MAMTA BANERJEE , CHIEF MINISTER OF WEST BENGAL BORN 1955 JANUARY 5
MAMTA BANERJEE , CHIEF MINISTER OF WEST BENGAL BORN 1955 JANUARY 5 மம்தா பானர்ஜி (வங்காள: মমতা বন্দ্যোপাধ্যায়) (பிறப்பு 5 சனவரி 1955) இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தின் தற்போதைய முதலமைச்சரும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு என்ற அரசியல் கட்சியின் நிறுவனரும் முதன்மை நிர்வாகியும் ஆவார். இவர் தீதி (வங்காளத்தில் அக்கா என பொருள்படும்) என்று மக்களால் விளிக்கப்படுகிறார். விவசாயிகள் மற்றும் தொழிலாளிகளின் நலன் கருதி சி.பொ.மண்டலத்திற்கும் மேற்கு வங்கத்தின் தொழில்முனைப்படுத்தலுக்குமான இவரது எதிர்ப்பு நன்கு அறியப்பட்டது. துவக்க வாழ்க்கையும் கல்வியும்[மூலத்தைத் தொகு] கொல்கத்தாவின் அஸ்ரா பகுதியில் பிறந்தவர் மம்தா. பசந்தி தேவி கல்லூரி, கொல்கத்தாவில் பட்டம் பெற்று ஜோகேஷ் சந்திர சௌதுரி சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். அரசியல் வாழ்வு[மூலத்தைத் தொகு] அவர் தமது அரசியல் வாழ்வை காங்கிரசு(இ) கட்சியில் 1970களில் துவங்கினார். உள்ளூர் காங்கிரசில் படிப்படியாக முன்னேறி 1976 முதல் 1980 வரை மேற்கு வங்க மகளிர் காங்கிரசின் பொது செயலாளராக விளங்கினார்[1].1984ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்...