Tuesday 4 June 2019

shenbagavalli Dam



shenbagavalli Dam



இன்றைய முல்லைப்பெரியாறு அணைக்காக தமிழகம் மற்றும் கேரளாவும் அடித்துக்கொள்வது உலகம் அறிந்து ஒன்று. ஆனால் இந்த முல்லைப்பெரியாறு அணைக்கே நதிமூலம் சிவகிரி மலைகள் என்றால் பலருக்கும் தெரியாது. தமிழகம், கேரளத்தை ஒன்றிணைக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது சிவகிரி.
செண்பகவல்லி அணை... முல்லைப் பெரியாறு அளவுக்குப் பேசப்படாத ஓர் அணையின் கதை!
இன்றைய சூழ்நிலையில் தமிழகம் தண்ணீருக்காக பிற மாநிலங்களைச் சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது. காவிரியாக இருந்தாலும் சரி, முல்லைப்பெரியாறு அணையாக இருந்தாலும் சரி பக்கத்து மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் தமிழகத்துக்குள் தண்ணீர் வருவது கடினம்தான். மன்னராட்சி காலத்தில் மக்களுக்காக உருவாக்கப்பட்ட தண்ணீர்த் திட்டங்கள் மக்களாட்சி காலத்தில் தண்ணீரை வைத்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் காலில் மிதிபட்டு வருவது கூடுதல் சோகம். 

இப்படியான சூழ்நிலையில் அரசுகளின் அலட்சியத்தால் ஒருதலைமுறை மறந்துபோன தென்தமிழகத்தைச் செழிக்க வைத்த ஓர்  அணைக்கட்டு மறக்கடிக்கப்பட்ட வரலாற்றைத்தான் பார்க்கப்போகிறோம். தென்தமிழகத்தின் முக்கிய மாவட்டமான திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூரிலிருந்து 13 கி.மீ தொலைவில் இருந்ததுதான் செண்பகவல்லி தடுப்பணை. 200 வருடங்களுக்கு மேலாக மூன்று மாவட்ட மக்களின் பாசனத்துக்கு, குடிநீருக்கு ஆதாரமாய் இருந்துவந்த இந்தத் தடுப்பணையின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு 35 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இன்னும் அதற்கு ஒரு தீர்வு ஏற்படவில்லை. நீதிமன்றங்கள் உத்தரவிட்டும் தீர்வு என்பது கானல் நீராகிவிட்டது.

செண்பகவல்லி


மன்னர்களின் மக்கள் நேசம்!


இன்றைய முல்லைப்பெரியாறு அணைக்காக தமிழகம் மற்றும் கேரளாவும் அடித்துக்கொள்வது உலகம் அறிந்து ஒன்று. ஆனால் இந்த முல்லைப்பெரியாறு அணைக்கே நதிமூலம் சிவகிரி மலைகள் என்றால் பலருக்கும் தெரியாது. தமிழகம், கேரளத்தை ஒன்றிணைக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது சிவகிரி. அடர் வனப்பகுதியான இங்கு ஆண்டு முழுவதும் வற்றாத நீர் பெருக்கெடுக்கும். கடலில் வீணாகக் கலந்துவந்த இந்த நீரை மக்களுக்குப் பயன்படுத்தும் நோக்கில் 1700 காலவாக்கில் சிவகிரி ஜமீன் அன்றைய திருவிதாங்கூர் கேரளா மன்னரின் உதவியை நாடி ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்துகிறார். அந்த ஒப்பந்தத்தின்படி மேற்கே கன்னிமர் ஆற்றில் ஓடி 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் வழியாக முல்லைப் பெரியாறுக்குச் சென்று கலந்த நீர் கிழக்கு முகமாகத் திருப்பப்பட்டு செண்பகவல்லி கால்வாய் ஏற்படுத்தப்பட்டது. நதிநீர் இணைப்பைப் பற்றி நாம் தற்போது பேசிவரும் நிலையில் அன்றைய காலகட்டத்தில் காட்டுப்பகுதியில் கிடைத்த கல், மண்ணைக் கொண்டே நதிநீரைத் திருப்பிவிட்டு தங்கள் மக்களின் வாழ்வில் செழிப்பை ஏற்படுத்தினார் சிவகிரி ஜமீன். 

