‘தமிழ் இலக்கியத்தின் புதினஅரசி’ வை.மு.கோதைநாயகி பள்ளி சென்று கல்வி கற்காதவர் பிறப்பு : 1901, டிசம்பர் . 1
‘ தமிழ் இலக்கியத்தின் புதினஅரசி’ வை.மு.கோதைநாயகி பள்ளி சென்று கல்வி கற்காதவர் பிறப்பு : 1901, டிசம்பர் . 1 வை.மு.கோதைநாயகி (பிறப்பு : 1901, டிச. 1 – நினைவு : 1960, பிப். 20) ஒரு தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியராக முதன்முதலில் பதவி வகித்தவர் என்ற பெருமை ஒன்றே போதும் இவர் என்றென்றும் பத்திரிகை வானில் ஜொலிப்பதற்கு. நாவலாசிரியை, எழுத்தாளர், பதிப்பாளர், பாடகி, இசையமைப்பாளர், சமூகப்போராளி, பேச்சாளர், சுதந்திரப் போராட்ட வீராங்கனை என, பன்முக ஆற்றலால் மிளிர்ந்து பெண்மைக்குப் பெருமை சேர்த்தவர் பெருமகளார் வை.மு.கோதைநாயகி . முதல் துப்பறியும் நாவலைத் தமிழுக்கு தந்தவர் என்பது இவருக்கு கூடுதல் சிறப்பம்சம். படிப்பறிவு பயிலாத கதைச் சொல்லி: பள்ளிக்கூடம் செல்லாத, பாடங்கள் படிக்காத பால்ய சிறுமியாக வளர்ந்தவள் கோதை. 5 வயதிலேயே 9 வயது சிறுவனுக்கு மனைவியான கோதை பிறந்தது, வைதீகக் குடும்பத்தில். வீட்டினில் எப்போதுமே ஒலித்...