shenbagavalli Dam
shenbagavalli Dam இன்றைய முல்லைப்பெரியாறு அணைக்காக தமிழகம் மற்றும் கேரளாவும் அடித்துக்கொள்வது உலகம் அறிந்து ஒன்று. ஆனால் இந்த முல்லைப்பெரியாறு அணைக்கே நதிமூலம் சிவகிரி மலைகள் என்றால் பலருக்கும் தெரியாது. தமிழகம், கேரளத்தை ஒன்றிணைக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது சிவகிரி. செண்பகவல்லி அணை... முல்லைப் பெரியாறு அளவுக்குப் பேசப்படாத ஓர் அணையின் கதை! இன்றைய சூழ்நிலையில் தமிழகம் தண்ணீருக்காக பிற மாநிலங்களைச் சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது. காவிரியாக இருந்தாலும் சரி, முல்லைப்பெரியாறு அணையாக இருந்தாலும் சரி பக்கத்து மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் தமிழகத்துக்குள் தண்ணீர் வருவது கடினம்தான். மன்னராட்சி காலத்தில் மக்களுக்காக உருவாக்கப்பட்ட தண்ணீர்த் திட்டங்கள் மக்களாட்சி காலத்தில் தண்ணீரை வைத்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் காலில் மிதிபட்டு வருவது கூடுதல் சோகம். இப்படியான சூழ்நிலையில் அரசுகளின் அலட்சியத்தால் ஒருதலைமுறை மறந்துபோன தென்தமிழகத்தைச் செழிக்க வைத்த ஓர் அணைக்கட்டு மறக்கடிக்கப்பட்ட வரலாற்றைத்தான் பார்க்கப்போகிறோம். தென்தமிழகத...