமிடம் 7. விஜயகாந்த் - செந்தூரப்பூவே
நாகேஷ் உடன் 6 படங்களில் சேர்ந்து நடித்துள்ளார் ஆனந்தன்.

ஆனந்தன் சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடிப்பதற்கு, ஸ்டண்ட் சுவாமிநாதன் என்பவர் பயிற்சியளித்தார். விஜயபுரி வீரன், வீரத்திருமகன், குபேரத் தீவு, செங்கமலத் தீவு, நானும் மனிதன்தான் ஆகிய படங்களில் இவ்விருவரும் இணைந்துள்ளனர். இன்றைய ஸ்டண்ட் மாஸ்டர் பெப்ஸி விஜயனின் தந்தைதான் இந்த ஸ்டண்ட் சுவாமிநாதன்.

எம்.ஜி.ஆர். மீது மிகப் பற்று கொண்டவராக ஆனந்தன் இருந்தார். எம்.ஜி.ஆர். தி.மு.க. விலிருந்து விலகி அ.தி.மு.க. தொடங்கிய போது அ.தி.மு.க. வில் இணைந்த முதல் நடிகர் ஆனந்தனேயாவார். அ.தி.மு.க. வுக்காக கட்சி பிரச்சாரங்களும் இவர் செய்துள்ளார்.

சி.எல்.ஆனந்தன் மனைவியின் பெயர் லட்சுமியம்மாள். லட்சுமியம்மாள் பொறுமையும், துணிவும் கொண்டவராக இருந்து, குடும்பச் சுமையை கணவருக்குத் தராமல் தானே நிர்வகித்து, பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினார். சி.எல்.ஆனந்தன் லட்சுமியம்மாள் தம்பதியருக்கு 3 மகன்களும் 4 மகள்களும் உள்ளனர். சி.எல்.ஆனந்தன் எந்தவொரு விஷயத்தையும் மனம் திறந்து பேசக்கூடியவர். எனது வாரிசுகள் படத்தில் நடிப்பது கலைச் சேவைக்காக அல்ல, வயிற்றுப் பிழைப்புக்காகவே ஆகும், எனது பிள்ளைகள் என்னை காப்பாற்றுகின்றன என்று மனம் திறந்து பேசியவர் இவர்.



இவரின் மகள்கள் டிஸ்கோ சாந்தி, லலிதகுமாரி, மகன் ஜெயராமன் ஆகியவர்களும் படங்களில் நடித்துள்ளார்கள். நடிகர் பிரகாஷ்ராஜ் முதலில் மணந்தது லலிதகுமாரியைத்தான். ஆந்திர படவுலக நாயக நடிகர் ஸ்ரீஹரி, டிஸ்கோ சாந்தியின் கணவர்.
மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு, அப்பலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற ஆனந்தன் 25.03.1989 அன்று அதிகாலையில் தமது 56 ஆம் வயதில் காலமானார்.

நடித்த திரைப்படங்கள்
விஜயபுரி வீரன்
வீரத்திருமகன்
கொங்கு நாட்டு தங்கம்
யானை வளர்த்த வானம்பாடி மகன்
காட்டு மைனா
காட்டு மல்லிகை
தனிப் பிறவி
நீரும் நெருப்பும்
நீயா நானா
நானும் மனிதன் தான்


சினிமாவில் சண்டைக் கலைஞர்களாக இருப்பவர்களில் பலர் ஹீரோவாக நடிக்கும் கனவில் சினிமாவுக்கு வந்தவர்கள். அவர்களுக்குள்ளும் அந்த ஹீரோ கனவு மறைந்திருக்கும் . ஆனால் சண்டைக் கலைஞர்கள் ஹீரோக்களாவது மிகவும் அபூர்வம்.

இப்போதே இப்படி என்றால் கருப்பு வெள்ளை காலத்தில் சினிமா இரும்புக் கோட்டையாக இருந்தபோது அதை நினைத்துப் பார்க்கவே  முடியாது. அப்படியொரு காலகட்டத்தில் சண்டைக் கலைஞராக இருந்து ஹீரோவானவர் சி.எல்.ஆனந்தன். பிற்காலத்தில் விஜயபுரி வீரன் என்றே அழைக்கப்பட்டார். அந்த அளவிற்கு அவரது முதல் படம் அமைந்தது.

நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களில் முக்கியமானவர் சி.எல்.ஆனந்தன். நாடகங்களில் வரும் மல்யுத்த சண்டைக் காட்சிகள், வாள்சண்டைக் காட்சிகளில் நடித்து வந்தவர் பின்னர் சினிமாவுக்கு வந்தார்.  திரைப்படங்களில்  சண்டைக் கலைஞராகவும், நடனக் கலைஞராகவும் இருந்தார். பலர் சண்டையிடும் காட்சியில் ஒருவராக நடித்தார். குரூப் நடனங்களில்  ஒருவராக ஆடினார். ஆனால்  அவருக்குள் ஹீரோவாக வேண்டும் என்கிற கனவு இருந்துகொண்டே இருந்தது. அது ‘விஜயபுரி வீரன்’ படத்தில் நிறைவேறியது.

அப்போது பிரபலமாக இருந்த  இயக்குனர்  திருலோகசந்தர் எழுதியிருந்த கதைதான் ‘விஜயபுரி வீரன்’. இதனை சிட்டாடல் நிறுவனம் படமாகத் தயாரித்தது. ஜோசப் தளியத் இயக்குவதாக  முடிவானது.

சிறிய பட்ஜெட்டில்  முற்றிலும் புதியவர்களைக் கொண்டு இந்தப் படத்தைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான நடிகர் நடிகைள் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வில் நாடக நடிகர்கள், சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடிப்பவர்கள், சண்டைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் கலந்து கொண்டார்கள்.  அவர்களில் ஒருவராகக் கலந்து கொண்டார் ஆனந்தன்.

இதில் நடிப்பவர்களுக்கு  கத்திச் சண்டை வாள்சண்டை நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்  என்பதால் அது தொடர்பான தேர்வும் நடந்தது. இதில் ஆனந்தன் வெற்றி பெற்று ஹீரோவானார்.

அவருக்கு ஜோடியாக டி.கே.எஸ்  நாடகங்களில் நடித்து வந்த ஹேமலதா அறிமுகமானார்.  புதுமுகங்கள் நடித்திருந்தாலும் படத்தில் ஆனந்தன் போட்ட கத்திச் சண்டையும், வாள் சண்டையும் மக்களால்  ரசிக்கப்பட்டது. ஆனந்தனை விஜயபுரி வீரனாகவே பார்த்தனர். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. படம் 1960ல் வெளிவந்தது.

முதல் படம் வெற்றி பெற்றாலும் ஆனந்தனுக்கு அடுத்த படம் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. காரணம், எம்.ஜி.ஆர் என்பார்கள். தன்னை விட சிறப்பாக சண்டைபோடுகிறார், ஸ்டைல் பண்ணுகிறார் என்பதை மனதில்  கொண்டு ஆனந்தனை கட்டுக்குள் வைத்திருக்க எம்.ஜி.ஆர் முயற்சித்தார் என்று கூறப்படுவதுண்டு. என்றாலும் 1962ல் வெளிவந்த வீரத்திருமகன் படமும் ஆனந்தனுக்கு நல்ல புகழைக் கொடுத்தது. இதில்  குமாரி சச்சு அவர் ஜோடியாக நடித்தார். ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது.

இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு ஆனந்தனுக்கு அமைந்த படங்கள் பெரிதாகப் பேசப்படவில்லை. கொங்குநாட்டுத் தங்கம், யானை வளர்த்த வானம்பாடி, நீயா நானா படங்களில் நடித்தார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் படங்களில் சண்டைக் காட்சிகள் தொடர்புடைய கேரக்டர்களில் நடித்தார். ஆனந்தன் தான் நடித்த படங்களில் ஈடுபாட்டுடன் நடிப்பார்.

‘காட்டுமல்லி’ என்ற படத்தில் அவர் புலியுடன் சண்டைபோடும் காட்சி இப்போதும் பிரபலம். ‘நானும் மனிதன்தான்’ என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் படம் தோல்வி அடைந்து, ஆனந்தனுக்கு பெரும் பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தியது. 1989ம் ஆண்டு காலமானார்.

