Posts

Showing posts with the label Osman I

OTTOMAN DYNASTY 1299 - 1923

Image
OTTOMAN DYNASTY 1299 - 1923 உலக வரலாற்றில் இடைக்கட்டத்தில் உதுமானிய பேரரசு மிகப்பெரும் வல்லரசாக திகழ்ந்தது. வரலாற்றில் அவ்வாறான வல்லரசாக திகழ்ந்தவை மூன்று. ஒன்று துருக்கிய உதுமானிய பேரரசு, இரண்டாவது முகலாய பேரரசு, மூன்றாவது ஈரானின் சபாவித் வம்சம் .மத்திய கிழக்கு பிராந்தியத்தின் மிகப்பெரும் சமூக, கலாசார மற்றும் அரசியல் மாற்றங்கள் அவர்களின் காலகட்டத்தில் தான் நடந்தேறியது. உலகின் பேரரசின் வரலாற்றிலே மிக அதிக காலமாக சுமார் 600 ஆண்டுகள் ஆட்சி புரிந்த உதுமானிய பேரரசின் வரலாறு மிக நீண்டது. நீண்ட எல்லையை, நீண்ட காலத்தை உட்கொண்ட வரலாறு அதற்குண்டு. அதாவது உலகின் மிகப்பெரும் பகுதிகளை, இருகண்டங்களை உதுமானிய பேரரசு ஆண்டது.  ரோம் முதல் ஹங்கேரி வரை, போலந்து முதல் எமன், யரித்திரியா வரை, அல்ஜீரியா முதல் அசர்பைஜான் வரை , அதாவது தென்கிழக்கு ஐரோப்பாவின் பெரும் பகுதி, மேற்கு ஆசியா முதல் வட ஆப்ரிக்கா வரை இதன் எல்லைகள் நீண்டிருந்தன. இதில் 29 மாகாணங்கள் மற்றும் ஏராளமான வரி செலுத்தும் சிற்றரசுகள் அடங்கியிருந்தன. இவற்றுள் பல பிந்தைய கட்டத்தில் பேரரசின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட...