M.V.RAJAMMA ,KANNADA ACTRESS BORN MARCH 10,1921- - 1999 APRIL 23
M.V.RAJAMMA ,KANNADA ACTRESS BORN MARCH 10,1921- 1999 APRIL 23 எம். வி. ராஜம்மா (M. V. Rajamma, கன்னடம்: ಎಂ. ವಿ. ರಾಜಮ್ಮ; 10 மார்ச் 1921 – 23 ஏப்ரல் 1999)[1] பழம்பெரும் தமிழ், கன்னடத் திரைப்பட நடிகையாவார். கன்னட நாடகம், திரைத்துறையில் பங்காற்றிய ராஜம்மாவுக்கு யயாதி முதல் தமிழ்த் திரைப்படமாகும். இரண்டாவது தமிழ்த் திரைப்படமாக உத்தம புத்திரனில் பி. யு. சின்னப்பாவுடன் கதை நாயகியாக நடித்தார். பின்னாளில் அன்னை வேடங்களில் நடித்த இவர், ஏறத்தாழ 50 ஆண்டுகள் காலத்திற்கு திரையுலகில் பங்காற்றினார்.[2] வாழ்க்கைக் குறிப்பு கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் ராஜம்மா. பெற்றோருக்கு ஒரே பிள்ளை. மூன்று மாதக் குழந்தையாக இருக்கும் போதே பங்களூரில் இவரது பெற்றோர்கள் குடியேறினர். பங்களூர் ஆரிய பாலகி வித்தியாலயத்தில் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்றார். வாய்ப்பாட்டும், ஆர்மோனியமும் இசைக்க முறைப்படி கற்றுக் கொண்டார்.[3] எட்டாம் வகுப்பு படிக்கும் போதே இவருக்குத் திருமணம் முடிந்தது. கணவர் நாடக நடிகர். திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் சம்சார நௌகா திரைப்படம் கன்னடத்தில் 1935 ஆம் ஆண்டி...