Posts

Showing posts with the label N.S.KRISHNAN

N.S.KRISHNAN ,COMEDY ACTOR BORN 1908 NOVEMBER 29 - 1957 AUGUST 30

N.S.KRISHNAN  ,COMEDY ACTOR BORN  1908 NOVEMBER 29 - 1957 AUGUST 30 தமிழ் திரைப்படத்துறையில் ‘கலைவாணர்’ என அழைக்கப்பட்ட என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், இறப்பு: ஆகஸ்ட் 30, 1957 தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர். “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு” என்ற பாடல் ஒன்றே என். எஸ். கலைவாணரின் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். தமிழ் சுனிமா உலகில் நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன். தமிழில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராக விளங்கிய இவர், உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளின் போல, சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர். ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு இந்திய சினிமா வரலாற்றிலேயே நகைச்சுவையில் அறிவுபூர்வமான பல கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்...

N.S.KRISHNAN ,MAN OF PHILANTHROPHY

Image
N.S.KRISHNAN ,MAN OF PHILANTHROPHY 1941 -ம் ஆண்டு கோவை வருமான வரி அலுவலகம். அதிகாரிக்கு முன் என்.எஸ்.கிருஷ்ணனின் ‘அசோகா பிலிம்ஸ்’ கணக்கு நோட்டுகள் இருந்தன. வருமான வரி அதிகாரி, ‘‘என்னய்யா... எல்லா பக்கத்திலும் ‘தர்மம்... தர்மம்’ என்று எழுதியிருக்கிறது. இதெல்லாம் உண்மையா. என்ன ஆதாரம்..?’’ என்று கேட்கிறார். சில நிமிடங்களுக்குப் பிறகு, அதிகாரி அனுமந்தராவ் எந்த பந்தாவும் இல்லாமல் படக் கம்பெனிக்குப் போய் என்எஸ்கே முன் நிற்கிறார். ‘‘யார்... என்ன?’’ ‘‘ஐயா, என் மகள் கல்யாணம் ஆயிரம் ரூபாய் வரதட்சணை பாக்கிக்காக நிற்கிறது...’’ என்றார் அதிகாரி. ‘‘அடடா, ஒரு பெண்ணின் வாழ்க்கை ஆயிரத்திலேயே நிற்கிறது. என் படக் கம்பெனி கணக்காளர், வருமானவரி அதிகாரியைப் பார்க்கப் போயிருக்கிறார். அவர் வரட்டும். வாங்கித் தருகிறேன். கவலை வேண்டாம். போகும்போது என் காரிலேயே உங்களை ஏற்றி அனுப்பி வைக்கிறேன். பணத்தோடுதான்..!’’ நிலைபெற்ற ஆளுமை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எனும் ஆளுமை நிலைபெற்றது, ஒற்றைத் திரியில்தான். அத்திரி, மனிதர்களின் முகத்தில் மகிழ்ச்சியை மட்டும் தேடியது. தன் நடிப்பு, பேச்சு மனிதர்...

TEN REAL HUSBAND-WIFE OF TAMIL FILM INDUSTRY

Image
தமிழ் சினிமாவின் சூப்பர்10 காதல்ஜோடிகள் திரையில் என்னதான் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் பயாலஜியோடு நடித்தாலும் காதல் சில ஜோடிகளுக்கு இடையில் மட்டுமே தன் மாய வித்தையை காட்டி இருக்கிறது. பிரகாஷ்ராஜ் பாஷையில் சொன்னால், சிலரை பார்த்தவுடன் மட்டும் மனசுக்குள் பலப் எரிந்து காதுக்குள் மணி ஒலித்து வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறக்கத் தொடங்குகிறது. அது சரி, ஆனால் காதல் வந்த எல்லாரும் மணம் முடிப்பது இல்லையே..மணம் முடித்த அனைவரும் சேர்ந்து வாழ்வதும் இல்லை. திரையில் ஆயிரம் ஜோடிகள் டிஜிட்டல் வண்ணங்களில் ட்யூலிப் தோட்டத்துக்கு நடுவில் அஸ்கு லஸ்கா பாடினாலும் ஒன்றாக வாழும் வாழ்க்கை சில ஜோடிகளுக்கு மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் ஆரம்பகட்ட கிசு கிசுக்களை தாண்டி, போராட்டம், குழப்பம் எல்லாவற்றையும் கடந்து  நிஜத்திலும் ஒன்று சேர்ந்த சூப்பர் ஜோடிகளின் பட்டியல் இது. 10 ) ஜெமினி கணேசன்- சாவித்திரி ஆடாத மனமும் ஆடுதே... இது மிஸ்ஸியம்மா காலத்து காதல். கறுப்பு வெள்ளையில் நடந்த ரொமான்ஸ்  காவியம்.  'கண்களின் வார்த்தைகள் புரியாதோ?' என்று பை...