HIROSIMA DESTRUCTION AFTER WORLD WAR II
HIROSIMA DESTRUCTION AFTER WORLD WAR II என்ன தவறுகள் செய்தோம்? எதற்காக இவ்வளவு பெரிய தண்டனை? வாழும் போதே நரகத்தை கண்டு விட்டோம். இந்த நாட்டில் பிறந்தவர்கள் மட்டுமன்றி இனி பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் தண்டனை எதற்கு? இனி ஒரும் போதும் மனிதர்களாய் பிறக்கவே கூடாது. இப்படித்தான் எண்ணியிருப்பான் அன்றைய நாளில் மரணத்தின் விளிம்பில் துடித்துக்கொண்டிருந்த ஒவ்வொரு ஜப்பானியரும். உலகையே அதிர வைத்த 2ஆம் உலகப்போரின் மிகப்பெரிய தாக்குதல் எதுவென்றால் கட்டாயம் 1945 ல் பதிவான ஹிரோசிமா நாகசாகி ஆகிய நகர்கள் மீது நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குல் என்றே அனைவரும் கூற வேண்டும். லிட்டில் போய் எனப்படும் அணுகுண்டு வீச்சினால் அன்றைய ஜப்பான் நாடே கதிகலங்கி நின்றது. ஆனால் அத்தகைய மிகப்பெறும் சக்தி வாய்ந்த அணுகுண்டு ஜப்பான் மீது தொடுக்கப்பட்டதற்கான காரணம் என்ன? உலகப்போரில் பங்குப்பற்றிய எத்தனையோ நாடுகளில் அமெரிக்காவுக்கு ஜப்பான் மீது மட்டும் தனிப்பட்ட கோபம் எதற்கு? அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு பிரயோகித்தமைக்கான காரணத்தை சற்றே மீட்டுப்பார்ப்போம்... கடந்த 1937ஆம் ஆண்டு ஜப்பான் சீனாவின் ம...