எம்.ஜி.ஆர், ரஞ்சனுக்கு இணையாக சண்டைக் காட்சிகளில் திறமை காட்டியவர். சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடிக்கக் கூடியவர், சரித்திரப் படங்களுக்கேற்ற முகத்தோற்றம் கொண்டவர். சமூகப் படங்களில் நடிப்புத் திறமையைக் காட்டியவர்.

ஆனாலும் சினிமாவில் கிடைத்த வெற்றியை ஆனந்தனால்  தக்க வைக்க முடியவில்லை. வாள் சண்டையில் எதிரிகளை ஜெயித்தவரால்  சினிமா  சூழ்ச்சிகளை எதிர்கொள்ள முடியாமல்  போனது.  அதனால் நல்ல கலைஞர் ஒரு சில படங்களுக்குள்ளேயே முடங்கிப்போனார்.





வாழ்க்கை படம், தமிழிலும், ஜீவிதம் என்ற பெயரில், தெலுங்கிலும், சக்கை போடு போட்டதால், அந்த படத்தை, இந்தியில் எடுப்பதற்காக, என் அப்பாவும் - அம்மாவும், ரயிலில் மும்பைக்கு புறப்பட்டனர். அக்காலத்தில், சென்னையிலிருந்து மும்பை செல்ல, ரயில் பயணம் தான் வசதி.
மும்பை செல்ல, இரண்டு இரவுகளும், ஒரு பகலும் ஆகும். ரயிலில், 'ஏசி' வகுப்பு இருக்காது. விமானத்தில் செல்ல வேண்டுமென்றால், இரவு, 10:00 மணிக்கு, சென்னையிலிருந்து, 'ஏர் மெயில்' என்ற தபால் எடுத்து செல்வதில் புறப்பட்டால், நள்ளிரவு, 1:00 மணிக்கு, நாக்பூர் சென்றடையும்.
அங்கிருந்து, டில்லி, மும்பை, கோல்கட்டாவிலிருந்து வந்து போகும் விமானங்களுக்காக காத்திருந்து, மும்பை செல்லும் விமானத்தை பிடிக்க வேண்டும். இரவு நேரத்தில், விமானம் விட்டு விமானம் மாறிச் செல்வது, அசவுகரியமாக இருக்கும் என்பதால், பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புவார், அப்பா.
மே மாதத்தில், இவர்கள் பயணம் அமைந்ததால், கடும் வெயிலில் சென்று கொண்டிருந்த ரயில், ஆந்திராவில் ஒரு ஜங்ஷனில் நின்றது. அப்போது, பகல், 11:00 மணி, நான்கு ஆட்கள், ரயில் பெட்டியில் ஒட்டியிருந்த பயணியர் விபரத்தில், பெயரை சரி பார்த்தனர். பின், அவர்களுக்குள் தெலுங்கில் ஏதோ பேசி, மடமடவென்று உள்ளே ஏறினர். அவர்களின் நடவடிக்கைகளை பார்த்து, பயந்து போயினர், அப்பாவும், அம்மாவும்.
வந்தவர்களிடம், 'பிலிம்' எடுத்து செல்ல உபயோகப்படும், இரண்டு பெரிய இரும்பு பெட்டிகள் இருந்தன. அதை, ரயில் பெட்டியின் உள்ளே வைத்து திறந்தனர். உள்ளே, சிறிதும், பெரிதுமாக ஐஸ் கட்டிகள் இருந்தன. அதன் மேல், ஐஸ் உருகாமல் இருக்க, மரத்துாள் துாவப்பட்டிருந்தது.
