BRITISH ABSORBED INDIAN WEALTH AND FLEW AWAY
BRITISH ABSORBED INDIAN WEALTH AND FLEW AWAY சார் , பிரிட்டீஷ் அரசு வரவில்லை என்றால் நீங்கலாம் படிச்சுருக்க முடியாது. ரயில், மருத்துவம், கல்வி கிடைத்திருக்க அவன் தான் காரணம்? இப்படி பொதுவாக கிருஷ்தவ மதம் மாற்றும் பாதிரியார்கள் , பெரியார்(ஈவேரா) பகுத்தறிவு கூட்டங்கள் பேசுவதில் நியாயம் இருக்கிறதா? இதைபற்றி உங்கள் விளக்கம் மாரிதாஸ்? {கேள்வி: கார்த்திக்} - 1912ல் பிரிட்டீஷ் பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் வெளியிடப்படுகிறது. அது என்னவென்றால் இந்திய நிறுவனங்கள் எதுவும் ரயில் இஞ்சின் சார்ந்த எந்த உற்பத்தியும் செய்ய கூடாது, முழுமையாக தடை செய்கிறோம். எதற்கு இந்திய நிறுவனங்கள் தயாரிக்க கூடாது? 1843ல் ரயில் பிரிட்டீஷ் ரயில் இந்தியாவில் அனுமதித்த போது என்ன காரணம் என்று அவர்களே வெளியிட்டு உள்ளனர். அந்த விவகாரத்தை பின்னர் விளக்குகிறேன். பின்னர் மெல்ல 1860களில் ரயில் இந்தியாவில் முழுமையாக ஓட தொடங்கின. இந்த நேரம் அந்த ரயில் இஞ்சீன் பழுதுபார்க்கும் வேலை சில நேரம் இந்தியர்களிடம் கொடுக்கபட்டது. நன்கு புரிந்து கொள்ளுங்கள் 1900களை தாண்டியும் கூட 90% ரயில் ஊழியர்கள் இந்தியர்கள் தான். ...