Posts

Showing posts with the label TAMIL CINEMA

SASIKUMAR ,THE ACTOR NEVER FORGET IN TAMIL CINEMA

Image
  SASIKUMAR ,THE ACTOR NEVER  FORGET IN TAMIL CINEMA சசிகுமார் – தென்னிந்திய திரையுலகில் மறக்க இயலாத ஒரு சிறந்த நடிகர். இவரை திருமலை-தென்குமரி படத்தில் ஏ.பி.நாகராஜன் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து பணத்துக்காக, அவள், ரோஷக்காரி, வெள்ளிக்கிழமை விரதம், திருடி, தாய்க்கு ஒரு பிள்ளை, தெய்வாம்சம், ராஜபார்ட் ரங்கதுரை, சமர்ப்பணம், மனிதனும் தெய்வமாகலாம், காசேதான் கடவுளடா, வீட்டுக்கு ஒரு பிள்ளை போன்ற பல படங்களில் நடித்தவர். 8.12.1944- இல் கும்பகோணத்தில் பிறந்த இவர் இவ்வுலகில் வாழ்ந்தது மொத்தம் முப்பது ஆண்டுகள் மட்டுமே.சசிகுமார், இந்திய விமானப்படையில் பணியாற்றியவராதலால் கேப்டன் சசிகுமார் என்ற பெயரும் உண்டு. இவரது பெற்றோர் பெயர் ராதாகிருஷ்ணன் – சாவித்திரி. இவருக்கு குடும்பத்தினரால் சூட்டப்பட்ட பெயர் விஜய்குமார். இவரது தந்தை பெரியாரின் தீவிர ஆதரவாளர் ஆதலால் வெற்றி செல்வன் என்ற பெயரும் இடப்பட்டது. இந்திய ராணுவத்தில் பணியாற்றிய போதும் இவரது பெயர் வெற்றி செல்வன் மட்டுமே. திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய போது மாற்றி வைக்கப்பட்ட பெயர்தான் சசிகுமார். (இதே போல ‘நீலமலைத்திருடன்’ படத்தில் நடித்த ரஞ்...

K.T.RUKMANI ,FIRST BIKE RIDER ,FIRST SMOKER , FIRST DOUBLE BRAID IN TAMIL CINEMA

Image
  K.T.RUKMANI ,FIRST BIKE RIDER , FIRST SMOKER ,  FIRST DOUBLE BRAID   IN TAMIL CINEMA கே .டி .ருக்மணி  அன்றைய இளம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக, ‘பாரிஸ் பியூட்டி’ என்று வர்ணிக்கப்பட்டவர் கே .டி .ருக்மணி  பத்து வயதில் ருக்மணிக்குக் கலைப்பித்து ஆரம்பித்தது அம்மாவிடமிருந்து. தாயோடு விடாப்பிடியாக நாடகம் பார்க்கத் தவறாமல் சென்றார். மேடையில் ஆடப்பட்ட நாட்டியங்கள் ருக்மணியையும் அறியாமல் அவருக்குள் குதிபோட்டன. மறுநாள் அவற்றை அப்படியே ஆடிக் காண்பித்தார். வீடு வியப்பில் ஆழ்ந்தது. ஊமைப் படங்கள் உருவாகத் தொடங்கியிருந்த காலகட்டம். ருக்மணி சினிமா நடிகை ஆனார். அவரது முதல் மவுனச் சித்திரம் ‘பேயும் பெண்மணியும்’. டைரக்டர் ஆர். பிரகாசம் அவருக்கு வழங்கிய முதல் வெளிச்சம். அடுத்து இம்பீரியல் ஸ்டுடியோவின் ‘பாமா விஜயம்’. படம் வெளியான நான்காவது நாளில் ருக்மணிக்கு வெள்ளிக் குத்துவிளக்கு பரிசாகக் கிடைத்தது. ‘டெவில் அண்ட் தி டான்சர்’ என்கிற ஆங்கில சினிமாவிலும் ருக்மணி நடித்தார். ராஜா சாண்டோ இயக்கிய ‘விப்ரநாராயணா’, மற்றும் சி.வி. ராமனின் இயக்கத்தில் ‘விஷ்ணு லீலா’ ஆகிய மவுனச் சித்திரங்கள...