மின் விசிறியின் கீழ் ஐஸ் பெட்டி இருந்ததால், காற்று பட்டு, ரயில் பெட்டி எங்கும் 'ஜில்'லென்று குளுமை பரவத் துவங்கியது. அந்த குளுமை வெளியேறி விடாமலிருக்க, தெலுங்கில் பேசியபடி, ஜன்னல்களை மூடினர். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ஒன்றும் புரியவில்லை.
அப்பாவிடம், 'ஐயா... நீங்கள் தானே, ஏவி.எம்., அதிபர்...' என்று கேட்டனர்.
'ஆம்...' என்று தலையசைத்தார், அப்பா.
'நீங்கள், இந்த ரயிலில் மும்பை போகிறீர்கள் என்று, இப்போது தான் சென்னையிலிருந்து எங்களுக்கு போன் வந்தது. வெயில் அதிகமாக இருப்பதால், ரயில் வருவதற்கு முன், ஐஸ் பெட்டிகளை தயார் செய்து எடுத்து போகும்படி சொன்னார், எங்கள் முதலாளி...' என்றனர்.
ஆச்சரியத்தில் என்ன சொல்வதென்று தெரியாமல், அப்பாவும், அம்மாவும் அவர்களை பார்க்க, தொடர்ந்து அவர்களே பேசினர்...
'நீங்கள் தயாரித்த, ஜீவிதம் படம், எங்கள் தியேட்டரில், 'சூப்பர் ஹிட்' ஆக ஓடிக் கொண்டிருக்கிறதய்யா... அந்த சந்தோஷத்தில், ஒரு நன்றியாக, இந்த ஏற்பாட்டை செய்தார். இதை செய்ததில் எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமய்யா...' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, விசிலடித்து, ரயில் கிளம்பியது. வந்தவர்கள், 'வரோம்ய்யா...' என்று அவசரமாக இறங்கிக் கொண்டனர்.
இதை சற்றும் எதிர்பாராத அப்பா, அவர்களுக்கு உதவலாம் என நினைத்து, எழுந்து, செல்வதற்குள், அவர்களை கடந்து சென்று கொண்டிருந்தது, ரயில். எதையுமே எதிர்பார்க்காமல் அவர்கள் வந்து ரயில் பெட்டியை குளிர்வித்த சந்தோஷத்தில், நன்றிப் பெருக்கோடு கையசைத்து விடை கொடுத்தார்.
அப்பாவுக்கும், அம்மாவுக்கும், ஆந்திர மக்கள் காட்டிய அன்பிலிருந்து விடுபட, நீண்ட நேரமானது.
ஞான சவுந்தரி என்ற படத்தை, தயாரித்து, இயக்கி வெளியிட்டவர், சிட்டாடல் மூவிசின், ஜோசப் தளியத். இவர், விஜயபுரி வீரன் என்ற படத்தை தயாரித்து, வெளியிட்டிருந்தார். அந்த படம், மாபெரும் வெற்றி கண்டு பரபரப்பாக பேசப்பட்டது. அறிமுகமான முதல் படத்திலேயே,
சி.எல்.ஆனந்தன் புகழ்பெற்ற நடிகராகி விட்டார்.
அப்படத்தை பார்த்த நானும், என் சகோதரர்களும், இதைப் போல ஒரு படத்தை, நடிகர், சி.எல்.ஆனந்தனை வைத்து எடுக்கலாம் என, விரும்பினோம்.
அப்போது, எங்களை சந்தித்த நடிகர், எஸ்.ஏ.அசோகன், எங்கள் கருத்தை அறிந்து, 'ஏ.சி.திருலோகசந்தர் என்ற எழுத்தாளரை அழைத்து வருகிறேன்; அவரிடம் கதை கேட்டு பாருங்கள். அவர் தான், விஜயபுரி வீரன் படத்தின் எழுத்தாளர்...' என்றார்.
