RAPING ,CONTINUED, IN INDIA
RAPING CONTINUED IN INDIA .புதிய ஜனநாயகம் இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரைகள் கடந்த ஏப்ரல் -20 அன்று வினவு தளத்தில் வெளியிடப்படுவதற்காக அனுப்பி வைக்கப்பபட்ட நிலையில், அவை முன்னாள் பொறுப்பாசிரியரால் முடக்கி வைக்கப்பட்டிருந்தன. அக்கட்டுரைகளுல், ஹதராஸ் பாலியல் வன்கொலை, விஜய் சேதுபதியின் குழந்தைக்கு விடுக்கப்பட்ட பாலியல் வன்முறை மிரட்டல் போன்ற விவகாரங்களுக்கான அடிப்படை என்ன என்பதை அம்பலப்படுத்தும் இக்கட்டுரையை இங்கே வெளியிடுகிறோம். கடந்த மார்ச் 8 சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தன்று இந்தியாவின் 7 பெண் சாதனையாளர்களிடம் தனது டிவிட்டர் வலைத்தளக் கணக்கை ஒப்படைத்த மோடி, அதை நாட்டிலுள்ள பெண்களுக்காகச் சமர்ப்பிப்பதாக அறிவித்தார். தமிழக அரசும் தன் பங்குக்கு அந்நாளைப் ”பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக”க் கொண்டாடியது. இப்படி அனைத்தும் நல்ல விதமாகச் சென்றுகொண்டிருப்பதாகக் காட்டப்பட்ட சமயத்தில்தான் உசிலம்பட்டியில் நடந்திருந்த பெண் சிசுக்கொலைகள் அம்பலமாகி மோடி-எடப்பாடி இணையின் மலிவான விளம்பரங்களைச் சந்திசிரிக்க வைத்தன. உசிலம்பட்டி என்றாலே 1990-களில் அவ்வட்டாரத்தில் நடந்துவந்த பெண் சிசுக் கொலைகள் நம் ந...