Posts

Showing posts with the label International Coffee Day

#InternationalCoffeeDay

Image
  கும்பகோணம் டிகிரி காபில டிகிரினா என்ன தெரியுமா? `கம கம' வரலாறு! #InternationalCoffeeDay கும்பகோணம் என்றால் கோயில்களையும் தாண்டி பலருக்கும் நினைவுக்கு வருவது டிகிரி காபி. அதென்ன டிகிரி காபி? காபியின் வரலாறோடு, டிகிரி காபியின் கதையையும் தெரிஞ்சுக்கலாம் வாங்க..! நம்மில் பலருக்கும் பிடித்த பானம் காபி. `காபி’ என்ற வார்த்தையைக் கேட்டாலே அதைப் பருகும் முன்பே பலருக்கும் உற்சாகம் வந்துவிடும். காபிக்கு நீண்ட வரலாற்றுப் பின்னணியும் பரிணாம வளார்ச்சியும் அரசியலும் உள்ளன. காபி முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதே ஒரு சுவாரஸ்யமான கதை. வருடம்தோறும் அக்டோபர் 1-ம் தேதியை சர்வதேச காபி தினமாகக் கொண்டாடும் நிலையில் அதன் கம கம வரலாற்றையும் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா? 14-ம் நூற்றாண்டின் மத்தியில், ஆப்பிரிக்காவிலுள்ள எத்தியோப்பியா நாட்டில் ஆடுமேய்த்து வந்த கல்டி என்ற மனிதர் தன்னுடைய ஆடுகள் ஒருவகையான பழத்தைத் தின்ற பின் இரவு முழுவதும் தூங்காமல் புத்துணர்வுடன் இருப்பதைக் கவனித்தார். அதுதான் காபிக் கொட்டையாக இருக்கலாம் என்றும் அங்கிருந்துதான் காபியின் கதை தொடங்குகிறது என்றும் நம்பப்படுகிறது. முதலில் காபிக் கொட...