T.R.RAJAKUMARI ,A LEGEND OF TAMIL CINEMA

Image
T.R.RAJAKUMARI ,A LEGEND OF TAMIL CINEMA கனவுக்கன்னி பிம்பம் தொலைக்காத ராஜகுமாரி மயக்கும் கவர்ச்சிக் கண்களால் கிறக்கமுறும் வகையில் ஒரு கீழ்ப் பார்வையை எதிராளியின் மீது ஓட விட்டு, கவர்ச்சிகரமான ஒரு மென் சிரிப்பை அழகுப் பல்வரிசை வெளிப்படச் சிரித்து, நிலம் நோகாமல் அன்ன நடை நடந்து, இனிமையான குரலில் ‘நாதா’ என்றோ ‘சுவாமி’ அல்லது ‘பிரபோ’ என்றோ அவர் கதாநாயகனையோ அல்லது தான் விரும்பும் காதலனையோ அழைக்கையில் ஒட்டுமொத்தத் தமிழக ரசிகர்களும் ராஜகுமாரியின் அழகில் கட்டுண்டு கிடந்தார்கள். தமிழ் சினிமா எத்தனையோ கனவுக் கன்னிகளைப் பிரசவித்திருந்தாலும் முதல் கனவுக் கன்னியாகக் கண்டறியப்பட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்தவர். 1930களின் இறுதியில் கதாநாயகி யாக அறிமுகமாகி இருந்தாலும், 50களிலும் கனவுக்கன்னியாகவும் ரசிகர்களின் மனம் ஏற்றுக் கொண்ட ‘டார்லிங்’ ஆகவும் வலம் வந்தவர். 50களில் ஏறக்குறைய பிரதான நாயகி வாய்ப்புகள் குறைந்து, வில்லி, குணச்சித்திர வேடங்களை அவர் ஏற்றிருந்தபோதிலும் ரசிகர்களின் மனங்களில் தன் இடத்தை அழுத்தமாகப் பதிய வைத்தவர் ராஜகுமாரி. அக்காலத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி, எம்.எஸ்.சுப்பு...

KARUNANIDHI GAVE NEW TAMIL BLOOD TO TAMIL CINEMA

Image
KARUNANIDHI GAVE NEW TAMIL BLOOD TO TAMIL CINEMA .தீப்பொறி தெறிக்க வசனங்களில் புது ரத்தம் பாய்ச்சிய கருணாநிதி! - ‘பல்கலை’ஞர் கருணாநிதி தமிழ் சினிமாவுக்குப் புதுத் தமிழ் ரத்தம் பாய்ச்சிய பெருமை, கலைஞருக்கு உண்டு. சுவாமி, நாதா, தேக பரிபாலனம், சொப்பனம் என மணிப்பிரவாளம் பேசிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவின் சட்டையைப் பிடித்து உலுக்கி, ‘அம்பாள் எந்தக் காலத்துலடா பேசினாள்?!’ என்றது கலைஞரின் தமிழ். ‘நீதிமன்றம், பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது’ என சிவாஜி கணேசன் முழக்கத்தில் வெளியான ‘பராசக்தி’யின் நீதிமன்றக் காட்சி 65 ஆண்டுகள் கடந்த பிறகும் உயிர்ப்புடன் இருக்கிறது. அந்த நீதிமன்றக் காட்சியில், சிவாஜி ஆவேசமாகப் பேசும்போது ஒரு வழக்குரைஞர் குறுக்குக் கேள்வி கேட்க எழுவார். சிவாஜியோ அவர் பேசுவதற்கு இடம் தராமல், ‘‘உனக்கேன் அவ்வளவு அக்கறை... உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை?’’ என்பார். `என்ன இப்படி ஒரு வழக்குரைஞரைப் பார்த்து இப்படிக் கேட்கிறாரே... கோர்ட்டில் அப்படிக் கேட்க முடியுமா, அது நீதிமன்றத்தை அவமதிப்பது ஆகாதா?' என்றெல்லாம் பல எண்ணங்கள் ஒரு விநாடி நமக்குள் ஓடும். ஆனா...

