EELAKESARI NEWSPAPER FOUNDER N.PONNAIYA DIED 1951 MARCH 30
EELAKESARI NEWSPAPER FOUNDER N.PONNAIYA DIED 1951 MARCH 30 நா. பொன்னையா (சூன் 22, 1892 - மார்ச் 30, 1951) ஈழத்துப் பத்திரிகையாளரும், பதிப்பாளரும், சமூக சேவையாளரும் ஆவார். ஈழகேசரி பத்திரிகையை ஆரம்பித்து அதன் ஆசிரியராகவும் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு நா. பொன்னையா யாழ்ப்பாணம், குரும்பசிட்டியில் ப. நாகமுத்தர், தெய்வானைப்பிள்ளை ஆகியோருக்கு நான்காவது, கடைசி மகவாகப் பிறந்தார்.[1] இவரது குடும்பம் வேளாண்மையை வாழ்க்கையாகக் கொண்டது. தந்தைவழிப் பாட்டனார் பரமநாதர் திண்ணைப்பள்ளிக்கூடத்துச் சட்டம்பியார்.[2] பொன்னையா அவரது ஊரில் உள்ள மேரி பள்ளிக்கூடம் என்ற அமெரிக்க மிசன் பாடசாலையில் நான்காம் வகுப்பு வரை கல்வி கற்றார். பின்னர் மகாதேவ வித்தியாசாலையில் ஐந்தாம் வகுப்பு வரை கற்று[2] பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு வேளாண்மைத் தொழிலில் இறங்கினார்.[1] அச்சுத் தொழில் பொன்னையா வேளாண்மையில் அதிக ஆர்வம் காட்டாது, பத்திரிகை படிப்பதில் ஆர்வம் கொண்டு அச்சுத் தொழில் கற்க விரும்பினார். அக்காலத்தில் சுதேச நாட்டியம் எனும் பத்திரிகையை நடத்தி வந்த ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் அச்சுக்கூடத்தில...