OVULATION ஒரு பெண்ணின் கருவளமிக்க நாட்களை கண்டறிவது எப்படி?
OVULATION ஒரு பெண்ணின் கருவளமிக்க நாட்களை கண்டறிவது எப்படி? ஒரு பெண்ணின் கருவளமிக்க நாட்களை கண்டறிவது எப்படி? வேகமாக கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள், ஓவுலேசன் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் விரைவில் கருத்தரிக்கலாம். இங்கு ஒரு பெண்ணின் கருவளமிக்க நாட்களை கண்டறிவது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது. நன்கு முதிர்ந்த கருமுட்டை அண்டகத்தில் இருந்து கருப்பையினுள் வெளித்தள்ளும் நிகழ்வு தான் அண்டவிடுப்பு அல்லது ஓவுலேசன் என்று அழைக்கப்படுகிறது. ஒரு பெண் கருத்தரிப்பதற்கு ஓவுலேசன் மிகவும் முக்கியமானது. ஓவுலேசன் காலத்தில் உடலுறுவில் ஈடுபடும் போது, பெண்ணின் உடலினுள் நுழையும் விந்தணு கருமுட்டையுடன் இணைந்து கருப்பையினுள் கருவாக உருவாகும். ஆகவே வேகமாக கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள், ஓவுலேசன் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் விரைவில் கருத்தரிக்கலாம். இருப்பினும் ஒரு பெண்ணின் ஓவுலேசன் காலத்தை எப்படி கண்டறிவது என நீங்கள் கேட்கலாம். அதைத் தெரிந்து கொள்ளவும், ஓவுலேசன் காலத்தின் போது வெளிப்படும் சில அறிகுறிகளையும் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். ...