உலக தினங்கள் WORLD DAYS
உலக தினங்கள் WORLD DAYS ஒவ்வொரு நாட்டிலும் தினமும் ஏதாவது ஒரு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது அந்நாடு சார்ந்த முக்கிய தினமாக இருக்கலாம். ஆனால் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து சில தினங்களை உலகளவில் கொண்டாடுகின்றன. இவற்றில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அறிவித்த தினங்களே அதிகம். ஐ.நா. சபை, யுனெஸ்கோ, உலகச் சுகாதார அமைப்பு, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம், உணவு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் விவசாய அமைப்பு, உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு, ஐக்கிய நாடு சபையின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் சர்வதேச கடல்சார் அமைப்பு போன்றவை அறிவித்துள்ளன. இது தவிர அறிவியல் அமைப்புகளும், சில தினங்களை அறிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த அனைத்து தினங்களையும் அதன் 192 உறுப்பு நாடுகளும் கடைப்பிடிக்கின்றன. இத்தினங்கள் யாவும் பொழுதுபோக்கிற்காகக் கொண்டாடப்படுபவை அல்ல. உலகில் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்துடனே இத்தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தினங்கள் ஒவ்வொன்றும் உலகளவில் மாற்றத்தைக் கொண்டுவரவே கொண்டாடப்படுகின்றன. 1. ஜனவரி - 1 : ஆங்கிலப் புத்தாண்டு (New Year) ஜனவரி 1ஆம் நா...