200 ஆண்டுக்கால வற்றாத ஜீவநதி!

1773-ம் ஆண்டு ஜமீனின் முயற்சியால் வாசுதேவநல்லூர் தலையணைப் பகுதிக்கு மேற்கே செண்பகவல்லி கால்வாய் 40 சதுர கி.மீ பரப்பளவில் உருவாகியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருவாகும் தேவியாறு, பேச்சிகோவிலாறு, உள்ளாறு, ஈச்சன் ஓடை, சாகநதி, நிச்சநதி உள்ளிட்ட சிற்றாறுகள் இந்த அணைக்குத் தண்ணீரை தாரை வார்த்தது. இந்தக் கால்வாய் தீர்த்தபாறை என்னும் பகுதியில் அமைக்கப்பட்டு அங்கிருந்து மூன்று மாவட்டங்களில் உள்ள 25,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பெற்று வந்தன. 1603 அடி உயரத்திலும் 928 அடி தூரத்திற்கும் சிமென்ட் இல்லாமல் சுண்ணாம்புக் கற்களால் அணையின் சுவர் கட்டப்பட்டது. இதன் நீளம் 2531 அடி. அகலம் 10 அடி. உயரம் 15 அடியாகும். இந்த அணையிலிருந்து அகாலத்தில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம், வெம்பக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் பகுதியிலுள்ள நிலங்கள் பாசன வசதி பெற்றன.

சிவகிரி மலைகள்

செண்பகவல்லி அணையிலிருந்து நீர்வரத்துகள் தீர்த்தப்பாறை என்ற இடத்திற்கு வந்து அங்கிருந்து தலையணை என்ற இடத்தை அடைந்து இரண்டு பிரிவாகப் பிரிகின்றது. ஆண்டு முழுவதும் வற்றாத ஜீவநதியாய்ப் பெருக்கெடுத்து வந்த செண்பகவல்லி அணையில் 1950-ம் ஆண்டு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் தடுப்பணையின் ஒருபகுதியில் உடைப்பு ஏற்படக் கிழக்கு நோக்கிப் பாயவேண்டிய நீர் மேற்கு நோக்கி முல்லைப்பெரியாற்றில் கலந்துவிட்டது. ஆனால் இந்த உடைப்பை அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் முயற்சியில் தமிழக அரசு சீரமைத்தது. ஆனால் இயற்கையின் கோர தாண்டவம் சும்மா இருக்கவில்லை. 1969-ம் ஆண்டே மீண்டும் பெருமழை பெய்ய தடுப்புச் சுவர் மீண்டும் இடிந்துவிட்டது. இதனால் தண்ணீர் வரத்து மறுபடியும் முல்லைப் பெரியாறுக்கே சென்றது. 

தண்ணீர் அரசியல்!

1969-ம் ஆண்டு உடைப்பு ஏற்பட்ட விஷயம் அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தடுப்பணை அமைந்திருக்கும் பகுதி இடுக்கி மாவட்டத்தில் இருந்ததால் கேரள அரசோடு பேச்சுவார்த்தை நடத்தினார் எம்ஜிஆர். அதன்பயனாக கேரள அரசு அணையை மீண்டும் புதுப்பித்து தருவதாக அதற்காக கண்டிஷன் ஒன்றையும் விதித்தது. தடுப்பணையைப் புதுப்பிக்கச் செலவாகும் 10.30 லட்ச ரூபாயில் பாதி பணத்தைத் தமிழக அரசு தர வேண்டும் என்பதுதான் அந்த கண்டிஷன். கேரள அரசின் நிபந்தனைப்படி தமிழக அரசு சார்பில் 5.15 லட்சம் பணமும் கொடுக்கப்பட்டது. ஆனால் கொடுக்கப்பட்ட பணமும், திட்டமும் கிடப்பில் போடப்பட்டன. வருடங்கள் பல மாறின. அரசாங்கங்கள் பல மாறின. ஆனால் இரு மாநில அரசியல்வாதிகளும் இந்தத் தடுப்பணையைச் சரி செய்ய முன்வரவில்லை. கம்யூனிஸ்ட் அரசாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி அணைகட்ட முனைப்பு காட்டவில்லை. அதே  நிலைதான் தமிழகத்திலும், தி.மு.க வந்தாலும், அ.தி.மு.க வந்தாலும் இந்தப் பகுதியில் இந்தப் பிரச்னையைச் சொல்லி வாக்கு கேட்கிறார்களே தவிர அதற்கான தீர்வை ஏற்படுத்த நினைக்கக் கூட இல்லை. 

