Posts

Showing posts with the label ANNA`S

KALAIGNAR SAD SONG ON ANNADURAI`S DEATH

Image
KALAIGNAR  SAD SONG ON ANNADURAI`S DEATH கலைஞர் கருணாநிதியின் தொண்ணூற்று நான்காவது வயதினைக் கொண்டாடுகின்றார்கள். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, அறிஞர் அண்ணா இவர்களைப் போன்றவர்களின் வரலாற்று பன்முகப்பட்டது. அரசியல், கலை, இலக்கியம் எனப்பன்முகமானது. எனவே இவர்களது சமுதாயப்பங்களிப்பு பற்றிய விமர்சனங்களைத் தனியே அரசியலுடன் மட்டும் நிறுத்திவிட முடியாது. அந்த வகையில்தான் நான் கலைஞரின் வரலாற்றை அணுகுகின்றேன். அவரது தமிழ்த்திரைப்படத்துறையில் அவரது பங்களிப்பை மறக்க முடியாது. ஒரு காலத்தில் தமிழ்த்திரையுலகைப் பாடல்கள் ஆட்டிப்படைத்தன. எம்.கே.தியாகராஜா பாகவதர், பி.யு.சின்னப்பா என்று தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் கோலோச்சிய காலகட்டம் அது. பின்னர் தமிழ்த்திரையுலகை வசனங்கள் ஆட்டிப்படைத்தன. இளங்கோவனின் கண்ணகி அதற்கு நல்லதோர் உதாரணம். அதன் பின்னர் தமிழ்த்திரையுலகைக் கலைஞரின் வசனங்கள் ஆட்டிப்படைத்தன. 'பராசக்தி' நல்லதோர் உதாரணம். சமுதாயச்சீர்திருத்தக் கருத்துகளைத்தமிழ்த்திரையுலகில் விதைத்தவைத் திமுகவினரின் திரைப்படங்கள். அந்த வகையிலும் சமுதாய அநீதிகளைத் தட்டிகேட்ட 'பராசக்தி...