KARUNANIDHI GAVE LIFE TO TAMIL CINEMA BY TAMIL

Image
KARUNANIDHI GAVE LIFE TO TAMIL CINEMA BY TAMIL எட்வர்டு மைபிரிட்ஸ் 1830-ல் அசைவுகளைப் படமாக்கினார். அதன் தொடர்ச்சியாகப் படச் சுருளை உருவாக்கினார் ஈஸ்ட்மென். படக் கருவியை உண்டாக்கினார் தாமஸ் ஆல்வா எடிசன். இப்படி மூவர் கூடிப் பெற்ற குழந்தையாய் சினிமா பிறந்தபோது உலகம் அறிந்திருக்காது, அத்தனை கலைகளையும் உள்ளிழுக்கப்போகும் ஆக்டோபஸ் கலை அதுவென்று. 1897-ல் சென்னை விக்டோரியா ஹாலில், தமிழர்கள் அதுவரை காணாத ஒரு கருவியினால் ‘அரைவல் ஆஃப் தி டிரெயின்’ (Arrival of the Train) படத்தை எட்வர்ட்ஸ் அறிமுகப்படுத்தியபோது, திகைப்பில் ஆழ்ந்த தமிழர்கள் அறிந்திருக்க மாட்டார்கள், அந்தக் கருவிக்குள் கருவாகித்தான் ஐந்து முதலமைச்சர்கள் தமிழகத்தை ஆளப்போகிறார்கள் என்று. மெளன யுகம் முடிந்து பேசும் படம் பிறந்தபோது தமிழ் சினிமா பாடும் படமாகவே இருந்தது. தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ 1931-ல் வெளிவந்தபோது அதில் 50 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. 1934-ல் வெளிவந்த ‘பவளக்கொடி’யிலும் 50 பாடல்கள். ‘சீதா கல்யாணம்’ படத்தில் பாடல்களின் எண்ணிக்கை 22. 1936-ல் வெளிவந்த ‘நவீன சாரங்கதாரா’வில் 41. 1944-ல் ‘ஹரிதாஸ்’ 20 பா...

MAHENDRAN ,DIRECTOR OF TAMIL CINEMA BORN 1939 JULY 25 -2019 APRIL 2

Image
MAHENDRAN ,DIRECTOR OF TAMIL CINEMA  BORN 1939 JULY 25 -2019 APRIL 2 திரைக்கதை - வசனகர்த்தாவாகவும், பின்னர் டைரக்டராகவும், பின்னளில் நடிகராகவும் உயர்ந்து, "முள்ளும் மலரும்'', "உதிரிப்பூக்கள்'' முதலான அற்புதப் படங்களை உருவாக்கிய மகேந்திரன், எம்.ஜி.ஆர். மூலமாகத் திரைஉலகில் நுழைந்தவராக்கும். இயக்குனர் மகேந்திரனின் சொந்த ஊர் இளையான்குடி. தந்தை ஜோசப் செல்லையா ஆசிரியராகப் பணி புரிந்தவர். தாயார் மனோன்மணி, கம்பவுண்டராக பணி புரிந்தவர். இளையான்குடியில் பள்ளிப்படிப்பை முடித்த மகேந்திரன், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் "இண்டர்மீடியட்'' படித்தார். அதன் பிறகு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் "பி.ஏ'' பொருளாதாரம் படித்தார். அப்பொழுது கையெழுத்து பத்திரிகை ஒன்றை மகேந்திரன் நடத்தினார். தீபாவளி தோறும் அது வெளி வந்தது. கல்லூரி நாடகங்களிலும் அவர் பங்கு கொள்வார். அந்த வகையில் 1958-ம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழா நடந்தது. அந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். விழாவில் எம்.ஜி.ஆர். முன்னிலையில் மகேந்திரன் பேசினார். "நம் கல்லூரியில் பலர...