Posts

Showing posts with the label CHENGUTTUVAN

CHENGUTTUVAN, LYRICS,WRITER,POLITICIAN BORN 1928, JANUARY 8

Image
CHENGUTTUVAN, LYRICS,WRITER,POLITICIAN BORN 1928, JANUARY 8 மா.செங்குட்டுவன் (சனவரி 8, 1928) ஒரு தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், இதழாளர், அரசியல் சமூகச் செயல்பாட்டாளர் எனப் பல தகுதிகள் கொண்டவர். ஏறக்குறைய 20 நூல்கள் எழுதியுள்ளார். கவிக்கொண்டல் என்னும் அடை மொழியால் அறியப்படும் ஓர் அறிஞர் ஆவார். மீண்டும் கவிக்கொண்டல் என்னும் இதழைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். பிறப்பும் வாழ்வும் திருவாரூருக்கு அண்மையில் திருக்காரவாசல் என்னும் சிற்றுரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். மாணவராக இருக்கும்போதே திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். திராவிட மாணவர் கழகச் செயலாளராகப் பணியாற்றினார். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் நடராசன். ஆயினும் தமிழ் உணர்வின் காரணமாகச் செங்குட்டுவன் என்று மாற்றிக் கொண்டார். பெரியார் ஈ வெ. இரா. அறிஞர் அண்ணாதுரை, கருணாநிதி, குத்தூசி குருசாமி, இரா. நெடுஞ்செழியன் போன்ற தலைவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புகளைப் பெற்றவர் எழுத்துப் பணி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் காலத்தில் அறிவுச்சுடர் என்னும் கையெழுத்து ஏட்டை நடத்தினார். திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்...