Sunday, 2 June 2019

wincent churchil






சர்ச்சிலிடம், 'இவ்வளவு அருமையாக மேடை பேச்சு, உங்களுக்கு தடையின்றி எப்படி வருகிறது?' என, வினவினார், ஒரு நிருபர். அதற்கு அவர், 'நான் மேடையில் ஏறியதும், முன்வரிசையில் இருப்பவர்களை எல்லாம், மூடர்கள் என்று எண்ணிக் கொள்வேன். அப்படி எண்ணிக் கொள்வதால், என் உள்ளத்திலிருந்து தங்கு தடையின்றி வார்த்தைகள் வெளிப்படும்.
'அதே நேரத்தில், ஆங்காங்கே நின்று, என் சொற்பொழிவுகளை கேட்போரை, அறிவாளியாக எண்ணிக் கொள்வேன். அப்படி எண்ணிக் கொள்வதால், வரலாற்று பிழையின்றி பேச முடிகிறது.
'மொத்தத்தில், மூடர்களும், அறிவாளிகளும் நிறைந்த அவையில் பேசுவதாக, எண்ணிக் கொள்வதால், இரண்டு தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில், என் சொற்பொழிவை அமைத்துக் கொள்கிறேன்...' என்றார்.

No comments:

Post a Comment