நடிகர் அசோகன், படத்தில் தான் வில்லனே தவிர, பழகுவதற்கு மிக இனிமையானவர்; பட்டதாரி, பண்பு மிகுந்தவர், எங்களுக்கு நெருங்கிய நண்பர்.
திருலோகசந்தரை அழைத்து வந்து, எங்களுக்கு அறிமுகம் செய்தார். அவரிடம், 'நடிகர் ஆனந்தனை வைத்து படம் எடுக்க முடிவு செய்துள்ளோம்.
உங்களிடம், விஜயபுரி வீரன் போன்ற கதை இருந்தால் சொல்லுங்கள்...' என, கேட்டோம்.
'ஆங்கில படம் போன்ற கதை அமைப்புடன், கத்தி சண்டையெல்லாம் வைத்து, ஆனந்தனுக்காகவே ஒரு கதை எழுதி வைத்திருக்கிறேன். என்னை இயக்குனராக வைத்து, நீங்கள் படம் இயக்குவதென்றால், கதை சொல்கிறேன். உங்களுக்கு பிடித்திருந்தால், எனக்கு இயக்குனர் வாய்ப்பு கொடுங்கள்...' என்றார்.
அசோகனிடம் அவரை பற்றி கேட்டோம்.
'ஆர்.பத்மநாபன், வீணை எஸ்.பாலசந்தரிடமும், விஜயபுரி வீரன் படத்திலும், துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். வார பத்திரிகைகளில் சிறுகதைகளும் எழுதி இருக்கிறார்.
'சுறுசுறுப்பான இளைஞர்; அதோடு, எம்.ஏ., பட்டதாரியும் கூட. நீங்கள் விரும்புவது போல், ஆங்கில படம் போன்ற கதையை எடுத்துக் கொடுப்பார். தாராளமாக அவரை வைத்து படம் இயக்கலாம்...' என்றார், அசோகன்.
திருலோகசந்தரிடம் கதை கேட்டு, பிடித்திருந்ததால், அவரை இயக்குனராக அறிமுகப்படுத்த முடிவு செய்து, இவ்விபரத்தை அப்பாவிடம் தெரிவித்தோம்.
'என்னப்பா இது... ராஜா கதை, கத்தி சண்டை என்கிறீர்கள். எதற்கு இந்த மாதிரியெல்லாம் படம் எடுக்க ஆசைப்படுகிறீர்கள்... அதிலும், நீங்கள் சினிமாவில் கற்க வேண்டியது நிறைய இருக்கு. அப்புறமா பார்த்துக்கலாம்...' என, மறுத்து விட்டார்.
நாங்கள் நேரடியாக படத் தயாரிப்பில் ஈடுபடுவதை, அப்பா விரும்பவில்லை என்பதை புரிந்து, வருத்தமடைந்தோம்.
இவ்விஷயத்தை, எங்கள் அம்மாவிடம் சொல்லி முறையிட்டோம். எங்களின் ஆர்வத்தை உணர்ந்த அம்மா, 'பிள்ளைகள் ஆசைப்படுகின்றனர். படம் எடுக்கட்டுமே... ஏன் வேண்டாம் என்று தடுக்கிறீர்கள்...
'அவர்களின் பட தயாரிப்பில் ஏதேனும் குறை கண்டால், அதை நீங்கள் சரி செய்யலாமே... உங்கள் மேற்பார்வையில் அவர்களை வழி நடத்துங்கள். இதை, நீங்கள் செய்யாமல் வேறு யார் செய்வது...' என்று, அப்பாவிடம் நயமாக எடுத்துரைத்தார்.
— தொடரும்

