Posts

Showing posts with the label NALA VENBAA

NALA VENBAA நளவெண்பா

Image
  NALA VENBAA  நளவெண்பா எட்டாம் அல்லது ஒன்பதாம் வகுப்பில் நளவெண்பாவில் சில செய்யுள்கள் படித்ததாக நினைவு. நளன் தனது மனைவி தமயந்தியை விட்டுப் பிரிந்து விடுவான். நளனின் சமையலை வைத்து தமயந்தி கண்டுபிடித்து மீண்டும் சேர்ந்து விடுவார்கள். கதையில் வேறொன்றும் நினைவில் தங்கவில்லை. சண்டியர் விருமாண்டி பெயர்ப் பிரச்சனைகளுக்கு இடையில் ஒரு திரைப்படத்திற்கு நளதமயந்தி என்று ஏன் பெயரிட்டார்கள் என்று தெரிந்து கொள்ள, நண்பர்களிடம் நளராசன் கதை கேட்டால், எவருக்கும் நினைவில் இல்லை. ‘பெல்ட்டால அடிக்கிற சம்சாரத்துக்குப் பேரு நளாயினியா? செருப்பால அடிச்சா தமயந்தின்னு பேரு வெப்பியா?’ என்று எஸ்.வி.சேகர் நாடக வசனத்தைக் கேட்கும் போதெல்லாம், நளதமயந்தி கதை தெரியாதது நினைவுக்கு வரும். புத்தகமாகவே வாங்கிவிட்டேன். மாதவிலக்கு காலத்தில் ஓராடையில் இருந்த‌ ஒரு பெண் அவையோர் நடுவில் துகிலுறியப்படுவதையும், கதாநாயகன் மாதிரி ஒரு கடவுள் வந்து தன்னைக் காப்பாற்றுவார் என்று ஆத்திகத்தை மறைமுகமாகத் திணித்து பெண்ணைப் பலவீனமாகச் சித்தரிப்பதையும், கணவர்களால் அவள் பங்கிடப்படும் ஆணாதிக்கத்தையும், அவள் சினங்கொண்டு சபதஞ் செய்தது போல...