Posts

Showing posts with the label FEBRUARY 8

K.S.RAJA ,PRESENTER BORN 1942 FEBRUARY 8 - 1994 SEPTEMBER 3

Image
  K.S.RAJA ,PRESENTER BORN  1942 FEBRUARY 8 - 1994 SEPTEMBER 3 பிறப்பு பெப்ரவரி 8 ,  1942 பதுளை ,  இலங்கை இறப்பு 3 செப்டம்பர் 1994 (அகவை 52) கொழும்பு 1983 இலங்கை, ஜூலை கலவரம்….. இந்தியா வந்த K.S.ராஜா, அப்போது இங்கு இயங்கி வந்த ஈழ இயக்கங்களுள் ஒன்றான ‘ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி’யில் இணைந்து செயற்பட்டார். 1987 ஆம் ஆண்டில் ‘இலங்கை – இந்திய ஒப்பந்த’த்தைத் தொடர்ந்து இலங்கை திரும்பிய இவர் இலங்கை வானொலியில் தமது வழக்கமான பணிகளுக்கு திரும்பினார்! இந்நிலையில், 1989ஆம் ஆண்டு கொழும்பில் இவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது உடல் கொழும்பு கடற்கரையில் இதே செப்டம்பர் 3ல் கண்டெடுக்கப்பட்டது. இவரது ‘நினைவு சமாதி’ கொழும்பு பொரல்லை மயானத்தில் உள்ளது. சாகும் வரை அறிவிப்பாளராகவே இருக்க விரும்புகிறேன்..! ஏற்பாடு செய்தவர்களே எதிர் பார்க்கவில்லை. மதுரை காந்தி மியூஸிய திறந்தவெளி அரங்கு திணறியது. எங்கெங்கும் ஆரவாரத் துடன் ரசிகர்கள் கூட்டம். இலங்கை வானொலியின் அலை வரிசைகளில் ஆதிக்கம் செய்த அபிமான அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவின் குரலைச் சமீபகாலமாகக் கேட்க...

GAUTHAMA BUDDHA DIED FEBRUARY 8, 483 B.C

Image
  GAUTHAMA BUDDHA DIED FEBRUARY 8, 483 B.C பௌத்த சமயத்தில் பரிநிர்வாணம் (parinirvana) என்ற சொல் முதலில் பயன்படுத்தப்பட்டது. பொதுவாக பரிநிர்வாணம் என்ற சொல் உடல் இறப்பிற்கு பின்னர் பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு பிறவா நிலையை அடைவதே ஆகும்.[1][2] காந்தார நாட்டுச் சிற்பம்கௌதம  புத்தரின்  மகாபரிநிர்வாணத்தை  விளக்கும் காந்தார நாட்டுச் சிற்பம்,  காலம் 2-3-ஆம் நூற்றாண்டு புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாளை கிழக்கு ஆசிய நாடுகளில் மகாயான பௌத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.[3] புத்தர் மகாபரிநிர்வாணம் அடையும் நிகழ்வை விளக்கும்  சிற்பம், விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகம் புத்தரின் மகாபரிநிர்வாணக் காட்சி கௌதம புத்தர் குசிநகரில் தமது 80வது அகவையில் படுத்த கோலத்தில் மகாபரிநிர்வாணம் அடைந்தார். அப்பரிநிர்வாணக் காட்சி குசிநகரில் சிற்பமாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

PETER THEGREAT - 1672 JUNE 9 -1725 FEBRUARY 8

Image
PETER THEGREAT -  1672 JUNE 9 -1725 FEBRUARY 8 மகா பீட்டரும் நவீன ரஷ்யாவும் . மகா பீட்டர் ரஷ்யாவின் கதை  /அத்தியாயம் 5 1613ம் ஆண்டு 16 வயது மைக்கேல் ஃபெடரோவிச் ரோமனோவ் ரஷ்யாவின் ஆட்சியாளரானார். போலந்தும் ஸ்வீடனும் மாஸ்கோவை அபகரித்துக்கொள்ள முயன்றுகொண்டிருந்த சமயம் அது. மைக்கேலின் அப்பாவே போலந்தின் பிடியில் ஒரு கைதியாகத்தான் இருந்தார். பிறகு பேச்சுவார்த்தைகள் எல்லாம் நடத்தி, போலந்து கைதிகளை விடுவித்து அதற்கு ஈடாக மைக்கேலின் அப்பா ஃபிலாரெட்டை விடுவிக்கவேண்டியிருந்தது. அதற்குப் பிறகு மைக்கேல் பவ்யமாக விலகிக்கொள்ள, ஃபிலாரெட் ரஷ்யாவின் ஜார் மன்னரானார். போலந்து, ஸ்வீடன் இரு நாடுகளுடனும் சமசர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, ஸ்மோலென்ஸ்க் பகுதியை போலந்துக்கு விட்டுக்கொடுப்பதில் ரஷ்யாவுக்கு மிகுந்த மனவருத்தம்தான். ஆனால் கொந்தளித்துக்கொண்டிருந்த ரஷ்யாவைக் கட்டுக்குள் கொண்டுவரவேண்டுமென்றால் போர் தவிர்க்கப்பட்டாகவேண்டும் என்னும் யதார்த்தத்தை ரஷ்யா ஏற்றுக்கொள்ளவேண்டியிருந்தது. மேற்கத்திய நாடுகளுடனான உறவை ரஷ்யா வளர்த்துக்கொண்டிருந்தது. இங்கிலாந்தின் முதலாம் ஜேம்...