கடைசியாக 30 வருடங்கள் கழித்து அச்சுதானந்தன் தலைமையிலான கேரள அரசு 2006-ம் ஆண்டு தமிழக அரசுக்கு இந்த விவகாரத்தில் ஒரு கடிதம் அனுப்பியது. அதில், `இது புலிகள் வாழும்பகுதி. இங்கு தடுப்பணை கட்டினால் வனவிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும்" எனக் கூறி தடுப்பணை கட்டக்கொடுத்த தொகையை அரசுக்கே திருப்பி அனுப்பியது. இதே காலகட்டத்தில் சிவகிரி விவசாயிகள் சங்கத்தினர் நீதிமன்ற கதவைத் தட்டவும் தவறவில்லை. விவசாயிகள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் எட்டு வாரகாலத்திற்குள் தடுப்பணை சீரமைக்கும் பணியை முடித்து, நீதிமன்றத்திற்குக் கேரள அரசு அறிக்கை அளிக்க வேண்டும் எனஉத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. 

செண்பகவல்லி அணை

ஆனால், இத்தீர்ப்பை கேரள அரசு மதிக்கவில்லை. தமிழக அரசும் உருப்படியான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது கூடுதல் சோகம். கேரள அரசு இப்போது ஒட்டுமொத்த தடுப்பணைச் சுவரையும் இடித்துவிட்டதாக இந்தப் பகுதி விவசாயிகள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. இதுதொடர்பாக சிவகிரியைச் சேர்ந்த விவசாயி குருசாமி என்பவரிடம் தொடர்புகொண்டு பேசினோம். ``பருவமழையின் போதும், கோடைக்காலத்தின் போதும் பெருக்கெடுத்து வரும் ஆறாக இருந்தது. உடைப்பு பிறகு 35 வருடமாகப் போராடிவிட்டோம். ஆனால் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இதில் என்ன அரசியல் இருக்கிறது என்று தெரியவில்லை. 

இந்த அணையின் உடைப்பு என்பது 70 மீட்டரிலிருந்து 100 மீட்டருக்குள்தான். தற்போதைய காலகட்டத்தில் இதற்கு ஆகும் செலவு ரூ.5 கோடி மட்டுமே. பல கோடி கொடுத்து பாலங்களைக் கட்டும் இந்த அரசாங்கம், இதற்குச் செலவு செய்ய மறுப்பது ஏன் எனத் தெரியவில்லை. அ.தி.மு.க, தி.மு.க என யார் ஆட்சிக்கு வந்தாலும் இதைக் கண்டுகொள்ள மறுக்கின்றனர். உயர் நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தும் அணையை கட்ட கேரள அரசு முன்வரவில்லை. தமிழக அரசும் இதைக் கண்டுகொள்ளவில்லை. செல்வச் செழிப்பாக முப்போகம் விளைந்த எங்கள் பூமியில் இப்போது குடிநீருக்கே பஞ்சம் நிலவிவருகிறது. காலத்தின் கொடுமையா அல்லது அரசாங்கத்தின் அலட்சியமா எனத் தெரியாமல் நாங்கள் பரிதவித்து வருகிறோம். பல கட்ட போராட்டங்களை நடத்திவிட்டோம். இனியாவது அரசாங்கங்கள் முன்வருமா எனத் தெரியவில்லை" என வேதனை தெரிவித்தார். 

கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதி

இந்தத் தடுப்பணையைக் காட்டுக்குள் சென்று பார்வையிட்ட தென்காசி தொகுதியின் முன்னாள் எம்பி லிங்கத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். ``நான் எம்பியான பிறகு செண்பகவல்லி அணைப்பகுதியில் ஏற்பட்ட உடைப்பை நேரடியாகச் சென்று பார்வையிட்டேன். அங்கு எடுத்த வீடியோ காட்சிகள், புகைப்படங்களை கொண்டு போய் அப்போதைய கேரள முதல்வர், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ஆகியோருக்குத் தபால் மூலம் அனுப்பி வைத்தோம். மேலும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரை நேரில் சந்தித்து முறையிட்டேன். கோரிக்கையை ஏற்று கருணாநிதி ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்தார். 

கால்வாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது மலைப்பகுதி. இதைச் சரி செய்ய வேண்டும் என்றால் சாதாரணமாக சுவர் எழுப்பப்படும் செலவை விட 5 மடங்கு அதிக செலவு ஆகும். ஆனால் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதிப்பீட்டின் படி கருணாநிதி 40 லட்ச ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்தார். இதை வைத்து சுவர் எழுப்புவது கடினம். சுவர் எழுப்ப குறைந்தது ரூ.10 கோடிக்கு மேல் செலவு ஆகும். நாங்களும் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்தோம் எனக் காண்பிப்பதற்காக எம்ஜிஆரும், கருணாநிதியும் நடந்துகொண்டனர்.

லிங்கம் எம்.பி

இது ஒருபுறம் இருக்க கேரள அரசிடம் சென்று முறையிட்டால், ``முல்லைப் பெரியாறு பிரச்னையைத் தீர்த்தால் மட்டுமே இந்தப் பிரச்னையைத் தீர்க்கமுடியும்" எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள். செண்பகவல்லி அணையில் ஏற்பட்ட உடைப்பால்தான் முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த உடைப்பை சரி செய்துவிட்டால் பெரியாறு அணையின் நீர்வரத்து குறைந்துவிடும். ஆனால் இந்த அடிப்படையை மறந்துவிட்டு முல்லைப் பெரியாறு அணையைக் காரணியாக வைத்து விளையாடுகிறார்கள். இந்த உடைப்பு சரி செய்யப்பட்டால் தமிழகத்துக்கு 16 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். 

தமிழக நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்துதான் செண்பகவல்லி அணைப் பகுதி நீர் உற்பத்தியாகிறது. ஆனால் கேரளா வழியே நீர் கடந்து வருவதால் உடைப்பைச் சரி செய்ய கேரளாவின் அனுமதி பெறவேண்டியுள்ளது. தமிழகத்தில் இருந்ததுதான் அணைப்பகுதி பக்கம். அதனால் கேரள அரசிடம் அனுமதி பெற்று தமிழக அரசே சரி செய்யலாம். ஆனால் அதற்கு மாறாக நாங்கள் நிதி ஒதுக்கிவிட்டோம் எனக்கூறி தமிழக அரசு ஒதுங்கிக்கொள்கிறது. இதைச் செய்ய அரசு முன்வருமா எனத் தெரியவில்லை. மூன்று மாவட்ட மக்களின் 35 ஆண்டுக்கால சோகம் எப்போது தீரும் எனத் தெரியவில்லை" என்றார்.

மறத்துப் போன மக்கள் நேசம்!

முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை மட்டும் வைத்துக் காய் நகர்த்தும் தமிழக அரசு இப்பிரச்னையை அம்போவென விட்டுவிட்டநிலையில் அரிசி, இறைச்சி, காய்கறி, பால், மணல், செங்கல், மின்சாரம், வாழைப்பழங்கள், சிமென்ட் என அனைத்தையும் தமிழகத்தை நம்பியே வாழ்நாளைக் கழிக்கும் கேரள மாநிலம், வீணாய்க் கடலில் கலக்கும் பல நதிகளின் நீரைத் தமிழகத்துக்கு தராமல் இருப்பது என்ன வகை நியாயமோ?

மன்னர்கள், ஜமீன்தார்கள் காலத்திலிருந்த மக்கள் நேசம், மனித நேயம் போன்றவை மக்களாட்சி காலத்தில் இல்லாமல்





No comments:

Post a Comment