அத்திப்பூ athippoo



அத்திப்பூ

கம்பம் அருகே கேகே பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மரத்தில் அத்திப்பூ பூத்துள்ளது.ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அத்தியை மனிதன் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பார்க்க குடியும்.
காணக்கிடைக்காதது அரிதாக கிடைத்தால் அதை ‘அத்திப் பூத்தாற்போல’ என்பார்கள். காரணம், அத்தி மரத்தில் பூ பூப்பதை பார்ப்பது அரிது. கண்டு காய் காய்க்கும், காணாமல் பூ பூக்கும் என்ற விடுகதையே அத்தியினால் தான் உருவானது.அத்தி மரத்தின் இலை, பால், பழம், பிஞ்சு, காய், பட்டை என அனைத்துமே மருந்தாகவோ அல்லது துணை மருந்தாகவோ சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழு அத்தி மரங்கள் உள்ளன. இதில் ஒரு மரத்தில் ஒரு பூ மட்டும் பூத்துள்ளது.

தற்போது அத்திப்பழ சீசன் என்பதால் இங்குள்ள மரங்களில் அத்தி பழுத்துள்ளது. பழுத்த பழங்கள் வீணாக மண்ணில் விழுந்து கிடக்கிறது. இதன் மகத்துவமும், மருத்துவப்பலனும் மக்களுக்கு தெரியாததால் ஒருசிலரைத்தவிற யாரும் இந்த பழங்களை எடுத்துச் செல்வதில்லை.அத்தியின் மகத்துவம் குறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தமருத்துவர் சிராஜூதீன் கூறுகையில், ` அத்திப் பழம் மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகும். குறிப்பாக, சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு, நமைச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது. மேலும் இவை கல்லீரல் மண்ணீரல் அடைப்புகள், வீக்கங்களைப் போக்கும். ஆசனவாய் வெடிப்பு மற்றும் மூலத்திற்கு அருமருந்தாகும். கண்களின் பார்வையைக் கூட்டும் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப் பழத்தில் பெருமளவில் அடங்கியிருக்கின்றன. மற்ற பழங்களைக் காட்டிலும் அத்திப் பழத்தில் தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. இரும்புச் சத்து அத்திப் பழத்தில் அதிகமாக இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தச் சோகை நோய் வராது. இரத்த உற்பத்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றலும் உடலில் அதிகரிக்கும். எனவே அத்திப்பழங்களை வீணாகாமல் பயன்படுத்த வேண்டும்’ என்று கூறினார்.


ஒரு இடத்தில் அத்தி மரம் இருக்கிறதென்றால் அதற்கு கீழே நீரோட்டமும் நன்றாக இருக்கிறது என்பது அறிகுறி. பூமிக்கு அடியில் நீரூற்று, நீரோடை குறைந்த அடிகளில் இருக்கும் என்ற ஐதீகமும் உண்டு. இதனை நாங்கள் பரிசோதித்தும் பார்த்திருக்கிறோம். 

அத்திப் பழத்தில் செய்த சிலவற்றை எல்லைத் தெய்வங்களுக்கு, சக்தி பீடங்கள் என்று சொல்வார்களே காஞ்சி காமாட்சி, ஆதிசங்கரர் செய்த சக்தி 108 சக்தி பீடங்களில் உள்ள அம்பாளுக்கு நெய் வேத்தியமாக அதனை பயன்படுத்துவார்கள். அத்தி பழத்தில் அடை மாதிரி தட்டி அதனை நெய் வேத்தியத்திற்குப் பயன்படுத்துவார்கள். இதுபோன்று அம்பாளுக்கு வைப்பதன் மூலம் நிறைய சக்தி கிடைக்கும் என்பது போன்றும் உண்டு. 
அடுத்து, மதுரையில் கம்ப ராமாயத்ணதை அரங்கேற்றம் செய்தார்களே, அது இந்த அத்தி மரத்தில் வைத்துதான் செய்தது. சரியானதா, தகுதியானதா, தரமானதா இருந்தால் அந்த ஓலைச் சுவடி கட்டு அத்தி மரப் பலகையில் நீடிக்கும், இல்லையென்றால் மூழ்கிவிடும். இதுபோன்ற தெய்வீகச் சக்தி உடையதும் இந்த அத்தி. 

இதில் அத்திப்பூ பூப்பதே தெரியாது. அதனால் அத்தி மரப் பட்டையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் உடம்பு நன்றாக விருத்தியாகும். ரத்த விருத்தியெல்லாம் கொடுக்கும். அத்திக்காய், அத்திக்காய் பிஞ்சு இதையெல்லாம் பொரியல் செய்து சாப்பிட்டால் எல்லா சக்தியும் கிடைக்கும். குறிப்பாக தசை இறுகும். சிலருக்கு தொங்கு தசை இருக்கும். அதெல்லாம் நீங்கி, எலும்பு வலுப்பெறும். 
அதேபோல, அத்தி மரப்பலகையில் உட்கார்ந்து சில செயல்கள் செய்தால் அந்தச் செயல் நீடிக்கும். தோஷங்கள் நீங்குவதற்கு மாட்டுக்கு அகத்திக்கீரை கொடுப்பார்கள். அதைவிட அத்தி இலை கொடுத்தால் மிகவும் விசேஷம். எல்லா தோஷமும் நீங்கும். அத்திப் பழத்தைச் சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் முடி வலுவடைந்து வளர்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும். மூட்டு வலி போன்ற பிரச்சனைகளையும் நீக்கும். விட்டமின் ஏ, பி, சி, டி என்று எல்லாமே இருக்கிறது. அதனால் அத்தி மரம் என்பது அவ்வளவு விசேஷமான மரம். 
அதனால் அத்தி மரத்தை நட்டு, அதைப் பராமரித்து அதில் கிடைக்கக் கூடியதையெல்லாம் எடுத்து சாப்பிட்டு வந்தால் அது நல்லது. தவிர, தோஷ நிவர்த்தியாகவும் அது இருக்கிறது. கணவன், மனைவி பிரிந்தவர்களையும் அது சேர்க்கும். எல்லா வகையிலும் பலமானதாக இருக்கும். இதுபோன்ற அமைப்புகள் இதற்கு உண்டு.

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER