BALA GANGATHARA THILAGAR ,FREEDOM FIGHTER BORN 1856,JULY 23- 1920 AUGUST 1
BALA GANGATHARA THILAGAR ,FREEDOM FIGHTER BORN 1856,JULY 23- 1920 AUGUST 1 லோகமான்ய பாலகங்காதர திலகர் பிறப்பு: ஜூலை 23, 1856 ஒரு விடுதலைப் போராட்ட வீரர், தேசியவாதி மற்றும் சமூக சீர்திருத்த வாதியும் ஆவார். இந்தியாவிற்கு தன்னாட்சி கோரி யவர்களுள் திலகரும் ஒருவர். “சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழங்கியவர். ‘இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை’ என கருதப்படும் பாலகங்காதர திலகரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம். பிறப்பு: ஜூலை 23, 1856 இடம்: ரத்தினகிரி, மகாராஷ்டிரா மாநிலம், இந்தியா பணி: சுதந்திரப் போராட்ட வீரர் இறப்பு: ஆகஸ்ட் 1, 1920 நாட்டுரிமை: இந்தியன் பிறப்பு ‘பால கங்காதர திலகர்’ என அழைக்கப்படும் லோகமான்ய திலகர் அவர்கள், 1856 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் நாள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள “ரத்தினகிரி” என்ற இடத்தில், கங்காதர் ராமச்சந்திரா திலக் என்பவருக்கும், பார்வதி பாய் கங்காதருக்கும் மகனாக மராத்தி சித்பவன் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். திலகரின் தந்தை ஆசிரியராகவும், சமஸ்கிருதத்தில் புலமைப் பெற்றவராகவும...