பிலிம் நியூஸ் ஆனந்தன் சிறப்பு பேட்டி

சிவாஜியின் நெருங்கிய நண்பர் முத்து மாணிக்கம். அவருக்காக சிவாஜி நடித்து கொடுத்த படம் ‘விடிவெள்ளி’. சிவாஜியின் மகன்கள் பெயரில், அதாவது பிரபு ராம் பிக்சர்ஸ் என்ற பெயரில் இப்படம் உருவானது. கதை, வசனங்களுடன் படத்தை ஸ்ரீதர் இயக்கினார். ஏ.எம்.ராஜா இசையமைத்தார். பாடல்கள் கண்ணதாசன். ஒளிப்பதிவு வின்சென்ட். சிவாஜி, சரோஜா தேவி, எம்.என்.ராஜம், சாந்தகுமாரி, எஸ்.வி.ரங்காராவ், பாலாஜி, சந்திரபாபு நடித்தனர். தெலுங்கில் கஷ்ட சுகாலு பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. 100 நாட்களை தாண்டி வெற்றியை கொண்டாடிய படம்.

இப்படத்தின் வெற்றி மூலம் ஸ்ரீதர் மேலும் புகழ் பெற்றார். காதல் கதைகள் மட்டுமின்றி எல்லாவித கதைகளிலும் திறமை காட்ட முடியும் என நிரூபித்தார் ஸ்ரீதர்.கிறிஸ்தவ கதை படங்களை எடுத்து வந்த சிட்டாடல் பிலிம்ஸ் தயாரித்த படம் ‘விஜயபுரி வீரன்’. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவானது. ஜோசப் தாளியத் இயக்கினார். ஜோசப் தாமஸ் தயாரித்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் இவர் தயாரித்த படம் இது. ஏ.சி.திருலோகசந்தர் கதை எழுதியிருந்தார். வசனங்களை எழுதியது நாஞ்சில் நாடு டி.என்.ராஜப்பா. இசை அமைத்தது டி.ஆர்.பாப்பா. பாடல்கள் தஞ்சை ராமைய்ய தாஸ், ஆத்மநாதன், கே.டி.சந்தானம். ஒளிப்பதிவு ஆர்.என்.பிள்ளை. சி.எல்.ஆனந்தன் அறிமுகமான படம். அவர்தான் ஹீரோ. டிகேஎஸ் நாடக குழு நடிகை ஹேமலதா, நாயகியாக அறிமுகம் ஆனார். சந்திரகாந்தா, ஜோதி, காமினி, அசோகன், எஸ்.வி.ராமதாஸ், பாண்டி செல்வராஜ், ராமராவ் நடித்தனர். இப்படத்தின் வாள் சண்டை காட்சிகள் புகழ் பெற்றவை. வெற்றிப் படம்.

ஹீரோக்கள் பலர் தயாரிப்பாளர் ஆகும் சூழலை இப்போது அதிகம் பார்க்கிறோம். அப்போதே அந்த நிலை இருந்தது. வில்லன் நடிகர்கள் சிலரும் கூட அது போல் பட தயாரிப்பில் ஈடுபட்டனர். அவர்களில் ஒருவர் பி.எஸ்.வீரப்பா. அவர் தயாரித்த படம் ‘வீரக்கனல்’. ஒளிப்பதிவு, இயக்கம் ஜி.கே.ராமு.

வசனம் கண்ணதாசன், அய்யாபிள்ளை. இசை கே.வி.மகாதேவன். கண்ணதாசன், மருதகாசி பாடல்கள். ஜெமினி, அஞ்சலி தேவி, எம்.என்.ராஜம், ஜி.சகுந்தலா, எம்.சரோஜா, பி.எஸ்.வீரப்பா, நம்பியார், காக்கா ராதாகிருஷ்ணன¢ நடித்தனர். வெற்றிப் படம். தெலுங்கிலும் டப் ஆனது.

பி.என்.ரெட்டி தயாரித்து, இயக்கியது ‘ராஜமகுடம்’. என்.டி.ஆர்., ராஜசுலோச்சனா நடித்த இரு மொழிப் படம். டி.ஆர்.மகாலிங்கம், இ.வி.சரோஜா நடித்தது ‘ரத்தினபுரி இளவரசி’. ராமண்ணா இயக்கியிருந்தார். தேவரின் குறுகிய கால தயாரிப்பு ‘யானைப்பாகன்’. கன்னட நடிகர் உதயகுமார் ஹீரோ. சரோஜா தேவி, வீரப்பா, சுப்பைய்யா, மனோரமா நடித்தனர்.

ஏ.கே.வேலனின் ‘பொன்னி திருநாள்’ படத்தில் வளையாபதி, முத்து கிருஷ்ணன், ராஜசுலோச்சனா நடித்தனர். இயக்குனர் ஆர்.சுப்ரமணியம் தயாரித்த படம் ‘பெற்றவள் கண்ட பெரு வாழ்வு’. மைனாவதி நடித்திருந்தார். ஆந்திராவை சேர்ந்த சாரதி ஸ்டுடியோ தயாரித்த படம் ‘புதிய பாதை’. தமிழ், தெலுங்கில் உருவானது. ஜெமினி கணேசன், சாவித்திரி நடித்திருந்தனர். அதே போல் சம்பு பிலிம்ஸ் சார்பில் ஆந்திராவை சேர்ந்த தயாரிப்பாளர் தயாரித்தது ‘பாட்டாளியின் வெற்றி’.

 இரு மொழி படம். நாகேஸ்வரராவ், சாவித்திரி நடித்தனர். தயாரிப்பாளர் வாசுதேவ மேனன் எடுத்த படம் ‘கைராசி’. ஜெமினி, சரோஜா தேவி நடித்தனர். ஜெமினி, சாவித்திரி ஜோடிதான் அப்போது பிரபலம். அதை மாற்றி சரோஜா தேவியை ஜெமினிக்கு ஜோடியாக்கினார்கள். ஜெமினியுடன் யார் ஜோடி சேர்ந்தாலும் அவர்களுக்கு கெமஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகும். இதிலும் அப்படித்தான். ஜெமினி, சரோஜா தேவி ஜோடி பேசப்பட்டது. இப்படி யாருடன் நடித்தாலும் ஜொலித்ததால்தான் ஜெமினியை காதல் மன்னன¢ என்கிறோம்.

