CHINA - NEPAL RAIL ROAD DANGER SIGNAL TO INDIA
CHINA - NEPAL RAIL ROAD DANGER SIGNAL TO INDIA சீனா-நேபாளம் ரயில்பாதை : இந்தியாவிற்கு அபாய எச்சரிக்கை பீஜிங்: எவரெஸ்ட் சிகரத்தின் கீழ் சுரங்கப்பாதை மூலம் சீனா-நேபாளம் இடையே புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டம் முனைப்புடன் செயல்படுத்த உள்ளது. இத்திட்டம் இந்தியாவிற்கு விடுக்கப்படும் எச்சரிக்கை மணியாக அமைய உள்ளதாக கூறப்படுகிறது. சீன அரசு தற்போது தன்னுடைய மாகாணத்தை சேர்ந்த குயின்காய் பகுதியில் இருந்து திபெத் வரையில் ரயில்பாதையை அமைத்துள்ளது. தற்போது வரும் 2020-ம் ஆண்டிற்குள் திபெத் வழியாக நேபாள நாட்டின் எல்லைப்பகுதி வரையில் எவரெஸ்ட் மலைப்பகுதியில் சுரங்கபாதை அமைத்து ரயில்பாதை அமைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நேபாளம் -சீனா இடையேயான வர்த்தகம் , சுற்றுலா மேம்பாடு அடையும் என சீனா அரசு தெரிவி்த்துள்ளது. இது குறித்து சீன ரயில்வே துறையை சேர்ந்த சீன அகடமி ஆப் இஞ்ஜினியரிங் தலைவர் வாங் மெங்சூ கூறுகையில் திட்டம் நிறைவேற்றப்படும் வரையில் தொழிலாளர்கள் , தொழில் நுட்ப வல்லுநர்கள் பல்வேறு சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என தெரிவித்தார். ஏற்கனவே குயிங்காய் திபெத் தலை...