POOLI DEVAR ,BIOGRAPHY, 1-9-1715 –16 October 1767
POOLI DEVAR BIOGRAPHY 1-9-1715 – 16 October 1767 பூலித்தேவன் வரலாறு - poolithevar முதன் முதலில் விடுதலைக்கு குரல் கொடுத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மனோ அல்ல! ஜான்சிராணி லக்குமிபாயோ அல்ல!! சிப்பாய் கலகமும் அல்ல!!! தென்னகத்து பூலித்தேவன் தான். ஏனோ வராலாறுகள் தமிழர்களை மூடிட்டு வைத்து மறைக்கின்றன. இவரை மட்டும் அல்ல முக்குலத்தோரையே அப்படித்தான் செய்கிறது. மாவீரன் பூலித்தேவன் ஒரு மாபெரும் புரட்சித் தலைவன். தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலிச் சீமையில் தோன்றி தன்னிகரற்றுத் தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழ் மறவன்! நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்ட செங்கோலொச்சிய பாளையக்காரனாவான். தன்பாளையத்திற்கு மட்டுமின்று மேற்குப் பாளையத்தார்களுக்கெல்லாம் தலைமையேற்று மாற்றாரை நடு நடுங்கச்செய்த மாபெரும் போர்வீரன். இந்திய விடுதலைக்காக வெள்ளையரை எதிர்த்து முதன் முதலில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முதல் முழக்கமிட்ட விடுதலைப் போராளி பூலித்தேவனேயாவான். இவனுடைய வீர வராலாறு இந்திய விடுதலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அரை நூற்றாண்டுக்கு மேலாக தென்னகத...