எம்.கே.ராதா, பி.எஸ்.சரோஜா நடித்த படம் ‘ரேவதி’. இந்த படத்தைப் பற்றி ஒரு ருசிகரமான தகவல் இருக்கிறது. 1958ல் ‘சந்திப்பு’ என்ற பெயரில் ஆரம்பமான இப்படம், ‘தியாக உள்ளம்’ என்ற பெயரில் சென்சார் போர்டில் தணிக்கையானது. பின் அதே ‘தியாக உள்ளம்’ பெயரில் மலேசியாவில் மட்டும் ரிலீசானது. சென்னையில் ரிலீஸ் செய்வதில் தயாரிப்பாளருக்கு ஏதோ பிரச்னை. பின் ‘தியாக இதயம்’ பெயரில் இதை மறு தணிக்கை செய்தனர். பின் கடைசியாக இப்படத்துக்கு ‘ரேவதி’ என பெயரிட்டு தணிக்கை செய்தனர். இத்தனை முறை தலைப்பை மாற்றியும் எந்த தலைப்பிலும் இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. பழைய ஹீரோ எம்.கே.ராதா நடித்ததாலும் பல முறை தலைப்பை மாற்றியதாலும் சென்டிமென்ட்டாக இப்படத்தை வாங்க
வினியோகஸ்தர்கள் முன்வரவில்லை. பல தடைகளால் இப்படம் வெளிவராமலே போனது.

ஏவிஎம் தயாரித்த ‘திலகம்’ படத்தில் பிரேம் நசீர், ஸ்ரீரஞ்சனி நடித்தனர். இப்படி 1960ல் பல படங்கள் ரிலீசாயின. அந்த படங்களில் பல வெற்றிப் படங்கள் என்பது குறிப்ப¤டத்தக்கது. அதனால் அந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு செழிப்பான ஆண்டாக அமைந்தது.




C.L.ஆனந்தன் – வயது-55. விஜயபுரி வீரன், தந்தை, வீரத்திருமகன், கொங்கு நாட்டுத்தங்கம், தனிப்பிறவி, நீரும் நெருப்பும், யானை வளர்த்த வானம்பாடி மகன், செந்தூரப்பூவே, தாயின் மேல் ஆணை, பொண்ணு மாப்பிள்ளை உள்ளிட்ட 60 படங்களில் நடித்துள்ளார். இவற்றில் 25 படங்களில் கதாநாயகனாகவும் மற்ற படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். தமிழ் தவிர சில மலையாளப் படங்களிலும் ஆனந்தன் நடித்துள்ளார். இவரது மகள் டிஸ்கோ சாந்தி தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் டான்சராக கொடிகட்டிப் பறந்தவர். இப்போது தெலுங்கில் திரைப்படங்களுக்கு ஃபைனான்சியராகவுள்ளார். இவரது மனைவி பெயர் லட்சுமி. இத்தம்பதிகளுக்கு மோகன், அருண், மாஸ்டர் ஜெயராம் என்ற 3 மகன்களும் விஜி, டிஸ்கோ சாந்தி, லலிதாகுமாரி (பிரகாஷ் ராஜின் முன்னாள் மனைவி) மற்றும் அம்மு என்ற 4 மகள்களும் உள்ளனர்.மஞ்சள் காமாலை நோயினால் அவதிப்பட்டவர் 26.3.1989 அன்று தனது 55 ஆவது வயதில் மரணமடைந்தார்.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

செங்கமலத்தீவு [1962], அத்தை மகள் [1966], நினைவில் நின்றவள் [1967], மூன்றெழுத்து [1968], மனசாட்சி [1969], காடு (மலையாளம்) [1973], தனிக்காட்டு ராஜா [1983], கோடுகள் இல்லாத கோலம் [1983], துள்ளி ஓடும் புள்ளிமான் [1971]

நன்றி:- தினகரன் 27.3.1989

No comments:

Post a Comment